அம்புலிமாமாவும்,ஆயிரத்தில் ஒருவனும்..

ஜனவரி 23, 2010 at 12:39 முப 4 பின்னூட்டங்கள்


தாம் சின்னவயதில், படித்த அம்புலிமாமா கதை ஞாபகத்தில் வந்திருக்கும் போலிருக்கிறது செல்வ ராகவனுக்கு..

ஏதோ புதுமை செய்கிறேன் பேர்வழினு பார்வையாளனை நன்கு கொலை செய்திருக்கிறார்..

முழுநீள காமெடி படம்..கார்த்திக்கு பதில் வடிவேலுவை நடிக்க வைத்திருக்கலாம் படம் சூப்பர்,டூப்பர் ஹிட்டாகி இருக்கும்.படத்தோட பேரையும் “அம்புலிமாமாவும்,ஆயிரத்தில் ஒருவனும்” னு வச்சிருக்கலாம்..ஏழ்மை யானவனாக காட்ட கார்த்திக் முகத்திற்கு கருப்பு சாயம் பூச வேண்டிய செலவும் மிச்சமாகி இருக்கும்.ஆரம்ப காட்சியில் மட்டும் கருப்பு கலர் பூசிய கார்த்தி முகம் பின் வரும் காட்சிகளில் நீல சாயம் வெளுத்து போச்சு டும்,டும்,டும் னு ஆச்சு..

ஆரம்ப காட்சிகளில் பில்ட் அப் ஆகா வரும் ரீமாசென் ,வர வர குத்தாட்டம் போடுவது,குடித்துவிட்டு ஆடுவது என்பது சரியான சினிமாத்தனம்.

ஆர்க்கியாலஜி,ஹாலிவுட் படங்களில் வரும்,CBI,CID மாதிரி உருமாறியிருக்கிறது.உடையில் மட்டும் ஆண்ட்ரியாவும்,ரீமாவும் ஜேம்ஸ்பான்ட் கதாநாயகியாகி இருக்கிறார்கள்.

படத்தின் ஆராச்சியில் அகப்படும் காட்சிகளில் ஆண்ட்ரியா,ரீமாவின் ஒரே உடை அழுக்காகாமல் பளபளப்பாக தெரிவதை எதாவது துணி விளம்பர நிறுவனம் தனது விளம்பரத்திற்கு உபயோகிக்கலாம்..”உருண்டாலும்,பிரன்டாலும் அழுக்காகாதது” என கேப்சன் போடலாம்.

SURF EXCEL தான் பாவம்…இவர்களின் உடையை பார்த்தால் கறை நல்லது என விளம்பரம் போட முடியாது.

சீரியஸ் ஆனா இடங்களில் எல்லாம் சீரியஸ் இல்லாத டையலாக்குகள்..

ஏழு கடல்,ஏழு மலை தாண்டி ஓர் கிளியிடம் ராஜாவின் உயிர் இருந்ததாய் என் பாட்டி சொன்ன பழைய படம் ஞாபகத்தில் வந்தது…சர்ப்பம்,புதைகுழி,பசி,நிழல் என உருவம் மட்டுமே மாறி புதுமை கண்டிருக்கிறது. கில்மா காட்சிகள்  செல்வராகவனுக்கு நன்றாக கைகூடி வருகிறது..

செல்வராகவன் ஆங்கில படக்காட்சிகளை சேர்த்து கோப்பி அடிப்பதை விட்டு,நாலு விட்டாலாச்சார்யா படம் பார்த்திருந்தால் சொல்லவந்ததையாவது தெளிவு படுத்தி இருக்கலாம்..

சோழன் வரலாறு பற்றி என்ன தெரிந்து,புரிந்து எடுத்திருக்கிறார் தெரியவில்லை..சோழன் வரலாறு எவ்வளவு மேன்மை பொருந்தியது..சோழன் மனித ரத்தத்தில் கம்பளம் விரித்து நடக்கும் வெறியனாய்,காமவெறியனாய் காட்டி இருப்பது தமிழன் பெருமையை  தலை குனிய வைக்கும் காட்சிகள்..சோழன் வரலாற்றை புகழ்வதை போல இகழப் படுவதை எந்த தமிழனும் பொறுத்து கொள்ள மாட்டான்..

கடல்புறா,பொன்னியின் செல்வன் போன்ற கதைகளை மாற்றி புதிய கதை சொல்ல முயர்ச்சிதிருக்கிறார் போலும்..ஆராய்ச்சி வேறு செய்து கதை செய்தார்களாம்..சோழனை பற்றி அப்படி என்ன ஆராய்ச்சி செய்தாய் தெரியவில்லை,பாண்டியன் விரட்டினான்,இவன் ஓடினான்,அவன் வாரிசு அதை தேடி செல்கிறது…சோழன் அவ்வளவு காலமாக அங்கேயே லிங்கத்திற்கு மணியாட்டி கொண்டிருக்கிறான் என்று காட்சி,சோழ நாய் என்று வேறு வசனம்..கிராபிக்ஸ் காட்சிகளுக்காக பஞ்ச பூத பில்ட் அப் வேறு…ஐயோ..ஐயோ..தாங்க முடியலடா சாமி உங்க ஆராய்ச்சி.

புதிய தமிழாராய்ச்சி வேறு நடந்திருக்கிறது…ஆண்ட்ரியாவும்,ரீமாசென்னும் ஆங்கிலத்தில் திட்டி கொள்ளும் காட்சியை நன்கு ஆங்கிலம் பேச தெரிந்த பெண்கள் பார்த்தால் நிச்சயம் சிரித்து விடுவார்கள்.

மியூசிக் டைரக்டர் கு ஆஸ்கார் அவார்ட் தரலாம்..அவ்வளவு கிளப்பி இருக்காரு..பட்டய..ஹி..ஹீ..

ஆர்ட் டைரக்டர் வாழ்ந்திருக்கிறார்…ஒவ்வொரு காட்சியிலும் உழைப்பு தெரிகிறது..பழங்கால சிற்ப வேலைபாடுகளில்,காயாத களிமண் தெரிந்தாலும்,வேலைப்பாடுகளை பார்த்து சபாஷ் போடலாம்.

கடைசி காட்சியில் ஈழத்தமிழர்களை நினைவுபடுத்துவது போல் காட்சியமைத்து  அனுதாபம் பெற முயற்சித்திருப்பது புரிகிறது..

என்ன செய்வது தமிழனை தரம் தாழ்த்தினாலும்,நாங்கள் கைதட்டி ரசிக்கும் தன்மானமுள்ள தமிழர்கள் ஆச்சே..

நீங்க அரைக்கலாம் எங்கள் தலையில் மிளகாய்..பொறுத்துக்கொள்வோம்.

செல்வராகவன் படமாய் பண்ணாமல்,அம்புலிமாமாவில் தொடராய் எழுதி இருந்தால்…நிறைய பிரதிகள் விற்று harry potter புத்தகத்தின் வசூல் சாதனையை மிஞ்சி இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

(இரண்டாவது பார்ட் வேற எடுக்கப் போறியாமே செல்வா..எங்க நெலமைய கொஞ்சம் நெனச்சு பாருப்பா..ப்ளீஸ்..!!!)

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , .

என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – IV சுமைதாங்கி

4 பின்னூட்டங்கள் Add your own

 • 1. chandran  |  2:34 முப இல் ஜனவரி 23, 2010

  -என்ன செய்வது தமிழனை தரம் தாழ்த்தினாலும்,நாங்கள் கைதட்டி ரசிக்கும் தனமானமுள்ள தமிழர்கள் ஆச்சே.-

  உண்மை தான்.

  மறுமொழி
 • 2. Eternal Sunshine  |  5:49 பிப இல் ஜனவரி 25, 2010

  If is your REVIEW is intented to be just for fun, then ignore my comment otherwise go through..
  [………………………………………………………..

  All histories has its own dark side.. Never expect our ancestors to be perfect being.. obviously no one is… (so there could be some mistakes in the movies)

  Keep your mind open and encourage innovations. Don’t get caught in shit old Indian cliche. Moreover while writing a review, try to come up with constructive criticism.

  I am writing this comment; not just because i liked the movie, but to encourage the dawn of new trend.

  ………………………………………………………….]

  மறுமொழி
  • 3. படைப்பாளி  |  10:08 பிப இல் ஜனவரி 25, 2010

   இன்றைய இளம் தலைமுறையில் பலருக்கு ,சோழன்,பாண்டியன் உண்மை வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..பல வரலாறுகளை, படம் பார்த்தே இளைய சமுதாயம் தெரிந்து வைத்திருக்கிறது..எடுத்துக்காட்டிற்கு வீர பாண்டிய கட்டபொம்மன்…அந்த வீரம் செறிந்த சிவாஜியின் உருவம் பார்த்து..கட்டபொம்மன் இப்படிதான் இருந்திருப்பார் என எண்ணுவோர் உண்டு…அது வீரம் செறிந்த தோற்றம்..சோழன்,பாண்டியன் உண்மை வரலாறு தெரியாமல் தன கதைக்கு அவர்களை அசிங்கப்படுத்துவது ,தமிழ் வரலாற்றிக்கு இழைக்கும் பழி.சோழன்,பாண்டியன் என குறிப்பிடாமல் பண்ணியிருந்தால் இந்த விமர்சனம் எழுத வேண்டிய அவசியம் வந்திருக்காது..செல்வராகவன் தான் படத்தில் சொன்னது கற்பனை என அவரே பேட்டியில் சொன்னதை தங்களுக்கு நினைவு கூற விரும்புகிறேன்..
   புதுமை செய்யவும்,சினிமாவை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லவும் வரலாற்றை தவறாக கற்ப்பிக்க வேண்டாம்..இல்லை உண்மை வரலாற்றை உள்ளபடி சொல்லி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வது நலம்..ஆரோக்கியமாக இருக்கும்.

   மறுமொழி
 • 4. vani  |  12:48 பிப இல் ஜனவரி 27, 2010

  hi, i agree with ur comments. namma munnorgalai ethukaka mosamana udharanama kattanum, endha oru mosamana tholil seira pengalaga irunthalum,avvaloda kulandhaiku ava oru nalla vazhikatiyaga than iruppal. indha kaala young generation-ku namma munnorkalai patri nalla vidhama sollalananalum,indha mathiri keduthiruka venam.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 199,930 hits

%d bloggers like this: