ஜனங்களின் உணர்வறியா ஜனநாயகம்!
அக்டோபர் 8, 2011 at 10:48 மு.பகல் மறுமொழியவும்
அணு உலை வேண்டாமென்று
ஆதங்கப்படுவோர் ஆயிரமாயிரம் பேர்
அடுத்த தலைமுறை உயிர் காக்க
வேட்கை கொண்டோர் லட்சம் பேர்
சில கோடி செலவுகளுக்காய்
பல கோடி மக்களின்
உயிர் பறித்திட வேண்டாமென
மன்றாடுவோறாய்,மனிதாபிமானிகளாய்
மக்களாய்,உணர்வாளர்களாய்
உண்மை அறிந்தோராய்
உண்ணாவிரதம்,போராட்டம் என
ஊனுடல் தந்து உரிமைக்கேட்போராய்
கோடி பேர்!
பாதுகாக்கப்பட்ட அணுஉலை என்று
ஒற்றை வார்த்தை சொல்லி
தன்னை பாதுகாத்துக் கொள்கிறது
கோடிமனங்களின் குணம் அறியா
ஓர் கொடிய அரசு!
ஜனங்களின் உணர்வறியா
இந்நாட்டை ஜனநாயக நாடு என்பார்
கொடுமையிலும் கொடுமை..!
Entry filed under: குமுறல். Tags: அகோரம், அணு ஆயுதம், அணுஉலை, அணுமின், அறிவியல், அவசரம், ஆபத்து, இலக்கியம், உணர்வு, உண்ணா நோன்பு, உண்ணாவிரதம், ஊனம், ஊர்தி, கடமை, காங்கிரஸ், காந்தி தேசம், கூடங்குளம், கூரம், செய்தி, சோனியா, ஜனநாயகம், நோன்பு, பண்பு, பாசம், போராட்டம், மக்கள், மக்கள் எழுச்சி, மடமை, மன்மோகன்சிங் கொடுமையிலும், மாண்பு, மானம், வெடி விபத்து.









Trackback this post | Subscribe to the comments via RSS Feed