என்னைக் கருணைக்கொலை செய்திடுங்கள்!
அக்டோபர் 12, 2011 at 12:30 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்
இருகால்கள் இருக்கின்றன
இருந்தும்
நானாய் நடக்க இயல்வதில்லை!
தடி பிடித்தும் இயலவில்லை
என் தாய்,தந்தையே
கைப்பிடியாய்!
என்னை நிமிர்த்தி வைக்க
முயற்சித்தும்
நான் கூனிக் குறுகி போகின்றேன்!
பெற்றோரை தாங்க
பிள்ளைஎன்பார்
என்னை தாங்கியபடி என் பெற்றோர்!
கூட்டுக்கிளியாய்
என் வாழ்க்கை
சிறகடிக்க முடியாமல்!
வயது முதிர்ந்தும்
குழந்தை குணத்தில்
நான் வாழ்வது ஏனோ புரியவில்லை!
ஆளாய் வளர்ந்து நிற்கின்றேன்
என் மூளை வளர
மறுக்கிறதே!
சிந்திக்க எனக்கு
இயன்றிருந்தால்
என்னை கருவில் நானே கலைத்திருப்பேன்!
என்னைக் கருணைக்கொலை
செய்திருக்கலாம்
என்மேல் கருணையில் பெற்றோர் செய்யலையே!
Entry filed under: கவிதைகள். Tags: அகரம், அன்னை தெரசா, அன்பு, இலக்கியம், கருணை, கருணை இல்லை, கைவிடப்பட்டோர், சமூகம், செய்திடுங்கள மூளை வளர்ச்சி குன்றி, படைப்பாளி, படைப்பு, பாசம், பொறுப்பு, மனிதம், முதியோர், மூளை, வறுமை, வலி, வலிமை, வாழ்க்கை.









1.
nathnaveln | 1:12 பிற்பகல் இல் அக்டோபர் 13, 2011
வேதனை தான்
http://rathnavel-natarajan.blogspot.com/
2.
@muthuvelsivaram | 5:42 பிற்பகல் இல் அக்டோபர் 18, 2011
அருமை !
இவை கவிதை அல்ல –