நான்கு சுவற்றுக்குள் நடக்கிறது போர்!

அக்டோபர் 18, 2011 at 10:39 மு.பகல் 1 மறுமொழி

 

மலரை சுவைக்க வரும்

வண்டுபோல என் வருகை ஏனோ

சாதுவாயிருக்கிறது!

பின் பூனையிடம் மாட்டிய

எலிபோல விளையாட்டு

வேகமெடுக்கிறது!

புலியென மாறி பாய்ந்து

வெறிகொண்டு மானை சிராய்த்து

கடித்து வைக்கிறேன்

கொஞ்சம் மூர்க்கமாய்!

யானை பலமும்,குதிரை வேகமும் கொண்டு

உன்னை தாக்கி மகிழ்கிறேன்

கொடூரத்தின் உச்சமாய்!

நீ தாக்குதலை எதிர்கொண்டு

தயங்காமல் நிற்கிறாய்

நிராயுதபாணியாய் நின்றபடி

இன்னும் தாக்க சொல்கிறாய்!

சாது போல இருந்தவள் என்னை

மோத சொல்லி கேட்கிறாய்!

தாக்குதலை தொடுத்து விட்டு

குருதிவடிய நான் குப்புற விழுகிறேன்

பூவென இருந்து கொண்டு

நீ புலியை சாய்த்து  வெல்கிறாய்!

என்ன மாயம் செய்தாயோ

நான்கு சுவற்றுக்குள்

நடக்கும் போரில்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

நீயிட்ட கோலம்! எச்சில் சோறு தின்றவள்!

1 மறுமொழி Add your own

  • 1. வேல்முருகன்  |  8:49 பிற்பகல் இல் அக்டோபர் 18, 2011

    கலவியில்
    களறி பயிற்சி
    கன்னி செய்தால்
    காளை என்செய்வான்

    பதில்

மறுமொழி இடுக

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்றுக )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்றுக )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்றுக )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 132,809 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers