Posts filed under ‘கடி’
இரவு முழுதும் உனது நினைவு!
என் ஏனைய
இரவுகள்
உன்னுடன்தான்
கழிகின்றன!
முத்தமிடுவதில்
மட்டும்
மிச்சம் வைப்பதே
இல்லை நீ!
என் செவியருகில்
வந்து
சின்ன சின்ன
ரகசியங்களை
சொல்லி வைக்கிறாய்
எனக்கு
தெரியாத மொழியில்!
உன்னை தட்டி
கொடுப்பதில்
ஏதோ
தனிப்பிரியம்
வருகிறது எனக்கு!
இப்போதெல்லாம்
கனவுகள் வருவதில்லை
சதா இரவு முழுதும்
உன்
நினைவுகள்தான்!
ஒவ்வொரு இரவும்
உன் நினைவால்
செத்து செத்து
பிழைக்கிறேன்!
எனது தூங்கா
இரவுகள் எல்லாம்
உன் பெயரையே
சொல்லி தொலைக்கின்றன
சனியன் பிடித்த கொசுவே!
அ.தி.மு.க வை ஆதரித்து ரஜினி பிரச்சாரம்!
நாளை முதல் அ.இ.அ.தி.மு க விற்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று ,இன்று திடீர் அறிவிப்பு செய்திருக்கிறார் ரஜினி.இது தி.மு.க கூட்டணியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது..நேற்று சோ மூலம் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட ரகசிய சந்திப்பின் ஊடாக இந்த முடிவு ரஜினியால் அறிவிக்கப் பட்டிருக்கிறது!
மேற்சொன்னபடி எதுவும் நடக்கவில்லை…APRIL FOOL ஆகிடீங்களா..ஹீ..ஹீ
பொறாமையில் கொசுக்கள்
- உம் வீட்டிற்கு-வாவென்று
எம்மை அழைத்தாய்
நானும் வந்தேன்.
வரவேற்க காத்திருந்தனவோ
உம் வீட்டுக் கொசுக்கள்
உம்மை விட்டு விட்டு
எம்மை முத்தமிட்டன.
நீ சொன்னாய்
பாரடா!எம் வீட்டுக்
கொசுக்களுக்கு
கூட-எம்மைவிட உம்மேல்
எவ்வளவு
பாசம் என்று!!
- பதிலுக்கு பாசம் காட்ட..
எம் வீட்டிற்கு-வாடிஎன்று
உம்மை அழைத்தேன்.
எம் வீட்டுக்
கொசுக்கள்-உம்மை
முத்தமிடாமல்
கடித்து வைத்தன.
என்னை முத்தமிட
தனக்கு போட்டியாய்
இன்னொருத்தி
வந்து விட்டாள்
என்று பொறாமை
கொண்டனவோ
எம் வீட்டுக்கொசுக்கள்!!
கடிக்கின்ற கொசுக்கள் ளெல்லாம்
பெண் கொசுக்கலாமே!!!
தங்lish தமிழ்க்காதல்.
நான் i love you சொன்னபோது,
i too love u என்றாள்.
நான் i hug u என்றபோது,
i too hug u என்றாள்.
நான் i miss u என்றபோதும்,
i too miss u என்றாள்..
நான் i kiss u என்றபோதுமட்டும்
ஏன்?i kill u என்றாள்.
நான் கேட்டேன் ஏனடி killளுவாய் என்று.
அறியாதவனே!உன்னை கொல்லுவேன்
என தமிழில் கூவியது குயில்.
ஏதாவது எழுதனும்?பைத்தியம் பிடிக்குது..
ஏதாவது எழுதனும்?
பைத்தியம் பிடிக்குது..
என்ன எழுதலாம்?
எப்படி எழுதலாம்?
யாரிடம் கேட்டு?
எதைப்பற்றி?
நல்லதா,கெட்டதா?
கேட்டதா?கேக்காததா?
படிச்சத எழுதலாமா?
இல்ல.அவர் சொன்னத..
கற்பனையா
கதையா
ஒரு கடுதாசி
கிரைம்..கொலை..கொள்ளை
காமம்..காதல்..
வறுமை,பணம்
பசி,வயிதெரிச்சல்..
பாராட்டு..பகைமை
நட்பு,நடிப்பு
சினிமா,கலை
ஏதாவது எழுதனும்?
பைத்தியம் பிடிக்குது..
என்ன எழுதலாம்?
(ரிப்பீட்டு..ரிப்பீட்டு)
(முட்டிமோதி,மூளையை கசக்கி,அப்புறம் அயர்ன் பண்ணி யோசிச்சது..)












