Posts filed under ‘தகவல்’

இது எங்க ஏரியா..உள்ள வராத..ஆக்கிரமிப்பு பெண்கள்

நியூஸ் பேப்பர்ல வந்துச்சே தெரியாதா?நியூஸ் ல கூட சொன்னாங்களாம்?என்று மக்கள் சொல்லும் வரை அந்த செய்தி எனக்கு தெரிந்திருக்கவில்லை..ஏனோ அந்த செய்தியை நானும் தவற விட்டிருந்தேன்.இன்றைக்கு பேருந்தில் ஒருவருக்கொருவர்  பேசிக்கொள்ளவும்தான் எனக்குப் புரிந்தது..இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட செய்தி என்பது.


வழக்கமாக இதுநாள் வரை பேருந்தில்,பெண்களின் இருக்கைகளாக  சொல்லப்பட்ட இடக்கை பக்கம் அதாவது படிக்கட்டுப் பக்கம் இன்று முதல் ஆண்களுக்கானதாம்.
ஆண்கள் இதுநாள்வரைப் பயன்படுத்திய வலக்கைப் பக்க இருக்கைகள் இனி பெண்களுக்கானதாம்.ஏனெனில் நம்ம படிக்கட்டு பிரயாணிகளால் பெண்களுக்கு ஏகப் பிரச்சினையாம்.அதைப் போக்க வந்துள்ள புது திட்டம் இது என்றும் பேசிக்கொண்டார்கள்.
இந்த திட்டம் பற்றி அறியாமல் ஏறின நம்ம ஆண்கள் கூட்டம் பழக்க தோசத்துல பழைய சீட்டைப் பிடிக்க,பெண்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு அவர்களுக்கு இடம் கொடுத்து நகர்ந்தார்கள்.ஆனாப் பாருங்க பழக்க தோசத்துல ஏறி முந்தைய பெண்களின் பக்க,இந்நாள் ஆண்களின் இருக்கையை ஆக்ரமித்த பெண்கள் மட்டும் ஆண்களுக்கு அந்த இருக்கையை விட்டுக்கொடுக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள்.(அவங்க எதுல விட்டுக் கொடுக்குறாங்க..இதுல மட்டும் நாம எதிர்ப் பார்க்க..பாவம்  ஆண் ஜீவிகள்..)ஒரு முதியவர் உணர்ச்சி வசப் பட்டு நீங்க உங்க சைடு கு போக வேண்டியதுதானே என்றபோதும்,ஏன் நீங்க ஆம்பளைதானே நின்னுட்டு வரக்கூடாதா?என்கிறது பெண்கள் பக்கத்தின்குரல்.
நீங்க ஆம்பளைதானே னு சொன்ன உடனே அதுக்கு இழுக்கு வரக்கூடாதுன்னு நம்ம ஆண் வர்க்கமும் கப் சிப்.ஆம்பளையா இருந்தா வயசான ஆளா இருந்தாலும் அவங்களுக்கு ஒண்ணுதான்.நின்னுட்டு வரட்டும்.பெண்கள் என்றால் குமரியா இருந்தாலும் உக்காந்துட்டு வரணும்.நல்லா இருக்குப்பா பொண்ணுங்களோட நியாயம்..

அதுனால இன்னைல இருந்து பஸ்ல சீட் பிடிக்கிற ஆம்பளைங்க  உசாரா இருங்கப்பா..இல்ல நீங்க கஷ்டப்பட்டு சீட் புடிச்சி ஜாலியா கைவீசிட்டு வர பொண்ணுங்களுக்கு விட்டுக்கொடுக்கணும்..ஹா.ஹா..

அக்டோபர் 22, 2010 at 12:17 பிற்பகல் 13 பின்னூட்டங்கள்

குறும்பட இயக்குனரா நீங்கள்?உங்களுக்கான களம் இதோ!!

நாம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும்.அந்த திறமை நமக்குள்ளேயே முடங்கிப் போகின்ற போது அது அடையாளமிழந்து,அர்த்தமற்று போகிறது..அந்த திறமையை நம் தகுதியான,தேவையான நேரங்களில்,தேவையான இடங்களில் அரங்கேற்றம் செய்கின்ற போது அதற்கான அர்த்தமும்,நமக்கான அடையாளமும் கிடைக்கிறது..

நம் திறமைகளை அரங்கேற்ற மிகவும் முக்கியமானது அதற்கான களம்..சரியானக் காலத்தில்,சரியானக் களத்தில் நாம் கால் பதிக்கின்ற போது நம் கனவு நனவாகும்.

ஆம்.இதோ உங்களுக்கானக் களம்… குறும்பட இயக்குனர்களுக்கான தளம்.சிறந்த குறும்படங்களுக்கான தேர்வு மற்றும் திரையிடல்..பரிசளித்தல்..

http://nathvig.com/Contest.aspx

யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்..உடனே உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.உங்கள் படங்களை அனுப்புங்கள். NATHVIG MEDIA குறும்பட இயக்குனர்களுக்கான ஓர் தளத்தை அறிமுகம் செய்திருக்கிறது..

உங்கள் குறும்படத்தை திரையிட உங்களுக்கான மேடை காத்திருக்கிறது.உங்கள் சிரங்களில் தவள வெற்றி மகுடம் எதிர்ப்பார்த்திருக்கிறது!!

செப்டம்பர் 16, 2010 at 11:02 மு.பகல் 5 பின்னூட்டங்கள்

“கடவுள் முரளி வாழ்க”

நேற்று நடிகர் முரளி அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி அனைவரும் அறிந்தது..பல வெற்றிப்படங்களையும்,உருக்கமான,உணர்வு மிக்க காதல் மற்றும் குடும்ப பாங்கான கதைகளில் தனக்கான தனி முத்திரையை,தடத்தை பதித்தவர்..காதலுடன்,காலேஜ் ஸ்டூடண்டாகவே பல காலம் பவனி வந்தவர்…அவர் நடுத்தர வயதில் மரணமடைந்த செய்தி,அவர் ரசிகர்கள் மட்டுமின்றி நம்மை எல்லாம் கலங்க வைத்தது..

“கடவுள் முரளி வாழ்க”

-சிறு வயதில் சென்னை முழுவதும் சுவர்களில் நான் கண்ட வாசகம்.”

இப்படியோர் செய்தியை என் நண்பர் அருண் நேற்று பேஸ் புக்கில் பகிர்ந்திருந்தார்…அவரை மட்டுமல்ல,இந்த வாசகம் என்னையும் பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்து சென்றது..ஏன் சென்னை வாசிகள் பலர் பின்னோக்கி யோசித்திருக்ககூடும்.

மறந்திருக்க இயலாது.அப்படி ஓர் மறக்க இயலாத வாசகம்..

சென்னையின் சுவர்களை கட்சி விளம்பரங்கள் ஆக்ரமித்திருந்ததோ இல்லையோ “கடவுள் முரளி” ஆக்ரமித்திருந்தார்..எங்கெங்கு காணினும்,எப்பக்கம் நோக்கினும் கரிக்கட்டையால் கிறுக்கப்பட்ட எழுத்துக்கள் வெற்று சுவற்றை நிரப்பியிருக்கும்…ஆமாம் யார் அந்த கடவுள் முரளி??வேறு யார் நம்ம இதயம் நாயகன் தான்..அவர் படங்களிலே தன் இதயத்தை தொலைத்த எவனோ ஒருவனின் கிறுக்கல்கள் தான் அவை..

நிச்சயம் அவர் மீது கொண்ட பைத்தியத்தில் அவன் பைத்தியமாகி இருக்கக் கூடும்..எப்போ எழுதுகிறான்,யார் எழுதினார்கள் என்பதை அறியாமலே காலையில் நாம் திரும்புகிற பக்கமெல்லாம் அந்த வாசகம் தென்படக் கூடும்..

எந்த நடிகருக்கும் கிடைக்காத ஓர் அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருக்கிறது..அதன் வெளிப்பாடுதான் அது…சமீப காலமாய் அந்த வாசகம் நம் கண்களில் தென்படுவதில்லை…ஒருவேளை அவர் தன் கடவுளுக்கு முன்பே இறந்திருக்கக்கூடும்..இல்லையேல் வேறோர் ஊரில் அவர் இருக்கக்கூடும்..ஒருவேளை எங்கேனும் இருப்பின்..அங்கேயும் கடவுள் முரளி சுவர்களில் வாழக்கூடும்..

எது..எப்படியோ..தன் நடிப்பால் தமிழ் திரையுலகில் தனக்கான ஓர் இடத்தை தக்க வைத்திருந்த நடிகர் முரளியின் நினைவுகள் மக்கள் மனதில் இறவாமல் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை….

செப்டம்பர் 9, 2010 at 12:23 பிற்பகல் 13 பின்னூட்டங்கள்

பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

என் பிரெண்ட் பையன் நல்லா படிக்கிறான் ஐ.ஏ.எஸ் எக்ஸாம் எழுதப் போறானாம்.

நீயும் இருக்கியே ..மக்கு..என்ன படிச்சி என்ன கிழிக்கப் போறியோ தெரியல என்று ,தன் பிள்ளைகள் மீது ஆதங்கப் படும் பெற்றோர்கள் ஏனைய இல்லங்களில் இன்னும் இருக்கதான் செய்கிறார்கள்..

படிப்பை விட, கடின உழைப்பு,விடா முயற்சியே ஒருவரை வெற்றியடைய செய்யும்.ஏன் பத்தாவது படித்திருந்தால் கூட போதும், ஐ.ஏ.எஸ் ஆக முடியும், என்று நிரூபித்திருக்கிறார் ஒருவர்.அவர்தான் முனுசாமி.

ஒன்று UPSC தேர்வெழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது ,மற்றொன்று பதவி உயர்வு மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது.பதவி உயர்வு மூலம் ,இந்த ஆண்டு தமிழகத்தில் 19 பேர் ஐ.ஏ.எஸ்.  அதிகாரியாகி உள்ளனர்.அதில் முனுசாமியும் ஒருவர்.

1973ம் ஆண்டு குரூப் 4 தேர்வு மூலம் அரசுப் பணியில் சேர்ந்த முனுசாமி பள்ளிப்பட்டு தாலுகாவில்,18 வயதில் இளநிலை உதவியாளராக பணியை தொடங்கி உள்ளார். பின்னர் வட்டாட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் என பதவி உயர்வுகளை பெற்றுள்ளார்..

அரசுத்துறையில் பல்வேறு பணிகளில் 37 ஆண்டு கால நீண்ட அனுபவம் பெற்று,பணியில் சிறப்பாக செயல்பட்டதுமே, அவருக்கு ஐ.ஏ.எஸ். தகுதியை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது..

ஆகஸ்ட் 7, 2010 at 10:24 மு.பகல் 11 பின்னூட்டங்கள்

விளம்பர யுத்தம்

எந்தப் பொருளை விற்பதானாலும் விளம்பரம் அவசியமாகிறது.. பல விளம்பரங்கள் சிந்தனைகளில்,கருத்தாங்கங்களில் தனித்து நிற்கின்றன..அந்தப் பொருள் விளம்பரம் எப்பவுமே சூப்பரா தான்பா இருக்கும் என நம்மை சொல்ல வைக்கின்றன.சில நிறுவனங்களின் விளம்பரங்கள்,அதனுடைய போட்டி நிறுவனங்களோடு வேண்டுமென்றே போட்டிபோடுவது போலவும்,சண்டையிடுவது போலவும் அமைக்கப் பெற்றிருக்கின்றன.அதற்கு ஓர் ஆதாரம் தான் புகழ்பெற்ற “கோலா வார்” கோக கோலா நிறுவனமும், பெப்சி நிறுவனமும் போட்ட விளம்பர சண்டை.அது போல நீயா?நானா?போட்டியிலிருக்கும் சில விளம்பரங்கள் உங்கள் பார்வைக்கு…

—————————————————————————————————————————

Nikon v/s Lumix

nikon:ஆவியைக் கூட என்னால் படம் பிடிக்க முடியும் என்கிறது

lumix:உங்களால் காண இயலாதக் கருவையும் நான் கண்டு  பிடிப்பேன் என்கிறது

—————————————————————————————————————————-

Coca Cola v/s Pepsi

1.நீ செகண்ட் ப்ளோர் தான்,நான் எல்லா இடத்துலையும் என்கிறது பெப்சி

2.ஸ்ட்ரா கூட போக மறுக்கிறதாம் கோகா கோல டின்னில்..என்ன கொடுமை !

—————————————————————————————————————————-

BMW v/s Audi v/s Subaru

BMW ஆரம்பித்து வைக்க,AUDI பதில் சொல்ல,SUBARU வும் தன் பங்குக்கு பேசி வைக்கிறது.

ஆகஸ்ட் 5, 2010 at 11:58 மு.பகல் 1 மறுமொழி

Older Posts




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 137,572 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers