அடுத்த காதல் ஆரம்பம்

ஏப்ரல் 1, 2010 at 12:15 பிப 4 பின்னூட்டங்கள்


மார்ச் 30 குறிப்பு:

இரவு 10.30 யின் இருட்டு முகத்தில்

நிசப்தம் கழுவி

தொலைதூர வெளிச்ச புள்ளியாய்

இருட்டை எரித்து

சேலம் எக்ஸ்பிரஸ்

ஆத்தூரை நோக்கி அடியெடுத்து வைக்கிறது.

எதிர்பார்த்து காத்திருந்த

கண்கள்..

வண்டியை கண்டவுடன்

எதிர்பாராது ஏறின கால்கள்

அனிச்சை செயல்.

S1 15 எனக்கான இடம்.

எனக்காக காத்துக்கிடக்கிறது

இருக்கை.

எனது சமீபத்திய ஆண்டு

பயணங்களை..அலைபேசியில்

எதாவது

குயில் கூவி ஆரம்பித்து வைக்கும்.

எனது பயண நேரங்களை

பாட்டுப் பாடி ரீங்காரமிட்டுக் கொண்டே

இருக்கும்.

இன்றைய பயணம்..

குயில் கூவல் குறைவுதான்..

என் குயில்களுக்கு திருமணம் ஆகி இருந்தது

அதுவும் காரணம்..இடையிடையே

அலைத்தடை வேறு.

அப்போவும் உரிமையான ஓர் குயில் மட்டும்

பாடல் இசைந்தது.

வாடைகாற்று இல்லை..

ஆனால்..பழைய காதல் வலி

வாட்டிக் கொண்டிருந்தது.

நெடுந்தூரப் பயணத்தில்

நிலவென்னை காதலிப்பதாய் சொன்னாள்..

வலிக்கு மருந்திட்டாள்..

வழியெங்கும் உடன் வந்திட்டாள்..

ஜன்னலோர இருக்கைக்கு..ஒளிவீசி

சமிக்ஞை செய்துகொண்டிருந்தாள்

-நிலாப்பெண்.

அடுத்த காதல் ஆரம்பம்..மண்ணிலில்லை

விண்ணில்..

இயற்கை மீது எனக்குள்ள மோகம்

தீராத காதல்.

நிலாப்பெண்

விடைபெறும் போது

விடிய ஆரம்பித்திருந்தது.

தகவல் பலகை

தாம்பரம் வந்துவிட்டதாய் தகவல்

சொல்கிறது..

இயந்திர வாழ்க்கைக்கு இறங்கி ஓடுகிறேன்..

மீண்டும் ஊருக்கு வரும் போது

உன்னை சந்திக்கிறேன்..ஜன்னலோர இருக்கையில்

உனக்காய் உயிர்த்திருப்பேன்..

அடுத்தப் பயணம்

அதுவரை காத்திரு..

சந்திக்கிறேன் நிலவே!!

விடைபெறுகிறோம் இருவரும்..

Advertisements

Entry filed under: குறிப்புகள். Tags: , , , , , , , , , , , , .

மிச்சம் வைக்கிறாய் காதல் கவிதை

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. Vimal  |  1:38 பிப இல் ஏப்ரல் 1, 2010

    Good one friend !!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:07 பிப இல் ஏப்ரல் 1, 2010

      thank you friend.

      மறுமொழி
  • 3. Sri  |  2:25 பிப இல் ஏப்ரல் 1, 2010

    Ethanai kuyilgal?

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  3:13 பிப இல் ஏப்ரல் 1, 2010

      சில காக்கைகளும் குயிலாகி இருக்கின்றன…காதலால்..ஹ..ஹா

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: