Posts filed under ‘ராம்ஸ்..மாம்ஸ்..’

டைரக்டர் சங்கருக்கு வந்த வாந்திபேதி

மாம்சு..அதிர்வு இணையதளத்துல  ஒரு மேட்டர் படிச்சேன்யா ..நம்ம டைரக்டர் சங்கரு இனிமே சினிமா தயாரிக்க மாட்டேன்னு முடிவெடுத்து இருப்பதா தகவல்..சமீபத்துல அவர் தயாரிப்புல வந்த ரெண்டு மூணுப் படம் எதிர்ப் பார்த்த அளவுக்கு ஓடாததால, எதிர்பாராம முடிவு எடுத்துட்டார் போல.

யோவ் ராம்சு..இத்தனைக்கும் அவர் தயாரிச்சப் படங்களெல்லாம் லோ பட்ஜெட் தான??ரொம்ப பீல் பண்றாரு….டைரக்சன் பண்ண மாட்டேன்னு முடிவெடுக்க சொல்லேன் பாப்போம்…அது அடுத்தவன் காசு..இப்போ சொந்தக் காசு..அவர் டைரக்சன் பண்ற படங்களுக்கு மட்டும் தயாரிப்பாளர் கிட்ட இவ்ளோ பணம் கொடுங்க,அவ்ளோ கொடுங்கன்னு கேக்கத் தெரியுதுல்ல…சும்மா இருக்க ரோட்டுக்கு பெயிண்ட் அடிப்பாரு..தொப்பைல பெயிண்ட் அடிச்சி படம் வரைவாறு..கேட்டா பிரமாண்டம் குவாறு…அப்போ இருக்கனும்யா பீலிங்கு…வாந்தியும்,பேதியும் அவனவனுக்கு வந்தா தான்யா தெரியுது.

ஜூலை 4, 2010 at 9:32 மு.பகல் 6 பின்னூட்டங்கள்

நான் கெளம்புறேன்..நீயும் வறியா?அ.தி.மு.க சாமிகள்

யோவ் ராம்சு..காலையில் ஆபீஸ்  வரும்போது கடைக்கு முன்னால தொங்குற  செய்தித்தாள் முகப்பு பார்த்தேன்யா..
ஜெயலலிதா கொடநாடு போறாங்களாமே.
சென்னைல வெயில் ஓவர்னாலும் வெளியப் போறாங்கன்னு  நினைக்க வாய்ப்பிருக்கு…ஆனா இங்கயும் இப்போ கிளைமேட் நல்லாதானே  இருக்கு..அப்போ எதுக்கு அம்மா கொட நாடு போறாங்க??

என்னய்யா  மாம்சு.. நீ கொஞ்சம் கூட வெவரம் புரியாத ஆளா இருக்கியேய்யா..
சென்னைல கிளைமேட் நல்லாத்தான்யா இருக்கு..ஆனா அவங்க கட்சியில ரொம்ப வெயில் அடிக்குதாம்யா..
அன்னைக்குப் பார்த்தா கரூர் சின்னச்சாமி,இன்னைக்குப்  பார்த்தா ஈரோடு முத்துசாமி  இன்னும் தொடர்ந்து எத்தனை அ.தி.மு.க ஆசாமிகள் தி.மு.க வில் இணையப்போகிறார்கள் என்று ஆருடம் பார்த்துட்டு அவங்களும் இணைஞ்சிடுவாங்கன்னு  நினைகிறேன் ராம்சு.
சரியா மாம்சு..நான் கிளம்புறேன்
என்ன தனியா உட்டுட்டு… எங்கையா கிளம்புற ?
தி.மு.க வுல இணையத்தான்…ஹி..ஹி

ஜூன் 12, 2010 at 12:48 பிற்பகல் மறுமொழியவும்

இட ஒதுக்கீடு…ஹி..ஹி..

மாம்சு… இன்னைக்கு மேட்டரு கேளுய்யா… எங்க ஆபீஸ் மீட்டிங்க்ல என்னை நிக்க வச்சு அசிங்க படுத்திட்டான்யா எங்க மேனேஜரு..

ராம்சு என்னய்யா ஆச்சு அந்த அளவுக்கு…

முழுக்கை சட்டை போடாம அரைக்கை சட்டை போட்டுட்டனாம்…ரெண்டு பாக்கெட் வச்சு… இதுதான் பார்மலானு கேட்டு கேவலப்படுதிட்டான்.
நாம முக்கா பேன்ட் போட்டு ஆபீஸ் போக முடியுமா மாம்சு..? எங்க ஆபீஸ் வர பொண்ணுங்க ஸ்லீவ்லெஸ் போட்டுக்கிட்டு… முழு பேண்ட முக்காவா மடிச்சு விட்டு வருதுங்க…பொண்ணுங்க பாடு ஜாலியா… கேட்க ஆளு இல்ல…

அப்ப ராம்சு… ஏன்யா பொண்ணுங்க 33% இட ஒதுக்கீடு கேட்குதுங்க…
ஆம்பளைங்க தான்யா கேட்கணும்…

யோவ் மாம்சு… அது வேற மேட்டர்யா.. போற போக்குல நீ என்னை மகளிர் சங்கத்துல மாட்டி விட்டுடுவ போல…ஹி.. ஹீ…

அக்டோபர் 23, 2009 at 9:31 பிற்பகல் 2 பின்னூட்டங்கள்

தமிழன் என்று சொல்லடா

மாம்சு..தமிழர்கள் மாதிரி உணர்வாளர்கள பாக்க முடியாது தெரியுமா??
சும்மாவா சொன்னாங்க..தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா னு..

     கலக்குற ராம்சு..உண்மையாவே தமிழ் நாட்டு தமிழர்கள அடிச்சுக்கவே முடியாது..

      ஏய் மாம்சு..என்ன ரொம்ப புகழாதய்யா..எனக்கு வெக்கம் வெக்கமா வருது!!!

     மேட்டர் கேளுயா..நெறைய வெக்கம் வரும்..தமிழ்நாட்டு தமிழன கண்டுபுடிக்கணும்னா…சப்ப மேட்டர்..

மத்த ஊருகாரன்கிட்ட இல்ல.நம்மாளு கிட்டயே ஆங்கிலம் பேசி அலட்டல் விடுறானா..அவன் கண்டிப்பா நம்மாளு தான்யா..நம்மாளுங்க ரொம்ப உணர்வாளன்களாச்சே!!!

அக்டோபர் 2, 2009 at 6:48 பிற்பகல் மறுமொழியவும்

தூசு துடைக்கவா துப்பட்டா?

        ஏன்யா மாம்சு …பாத்தியாயா??? இந்த பொண்ணு புள்ளைங்க ,துப்பட்டாவ மார்புல போடாம கழுத்துலையே போட்டுட்டு சுத்துதுங்க.அப்புறம் பசங்க மொறச்சி பாக்குறான்,ஈவ்டீசிங் னு பிராது வேற..

      ஆமாம் ராம்ஸ்..ஆம்பிளைங்க மட்டும் துண்டு தோள்ல தான்யா போடுறீங்க..

      அப்ப மாம்ஸ்..துப்பட்டா துண்டு மாதிரி தூசு துடைக்க,மூஞ்சி தொடைக்க தான்னு சொல்லு..அப்புறம் எதுக்குய்யா கையில வேற கைக்குட்ட!!!  

செப்டம்பர் 30, 2009 at 8:38 பிற்பகல் மறுமொழியவும்




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 91 other followers

ஆக்கங்கள்

அண்மைய இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at http://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 137,572 hits

Follow

Get every new post delivered to your Inbox.

Join 91 other followers