Posts filed under ‘என் கலைப்பயணம்’
நிர்வாணம் – 15
2003 ஆம் ஆண்டு சென்னை ஓவியக்கல்லூரியில் நான் இளங்கலை இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது,கலைத்துறைக்கு நிர்வாணம் தேவையா?தேவையில்லையா?என்பது குறித்து கலைத் துறையினரிடமும் மற்றும் இதரத் துறையினரிடம் ஓர் கருத்துக்கணிப்பு கேட்டிருந்தேன்.அதுக் குறித்த அவர்களின் கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.
தீர்வு:
ஆய்ந்ததில் அறிந்தது:
- ஓவியத்தில் நிர்வாணம் என்பது நிலைக்க வேண்டியதே!
அது தவறான சர்ச்சைக்கு தள்ளப்பட வேண்டியதில்லை.
- நிர்வாண சிற்பங்களாயினும் ,நிச்சயம் சிந்திக்க வைத்துள்ளன.
மாறாக மக்களை,நிந்திக்க வைக்கவில்லை.
- கதைக்கும்,காட்சியமைப்புகளுக்கும் ஏற்ப
நிர்வாணம் சினிமாவிற்கு கட்டாயம்.
- விபரீதமில்லை,
விளம்பரங்களில் நிர்வாணம்.
- புகைப்படம் ஆபாசம் மறைத்து
அழகியலை வெளிக்கொணர்கிறது.
- மருத்துவத்தில் நிர்வாணத் தேவை,
புரிந்துவிட்டதால் புறக்கணிப் பாரில்லை.
நிர்வாணம் இத்தோடு நிறைந்தது..
நிர்வாணம்-13
கல்லூரி நான்காமாண்டு :
முந்தைய பதிவு:நிர்வாணம்-12
சமுதாய அக்கறையில் (எய்ட்ஸ்,காண்டம்ஸ் விளம்பரம்) பல் துறையில் நிர்வாணம் பயன்படுத்தப் பட்டாலும்,சமுதாய சீரழிவிற்க்கும்,பின்னடைவிற்கும் காரணமான சில துறைகளில் பயன்படுத்தப் படுவதையும் நாம் எண்ணிப்பார்ப்பது,இத்தருணத்தில் அவசியம்.
நீலப்படம் (blue film ) மற்றும் சில கேவலமான நிகழ்வுகளை உள்ளடக்கிய ஒளிநாடாக்களும் புத்தகங்கள் போன்றவையும் ஆங்காங்கே உலாவர செய்கின்றன.
இதன் மூலக்காரணமாகக் கூட பல இடங்களில்,பல்வேறு ரீதிகளில்,பலாத்காரங்களும்,காம இச்சைகளும் அரங்கேறியிருக்கின்றன.
இதை அன்றாட செய்திகளையும்,நிகழ்வுகளாகவும் கண்ணுற்ற சமுதாய மக்கள் நிர்வாணத்தை முழுமையாக ஓர் சிறையிலிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.
அதில் விளையும் நன்மைகளைவிட தீமைகளே அவர்களின் மனதில் “விஸ்வரூபம்” பெறுகிறது.
இந்த இடத்தில் ஓர் ரோஜாவின் அழகை ரசிப்பதை விட அதன் முள்ளின் ஆதிக்கமே ஆராயப் படுகிறது.
ஓர் படைப்பாளி என்கிற ரீதியில் என் கருத்தை சரியான இடத்தில் உதிர்த்தல் என்பது சாலச் சிறந்தது.
கலைத்துறை அல்லது இதரத் துறை,நிர்வாணத்தை ஆதாரமாகக் கொண்ட அனைத்து துறையும் ஆராயாமல் தருகின்ற அனைத்து நிர்வாணங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள் எனக்கூற நான் முன்வரவில்லை.
சரியான இடத்தில்,தேவையான நேரங்களில் தெளிவு வேண்டும்.அதன் ஆதாரம் ஆராயப் பட வேண்டும்.அத்தியாவாசியம் தெளியப்பட வேண்டும்.
நிர்வாணம் நீளும்..
நிர்வாணம்-12
முந்தைய பதிவு: http://wp.me/pFau0-Je
கல்லூரி நான்காமாண்டு :
அப்போவெல்லாம்..தேவையின் அவசியம் கருதி
தினமும் கிறுக்கல்..நிர்வாண ஓவியங்கள்..anatomy study ..
முதலிலே… எங்கள் வீட்டிலே கூட விபரீதமாய் விளைந்தவர்கள்..
அறியவைத்ததும் புரிந்தவர்களாயினர்..
அப்போ..ஏற்ப்பட்ட எண்ணம்..நித்தம்..நித்தம்..திண்ணமாய்..
தோன்றி..தோன்றி..என்னுள் ஊன்றி..
ஆம்… இதை பற்றி தெரியாதவர்களுக்கும்…
பொதுமக்களுக்கும்..
புரிய வைத்தால்..அறிதவர்களாகிவிடுவர்…
அதன் நோக்கமே..நிர்வாணம் எனை ஆராய வைத்தது.
ஏன்?அது என்ன அசிங்கமான விசயமா??நம் உடலை நாம் நிர்வாணக் கோலத்தில் பார்ப்பதில்லையா??
அம்மணமாய்..எத்தனை முறை அலைந்திருக்கிறோம்..மழலைப் பருவத்தில்..
பிறகேன்??அது ஓர் அன்னியப்பட்டதாக,ஒதுக்கப்பட்ட விசயமாக,தேவையற்றதைப் போல,சமுதாயத்தால் நிர்மாணிக்கப் பட வேண்டும்.
அந்தரங்கத்தில் அவசியமில்லையா??மருத்துவத்திற்கு ஆதாரமில்லையா??
புற உடலைக்காணல் என்பது சபிக்கப்பட்ட விசயமா??
கலை ஆர்வலரும்,முன் கூறியுள்ள துறையினரும்,நிர்வாணம் தேவை என்று கூறுவதில் ஆச்சர்யமில்லை..
ஏனெனில்,
அத்துறையின் ஆதார விசயங்களை அது அடக்கி வைத்திருக்கிறது..
அப்போ..கலைத்துறையினருக்காக எங்களை நாங்கள் மாற்றிக் கொள்ள வேண்டுமா?
உங்களின் தேவைக்காக…மற்றவர்களின் மனதிலே சலனத்தை எற்ப்படுத்து கிறீர்களா?
என்று கூட ஆங்காங்கே பொதுமக்களிடம் கேள்விக்கணைகள் வருகின்றன.
ஆமாம்…பொதுமக்களுக்கும்,நிர்வாணத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கூட கேட்கத் தோன்றும்.
ஏன் இல்லை..ஒரு ஓவியம் அல்லது திரைப் படம் எதுவாயினும்,ஆதாரமான பொதுமக்களை நோக்கியே புறப்படுகின்றன.
நிர்வாணம் பொதுமக்களைப் பொறுத்தவரை திணிக்கப்பட்ட விஷயமாகக் கூட தீர்மானிக்கப் படுகிறது.
அதன் காரணமும் ஆராயப்பட வேண்டும்.
நிர்வாணம் நீடிக்கும்..
நிர்வாணம்-11
முந்தைய பதிவு: http://wp.me/pFau0-H6
கல்லூரி மூன்றாமாண்டு:
இந்த ஆண்டு..அடிக்கடி அவ்வகுப்பு (நிர்வாணம்) எங்களை ஆட்க்கொண்டிருந்தது..
அந்தப் பாடம் எல்லோருக்கும் பரிச்சயப்பட்டு போயிருந்தது.
மாணவ மாணவிகளுக்கு முன்பிருந்த பதற்றம் இப்போ இல்லை,
எல்லோரும் நிர்வாணத்தை பார்த்து பழகிப் போனவர்களாயிருந்தனர்.
மச்சி..இன்னைக்கி நியூட் (NUDE ) கிளாஸ் டா..
அந்த வார்த்தை எமக்கு பதட்டத்தை தரவில்லை..
பழைய ஆர்வத்தை தூண்டவில்லை..
அப்படியா மச்சி..சரி நீ கிளாஸ் கு போடா என்று சொல்லி,
கல்லூரி குட்டி சுவர்களில் குடியிருக்க தொடங்கி இருந்தேன்.
அம்மண பெண்ணைப் பார்க்க அலைப் பாய்ந்த மனது
நிர்வாணப் பெண்ணைப் பார்க்க ஏங்கிய வயதுக்கு..
இப்போ..என்ன ஆனதோ தெரியவில்லை.
ஞானம் வந்து விட்டதோ!!
ஆமாம் போதி மரம் இல்லாதக் குறையை
நிர்வாண வகுப்பு நிவர்த்தி செய்திருந்தது.
ஆபாசம்,அழகியல்,காமம்,கலை
என்பனவெல்லாம் பார்க்கும் பார்வையில் என்பதை,பகுத்துணர பழக்கப் படுத்தியிருந்தது.
முடிந்தது மூன்றாண்டு..
(நான்காம் ஆண்டில் சந்திக்கிறேன்..)
நிர்வாணம்-10
கல்லூரி- இரண்டாம் ஆண்டு:
ஸ்க்ரீன் மூடப்பட்டு..அறை சாத்தப்பட்டிருக்கிறது.
மச்சி..இன்னைக்கி நியூட் (NUDE ) கிளாஸ் டா..சக தோழனின் குரல்.
பழக்கப்பட்ட வார்த்தை.எப்போ வருமென்று ஏங்க வைத்த பாடம்..
அவள் வந்து அமர்ந்தாள்..முழு அம்மணம்..
மின்விளக்கு,தன் மோகப்பார்வையால் அவளை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
சுற்றி வகுப்பு தோஸ்துகள்..பசங்க(மச்சி..ஸ் )..பொண்ணுங்க(மச்சினி..ஸ்)..
கூச்சமிகுதியில் பெண்கள்..ஆர்வமிகுதியில் ஆண்கள்..
எல்லோர் பார்வையும்..எங்கோ..எதையோ உற்று நோக்குகிறது…
அனைவரும் வார்த்தைகள் வற்றிய நிலையில் காணப்பட்டனர்.
20 பேர் ஒன்றாய் கூடி ஓர் பெண்ணை அம்மணமாய் பார்க்கும் அனுபவம் அன்று..
அதுவும்..ஆண்களும்..பெண்களும் ஒன்றாய் வேறு..
உற்சாகம் ஓர் புறமென்றாலும்..மறுபுறம் பதற்றம்..
அம்மணத்தின் அழகியல்,அனாடமி அவசியம் பற்றி ஆசிரியரின் அறிமுக வுரை..
அற்புதமான தெளிவுரை..
வரையச்சொன்னார்கள்..MODEL STUDY-யாம் .
பக்குவப்படாத மனசு..பார்த்தறியாத கண்கள்..சற்று உடல் வேர்த்தது.
இருந்தும்..கொஞ்சம்..கொஞ்சமாய்…மனதை தேற்றி..தேற்றி…கோடுகளிட்டேன்.
அம்மணம் அழகாய் என் ஓவியத் தாளில் உலாவர..
கலைத்தாய்…என்னுள் கண் விழித்தாள்..காமம் கலைந்தாள்..
அம்மணம்..அடையாளம் மாறி..நிர்வாணம் என்னுள் நிறைந்தது.
கரைசேர்கிறேன்..என்னுள் கறைப் படிந்த எண்ணங்களைக் கைவிட்டு..
மூன்றமாண்டில் சந்திப்போம்…




















