பேச்சிலர் ரூம்

மே 17, 2010 at 5:17 பிப 2 பின்னூட்டங்கள்


அழுக்கு மூட்டை அலமாரிகள்

அகற்றபடாத குப்பைகள்

சின்னஞ்சிறு துண்டுகளாய்

சிகரட் கழிவுகள்

ஆக்சிஜன்னுக்கு பதிலாய்

ஆல்கஹால் சுவாசம்

காயும் ஜட்டியுடன்

காவல் நிற்கும் கதவு

பரிமாற்றத்திற்கு உள்ளாகும்

பருவக்கதைகள்

அரட்டை ஏராளம்

சண்டைகள் தாராளம்

அடுக்கப்பட்ட சீடி களில்

அதிகப் பட்சமாய் அடல்ட் ஒன்லி கள்

எண்ணை தேய்த்த தலைகளின்

வண்ணம் தோய்ந்த சுவர்கள்

தன் வாழ்நாளை இழந்து

வாழ்ந்து கொண்டிருக்கும் சுவற்று சுண்ணாம்பு

உறவு சேர்தலில்

உறவு பிரிதலில் உற்சாக பானம்

காலம் முழுக்க களிப்பு

கவலை இல்லாத வாழ்க்கை.

ஒவ்வொரு நாளும்

புதுவரவு..புதுஉறவு.

உலகம் சுருண்டு

ஓர் அறையில் கிடக்கிறது.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , .

சிவக்க வைக்கிறேன் உன்னை மே 18..அரியணை அமைப்போம்

2 பின்னூட்டங்கள் Add your own

malgudi -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,580 hits