தாய்மையை விட மேன்மை ஆண்மை!
அக்டோபர் 10, 2011 at 11:54 மு.பகல் 1 மறுமொழி
வயிற்றில் கரு சுமந்தவளையோ
கையில் குழந்தை சுமந்தவளையோ
அடிக்கடி காண நேர்கிறது
எனது பேருந்து பயணங்களில்!
சுமையை சுமந்தபடி
கால் இடறி ஏறும் தாய்கள்
தவறி கூட நிற்பதில்லை
தாய்மார்கள் இருக்கை அருகில்!
அப்படியே நின்ற போதும்
மனம் இளகி எழுவதில்லை
மகராசிகள் எவரும்!
ஆணில் ஒருவன்தான்
அப்பொழுதும் எழுகின்றான்
தாயவளுக்கு இருக்கை தர!
தாய்களை விடவும்,தந்தைகளிடமே
நிரம்பி இருக்கிறது
அதிக பட்ச தாய்மை உணர்வு!
Entry filed under: கவிதைகள். Tags: இறக்கம், இலக்கியம், ஒட்டி, கதை, கரு, கவிதை, காவியம், சுகம், சுமை, செயல், செய்தி, தந்தை, தாய், தாய்மை, மனம், மனிதம், மனிதாபிமானம், மிஞ்சும், வயிறு.









1.
Sri | 8:45 மு.பகல் இல் அக்டோபர் 11, 2011
Unmai than enakum andha anubavam undu