கற்பனைத் திருட்டு

மே 20, 2010 at 9:22 முப 4 பின்னூட்டங்கள்


நான்,எனது ஓவியம்:


சென்ற ஆண்டு தமிழ் ஈழப்போராட்டத்தின் போது,ஓவியர்களால் தூரிகையின் துயரப் பதிவுகள் எனும் ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது..அதில் பல்வேறு கல்லூரி மாணவர்களும்,ஓவியர்களும் தங்கள் உணர்வுகளை பதிவு செய்தனர்..அந்தப் போராட்டத்தில் நானும் பங்கு பெற்று எனது,என் எம்மின மக்களின் வலியை ஓர் ஓவியமாய் பதிவு செய்திருந்தேன்..அங்கே ஓவியர்கள் பதித்த ஈழ மக்களின் வாழ்வு குறித்த அனைத்து துயர பதிவுகளும்..விழிப்புணர்வு கருதி பல்வேறு இடங்களுக்கு பார்வைக்கு வைக்கப் போவதாய் அந்த நிகழ்ச்சி நிறுவர்கள் சொல்லி இருந்தார்கள்..அதன் பின் பல்வேறு போராட்டங்களுக்கு அந்த ஓவியங்களில் சில அச்சிடப்பட்டு பயன்படுத்தப்பட்டன..அந்த ஓவியர்களின் உணர்வு அது குறித்த வலி மக்களிடமும் சென்று சேர்ந்தது..

எனது ஓவியம் அய்யா பழ.நெடுமாறன்,இயக்குனர் பாரதிராஜாவின் கருப்புக்கொடி போராட்டத்தில்:

சில நாட்களுக்கு முன்பாக ஈழம் குறித்த வலி மிக்க மக்களின் வாழ்வு குறித்த ஓர் பதிப்பை ஓர் நண்பர் facebook இல் பதிவேற்றம் செய்திருந்தார்..http://www.facebook.com/home.php?#!/photo.php?id=100000133045509&pid=357068 அந்த கவிதைக்கு என் தூரிகை வடித்த செந்நீரை படமாக பாவித்திருந்தார்..பரவா இல்லை நாம் வரைந்த ஓவியம் அந்த மக்களின் வாழ்நிலையை பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது..ஈழ மக்களின் வாழ்வு குறித்த ஓர் பதிவாய் இருக்கிறது என்றெண்ணி அந்த ஓவியத்தை போய் பார்த்த போது..கவிதைக்குப் பயன்படுத்தப்பட்ட என் ஓவியத்தில் எனது கையெழுத்து அழிக்கப்பட்டு ஓவியம் கவி பாஸ்கர் என அச்சிடப்பட்டுள்ளது..எனக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது..

என் பெயர் அழிக்கப்பட்டு கவிபாஸ்கர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள என் ஓவியம்:

நான் எந்த விளம்பர நோக்கத்திற்காகவும் அந்த படைப்பை பதிக்கவில்லை..ஓர் உணர்வை பதிவு செய்யும் விதமாகவே அந்த போராட்டம் நடைமுறைபடுத்தபட்டது..அதை அப்படியே எடுத்து பயன்படுத்தியிருந்தால் எனது படைப்புக்கும் கிடைத்த ஓர் வெற்றியாய் என் மக்கள் வாழ்வு குறித்த ஓர் பதிப்பாய் என் படைப்பும் இருந்திருக்கிறது என உணர்ந்திருப்பேன்..மகிழ்ந்திருப்பேன்.. அதை யாரோ தங்களின் சுயலாபதிர்க்காக,எடுத்து பெயரை மாற்றி தங்கள் பெயரை போட்டிருப்பது கேவலமான செயலாய் தெரிகிறது எனக்கு…உணர்வு காக்கும் இந்த விடயத்திலுமா இப்படி கொச்சையாய் நடந்து கொள்ள வேண்டும்.

Entry filed under: குமுறல். Tags: , , , , , , , , , , , , .

எதிர்வினை வாடியது குளிர்

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கோவி.கண்ணன்  |  10:48 முப இல் மே 20, 2010

    //நான் எந்த விளம்பர நோக்கத்திற்காகவும் அந்த படைப்பை பதிக்கவில்லை..ஓர் உணர்வை பதிவு செய்யும் விதமாகவே அந்த போராட்டம் நடைமுறைபடுத்தபட்டது.//

    உங்கள் உணர்வு ஞாயமானது. ஓவியத்தைப் பயன்படுத்துவது வேறு, அதனை தாம் வரைந்ததாக இரட்டடிப்பு செய்வது வேறு. உங்கள் ஓவியம் பலரால் படிக்கப்பட்டு உணர்வு எழவைத்தது.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  7:02 பிப இல் மே 20, 2010

      நன்றி நண்பரே…ஒரு குமுறல் தான்.

      மறுமொழி
  • 3. செந்தழல் ரவி  |  5:50 பிப இல் மே 20, 2010

    பகிர்வுக்கு நன்றி..

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:02 பிப இல் மே 20, 2010

      நன்றி நண்பரே….

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,126 hits

%d bloggers like this: