அவள் பெயர் தமிழரசி..அவர் பெயர் மீரா கதிரவன்

மார்ச் 7, 2010 at 1:41 பிப 2 பின்னூட்டங்கள்



அவள் பெயர் தமிழரசி..நல்ல இயக்குனர்.. அவர் பெயர் மீரா கதிரவன் ..என்று சொல்ல வைத்திருக்கிறது..அருமையான கதை..தோல்பாவைக் கலை..

தொலைந்துபோன கலையான தோல் பாவையை மையம்கொண்டு ஆரம்பமாகும் கதைக்களம்..காதல் களம்..ஆரம்பக்காட்சியிலேயே முத்தையாவின் காமிராவும்,மூர்த்தியின் கலை இயக்கமும் போட்டி போடுகின்றன…நேர்த்தி..ஆஹா சொல்லவைக்கிற ரகம்..காதுகளை உடைக்கும் விஜய் ஆண்ட்டன்யின் இசை முதல் முறையாக செவிகளை வருடுகிறது இப்படத்தில்..படம் வாகை சூடியிருக்கிறது.

பலவருடங்களாக தாம் தொலைத்த காதலை,காதலியை தேடும் நாயகனாக ஜெய்.ஒன்றிப்போகும் கதாப்பாத்திரம்.

கதாநாயகி நந்தகி விருது பெறவேண்டிய நடிப்பு..கதாபாத்திரத்தோடு நேர்த்தியாக பொருந்தி போகிறார்.

கதாநாயகனின் சிறுவயது ஞாபகங்கள்,சிறுவர்,சிறுமியராக நடித்துள்ள பாத்திரங்கள் ரசிக்கவும்,அவர்களின் நகைசுவை உணர்வு நம்மை ருசிக்கவும் வைக்கின்றன..குஜூ ,குஜூ கூட்ஸ் வண்டி பாடல் நம்மையும் சேர்த்து சிறு வயதுக்கு அழைத்து செல்கிறது..

மண் வாசனை மாறாத பேச்சுவழக்கு….ஓர் இடத்தில் ஜெய் சைக்கிளில் வரும் போது பனை மரத்தில் கல் இறக்க ஏறும் ஆட்களை காமிரா படபிடிக்கும்…வாவ் சொல்ல வைத்த காட்சி..இடங்களின் தேர்வும் அருமை..

ஓவியர் வீரசந்தானம் அடடா பிச்சு உதறியிருக்கிறார் ஏன்று தான் சொல்ல வேண்டும்…மேளம் அடித்துக் கொண்டு ஊரில் அரிசி சேகரிக்க செல்லும் காட்சியில்,ஜெய் வீட்டில் உணவு உண்ணும் காட்சியில்,தொல்பாவைக்கு கலர் பூசும் காட்சியில் என அவரது பாடி லாங்வேஜ் அந்த பாவைக் கூத்துக்காரனை நம் பார்வைக்குள் கொண்டு வருகிறது..

தியோடர் பாஸ்கர் அருமை..புனேவில் காட்சியாக்கபட்டுள்ள விதம்..அந்த பாடல்..பாடலுக்கு இடையிலேயே ஜெய் தேடுவது..கடைசியில் காதலியை கண்டுபிடிக்கும் காட்சியில்..ஒரு பாடலிலேயே கதை அருமையாய் சொல்லபடுகிறது. நாயகியின் மேக் அப் ..நடிப்பு,நளினம் இப்படி +++++++ களை நிறைய அடுக்கி கொண்டே போகலாம்.

இரண்டாம் பாதியில் ஒரு தொய்வு தெரிவது மாதிரி இருந்தது..சிறு குறைதான்…மீண்டும் நேர்த்தி செய்கிறார் மீரா..இன்னும்கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டி இருக்கலாம்.

தோல்பாவையில் ஆரம்பமான டைட்டில் தோல்பாவையிலேயே சுபம் சொல்கிறது….அனைவரும் பார்க்கவேன்டியப் படம் .

மண்ணையும்,பாரம்பரியத்தையும் மீட்டெடுத்த மீரா கதிரவன் அமீர்,சசி,வரிசையில் வருவார் என்பது நிச்சயம்…

Advertisements

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , , .

முதல் காதல் என் கலைத்தேடலும் கவின் கலைக்கல்லூரியும் – VII

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. nanrasitha  |  5:38 பிப இல் மார்ச் 8, 2010

    விமர்சனம் அருமை

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  9:59 முப இல் மார்ச் 9, 2010

      நன்றி நண்பரே!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: