கடவுளை ஞாபகப்படுத்திய, அவள் அழைப்பு

திசெம்பர் 28, 2009 at 12:04 முப 1 மறுமொழி


27 ம் தேடி பதிவு..

இன்றைய பதிவு…ஓய்வில்லா ஓர் நிகழ்வு..

காலை ஆரம்பித்த பயணம்..இரவு வரை தொடர்ந்தது.

காலை பயணம்..மவுண்ட் ரோடு,LIC என மெட்ராஸ் இன் பழைய முகவரிகளில் மூழ்கியது.

மாலை தி.நகர்,ரங்கநாதன் ஸ்ட்ரீட் என சென்னையின் இன்றைய விலாசத்தில் இணைந்தது.

பழைய முகவரியில் என்னை மூழ்கடிக்கும் நினைவுகள் ஏதும் இல்லை.

புதிய விலாசமோ எனக்கான விவரணைகள்,நிறைய சிவாரசியங்களை சுமந்திருந்தது.

தி.நகர் என்றாலே என் காதல் நினைவுகள் என்னை திக்கு முக்காட வைக்கும்..அவளோடு அலைந்த அக்கால நினைவுகள் தான் என்னில் அசைந்தாடும்.உள்ளே புகுந்து இசைபாடும்.

ஓர் முறை என்னோடு அருகாமையில்,ஓர் கடையருகில் வந்தவளை, அவள் அத்தை பார்த்துவிட்டு,யாரோ ஓர் பையனோடு போனாயே,யாரவன் என்று வினவியதாய் அவள் சொன்னது இன்னும் நினைவிருக்கிறது.

அந்த கடையை நினைவுபடுத்தி இன்று திரும்பி பார்க்கிறேன்..என்னே ஆச்சர்யம்..அவள் பெயரை அக்கடை சுமந்திருந்தது..

வானுக்கும் பூமிக்குமாய் வாய் விட்டு கத்தி அவள் பெயரை சொல்ல தோன்றியது…

அவளோடு அலைந்து திரிந்த அத்தனை கடைகளுக்கும் அடுத்தடுத்து செல்லநேர்ந்தது..அவள் நினைவுகளூடே!!

தெற்று பல் சிரிப்போடும்,குண்டுவிழி பார்வையோடும் தோள்பற்றி தோழமையோடும் அவள் நினைவுகள் என்னை துரத்திக்கொண்டே இருக்கின்றன…

அத்தருணத்தில் தான் என் தோழி ஒருத்தி அனுப்பிய அந்த குறுந்தகவல் என்னை குறுக்கிடுகிறது..எடுத்துப்பார்க்கிறேன்..இந்த ஆண்டின் இறுதி ஞாயிறு இதுதான்..

இந்த ஞாயிறில் உனக்கு குறுந்தகவல் அனுப்புவதில் நான் அகம் மகிழ்கிறேன் என்றிருந்தது.

அப்பொழுதும் அவள் வந்து நிற்கிறாள் நினைவில்..இந்நேரம் என் இன்பாக்ஸ்சை இம்சித்திருப்பாளே.என்ன செய்கிறாள்..என்னை மறந்திருப்பாளோ..காலச்சக்கரத்தில்..என எண்ணிய வேளையில் அலைபேசியில் அழைப்பாய் வந்தாள்.இந்த ஆண்டின் இறுதி ஞாயிறு இதுதான்..உன்னை அழைக்காமல்  இருப்பேனாஎன்னவனே!!என்றாள்.

இன்னொருவனுக்கு மனைவியான இத்தருணத்திலும்…

கடவுள் மீது நம்பிக்கையில்லா எனக்கு,அவள் அழைப்பு அப்பப்போ ஆச்சர்யமாய் கடவுளை ஞாபகப்படுத்தும்..

Entry filed under: குறிப்புகள். Tags: , , , , , , , , , , .

கண்ணீர் அஞ்சலி.! ஆண் அழகாகும் தருணம்

1 பின்னூட்டம் Add your own

  • 1. anu  |  11:48 பிப இல் ஜனவரி 2, 2010

    hey piran manai nokathey nu eluthitu
    ipo ithu enna story
    “last sunday” nu
    still u love her?

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: