என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – II
திசெம்பர் 2, 2009 at 11:11 பிப 2 பின்னூட்டங்கள்
- எத்தனைமுறை… என் வீட்டின்
வெள்ளைச் சுவர்கள் என் கரிக்கட்டையின்
கற்பழிப்பில் கற்பிழந்திருக்கின்றன.
ஆந்த கரிக்கட்டையின் கற்ப்பழிப்பில்தான்
என்னுள் இக்கலைஞன் கருவுற்றிருக்க வேண்டும்.
- மாட்டுப் பொங்கலென்றால்-மட்டற்ற
மகிழ்ச்சி-கொம்புக்கு பெயிண்ட் அடிப்பதில்
கலர் பூசுவதில் அத்தனை கவணப்பட்டிருக்கிறேன்.
இப்படி ஆடு, மாடென்று அத்தனை
இயற்கையும் எனைக் கலைஞனாக்க கவனமெடுத்த
போதிலும்…
- என் முன்மாதிரி (ரோல் மாடல்)
என் கலைஞன் கதாபாத்திரத்தின் முக்கிய
உச்சநட்சத்திரம்-என் தந்தை
எல்லோரும் தந்தையை அப்பா என்பார்கள்
எனக்கோ… என் தந்தை ஐயாவாகவே
அறிமுகம்…
அதனாலயோ. என்னவோ… எனக்கு
ஆசானாகவும் அவர்
அறிவுக்கு தந்தை என்பார்- என்
ஆளுமைக்கும் அவரே!
அவரின் விடுமுறைக்காலங்கள் அனைத்தும்
என்னுள் ஓவியன் உருப்பெறவே
உரமாகியிருக்கின்றன.
- மேக நகர்வுகளில்… அத்தனை ஓவியங்களை
பரிசளித்திருக்கிறார்.
அந்த மேகம் பார்-அதனில்
என்ன உருவம் தெரிகிறது என்பார்.
நான் சொல்வேன் மயிலென்று
காற்றுவாக்கில் மயில் குயிலாகியிருக்கும்…
அப்போ…நானறியவில்லை. அனிமேஷனுக்கும்
இதுதான் அடித்தளமென்று…
இப்படி…
மேக நகர்வுகளில்…
மின்னல் வெளிச்சத்தில்
அதிகாலை சூரிய பிறப்பில்
மாலை சூரிய ஓய்வில்
வெளிச்சத்தில் விழுந்த நிழல்களில்
மரக்கிளைகளில்
நிலவில் பாட்டி வடை சுட்ட பால்ய நினைவுகளில்.
மாறி, மாறி தெரிந்த தசாவதாரங்களை
தரிசித்துத்தான் இவன் தவப்பயன் அடைந்திருக்க
வேண்டும்.
இவனுள் ஓவியதவம் மோட்சமடைந்திருக்க
வேண்டும்.
- எனக்கு உருக்கொடுத்ததல்லாமல்
என்னுள் ஓவியனுக்கு,
கரு கொடுத்த பெருமையும்
என் தந்தையையே சாரும்.
- அப்போ… அவர் துணிக்கடையில்
தொழிலாளி… நன்றாக நினைவிருக்கிறது.
டிபார்ட்மெண்ட் சூட்டிங்… சர்ட்டிங்
என்பார்.
வேட்டிக்கிடையிலும்
ரெடிமேட் சட்டைகளுக்கிடையிலும் வெள்ளை
அட்டை வரும். ஒவ்வொன்றாய் பொறுக்கி
ஒன்றாய் சேர்த்து… எனக்கு கொடுத்து
நான் பெறுகின்ற பெருமகிழ்ச்சியில்
அகமகிழ்ச்சி அடைவார் அவர்.
என்னை பொறுத்தவரை
நான் அப்போது செய்வது கிறுக்கல்… என் தந்தைக்கோ…
பெருமதிப்பு ஓவியம்…
என் கிறுக்கல்களுக்கு அவர் எடுத்த
சிரத்தை அவரை கலைஞனாய் காட்டும்..
கற்பனைத்திறத்தோடு இந்த ஓவியத்தை…
இப்படித்தான் ஒட்ட வேண்டுமென்று வெட்டி
ஒட்டுவார்…
அவரின் கைங்கர்யத்தால் வெறும்
கிறுக்கல், உயிரோவியம் ஆனதை கண்டு
அகமிகழ்ந்திருக்கிறேன்.
(நிறப்பிரிகை வளரும்..)
Entry filed under: என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும், என் கலைப்பயணம்.
2 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
புகழேந்தி | 2:58 பிப இல் பிப்ரவரி 27, 2011
தம்பி, உன்னிடம் திறமைகள் ஒளிந்திருக்கின்றன அவைகளை வெளிக்கொண்டுவா! இந்த உலகம் உன்னைக்கண்டு வியக்கும்!
2.
படைப்பாளி | 3:05 பிப இல் பிப்ரவரி 27, 2011
மிக்க நன்றி அண்ணா…