கள்ளக்காதல் களிப்பு தருமோ!
ஜூன் 28, 2011 at 11:52 மு.பகல் 8 பின்னூட்டங்கள்
- கட்டிய மனைவியுடன்
இல்வாழ்வில் இணைந்து
வாழ்கிறான் பலமணிநேரம்
பாசம் காட்டுவதைக்
காட்டிலும்
வெறுப்பை உமிழ்ந்தபடி!
- கஷ்டத்தையும்,நஷ்டத்தையும்
சேர்ந்து
கணவனோடு தாங்குவதால்
அவளும் அவனிடத்தில்
கடுப்பைக் காட்டிக்கொண்டு!
- பகுதிநேர மனைவியைப்போல்
படுக்கையறை பகிர
தோளில் சாய்ந்து இளைப்பாற
கள்ளக்காதலி வைத்துக் கொண்டு
களிப்பை மட்டும்
அனுபவிக்கின்றான்
இன்னொருவளிடத்தில்!
- கட்டியவளைக் காட்டிலும்
கலையாய் தெரிகின்றாள்
கள்ளக்காதலி..
கஷ்டம் அனுபவிக்காமல்
வெறும் இஷ்டம் மட்டும்
அனுபவிப்பதால்!
பகுதிநேரமாய் வெறும்
மகிழ்ச்சியை
மட்டும் பகிர்வதால்!
- இவனிடத்தில் இன்முகம்
காட்டும் கள்ளக்காதலி
அவள் கணவனிடத்தில்
எரிந்து விழும் முகமாய்!
இருவருமே தன்
இல்வாழ்வில் காட்டும் அன்பை
எவரிடமோ காட்டி
குடும்பத்தை ஏமாற்றிக்கொண்டு!
- கள்ளக்காதலியிடம் காட்டும்
அன்பை
தன் மனைவியிடம்
காட்டிப் பார்த்தால்
அவளும் இன்முகம்தான்!
கள்ளகாதலனிடம் காட்டும்
பிரியம்
கணவனிடம் காட்டிப் பார்த்தால்
அவனும்
நல்லவன்தான்!
- இப்படித்தான் தன் கணவன்
மனைவியிடத்தில்
காட்ட வேண்டிய அன்பை
எங்கோ எவரிடமோ
காட்டிக் கொண்டு
களிப்பென்று எண்ணி
கானல்நீராய் வீணாய்ப் போகிறது
பலரது வாழ்க்கை!
Entry filed under: கவிதைகள். Tags: அடிமை, அரவணைப்பு, இஷ்டம், கள்ளக்காதலன், கள்ளக்காதலி, கவிதை, கஷ்டம், காமக்கொடூரன், நெகிழ்ச்சி, நேசம், படைப்பாளி, படைப்பு, பத்திரிக்கை, மகிழ்ச்சி, மஞ்சள் பத்திரிக்கை.









1.
jsree | 12:18 பிற்பகல் இல் ஜூன் 28, 2011
therinthe seiyum thavarugal…pattal puthi varum vayathana pothu…
2.
படைப்பாளி | 2:45 பிற்பகல் இல் ஜூன் 28, 2011
hmm….
3.
N.Rathna Vel | 8:05 பிற்பகல் இல் ஜூன் 28, 2011
நல்ல கவிதை.
4.
படைப்பாளி | 8:39 பிற்பகல் இல் ஜூன் 28, 2011
நன்றி நண்பரே!!
5.
PALANIAPPAN vivekanandham | 2:25 மு.பகல் இல் ஜூலை 1, 2011
kalakitta balaji
6.
படைப்பாளி | 8:45 மு.பகல் இல் ஜூலை 1, 2011
thank you anna!
7.
வேல் | 9:16 பிற்பகல் இல் ஜூலை 2, 2011
பூவை தேடும் வண்டுகள்
வண்டை தேடும் பூக்கள்
சொல்லும் காரணங்கள்
சுகத்திற்கா – அல்ல
அதையும் தாண்டி………….?
8.
படைப்பாளி | 12:14 பிற்பகல் இல் ஜூலை 4, 2011
ஆமாம் நண்பரே..நன்றி