காலாவதி ஆன மொழி

ஜூன் 18, 2010 at 8:35 முப 4 பின்னூட்டங்கள்


அந்த நண்பரோடு பேச எனக்கு ரொம்ப பிடிக்கும்..அவர் பேச்சினில் ஓர் சுவாரஸ்யம் இருக்கும்..நக்கல்,நையாண்டிகளை அவ்வப்போது சேர்த்துக் கொள்வார்..இதை விட இடையிடையே இடத்திற்கும்,உரையாடலுக்கும் ஏற்றார் போல் அவர் விடுகிற பழமொழி தான்..அப்பப்பா..இன்னும் கொஞ்ச நேரம் பேசமாட்டாரா என்கிற எதிர்பார்ப்பை எங்கள் நட்பு வட்டாரத்தில் ஏற்ப்படுத்தும்..

அவர் பழமொழிகளை எடுத்து விடுகிற போதெல்லாம் என் தாத்தா அவ்வப்போது என் நினைவில் நிழலாடி மறைவார்..பழமொழி என்கிறபோது என் தாத்தா மட்டுமல்ல என் வயதை ஒத்த அல்லது என் வயதிற்கும் அதிகமானவர்கள் எல்லோரின் தாத்தாவும் அவரவர் நினைவில் நிச்சயம் நிழலாடுவார்கள்..ஏனெனில் அன்றைய காலக்கட்டத்தில் பழமொழி என்பது வாழ்வின் இன்றியமையாத ஓர் இடத்தை பெற்றிருந்தது..

எடுத்துக்காட்டாக நான் செய்த தவறுக்காய் என் தகப்பன் என்னை அடிகின்ற போதெல்லாம்..என் தாத்தா சொல்வார்..போடு அப்போதான் இன்னொரு முறை அந்த தப்ப அவன் பண்ண மாட்டான்னு சொல்லி “அடி உதவுற அளவுக்கு அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பார்..

என் தாத்தா தருகின்ற வேலையை தவறாக நான் செய்யும் போது “புள்ள தெரத்த” என்று ஆரம்பிக்கும் அந்த பழமொழியை சொல்வார்..அவர் சொல்லும் சில பழமொழிகளில் அப்பட்டமான சில நிர்வாண வார்த்தைகள் இருந்தாலும் விரசம் இருக்காது…கோபம் வராது…இப்படி பழமொழிகள் சரியான நேரங்களில் பயன்படுத்தும் போது அதன் சாரம் நமக்கு சேரும்..பழமொழி ஓர் பாரம்பரியமாகவும் நம்மை சிந்திக்கவும் செயல்படவும் வைக்கும்..

ஆனால் இன்றைய சூழ்நிலையில் பழமொழி என்பது காலாவதி ஆன மொழி ஆகிவிட்டது..இப்போ ஒன்றை உவமையாய் சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் ஏதேனும் காட்சியை சொல்லி சொல்லும் அளவுக்கு சினிமா போதையே மானுடனை ஆக்கிரமித்திருக்கிறது..இந்த சூழலில் நமக்கே பல பழமொழிகள் தெரியாது.. குறைந்தபட்சம் நமக்கு தெரிந்த பழமொழிகளையாவது நாம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது நம் கடமை..அது நம் மூதாதையரை நினைவுகூறவும் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றியாகவும் அமையும்..செய்வோமா..

Advertisements

Entry filed under: கட்டுரை. Tags: , , , , , , .

நிறம் பேஸ் புக்

4 பின்னூட்டங்கள் Add your own

  • 1. முனைவர்.இரா.குணசீலன்  |  9:50 முப இல் ஜூன் 18, 2010

    உண்மைதான் நண்பரே..
    நாட்டுப்புற மக்களிடமும்,
    வட்டார வழக்குகளிலுமே இன்னும் கொஞ்சம் பழமொழிகளும், விடுகதைகளும் உயிர்வாழ்கின்றன..

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  3:06 பிப இல் ஜூன் 21, 2010

      ஆமாம் நண்பரே..

      மறுமொழி
  • 3. virutcham  |  12:08 பிப இல் ஜூன் 28, 2010

    //.இப்போ ஒன்றை உவமையாய் சொல்ல வேண்டும் என்றால் சினிமாவில் ஏதேனும் காட்சியை சொல்லி சொல்லும் அளவுக்கு சினிமா போதையே மானுடனை ஆக்கிரமித்திருக்கிறது..இந்த சூழலில் நமக்கே பல பழமொழிகள் தெரியாது//
    உண்மை. அப்படியே நாம் ஏதாவது பழமொழி சொல்லிட்டா நாம் பழம் பஞ்சாங்கம் என்று முத்திரை குத்தப்படுவோம்.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  7:30 பிப இல் ஜூன் 28, 2010

      அமாம் நண்பரே..பாரம்பரியம்,பழமொழிகள்,பொன்மொழி களை மீட்டெடுப்பதில் அரசு தான் முனைப்பு காட்ட வேண்டும்..இல்லையேல் பழமைபேசிகள் என்ற பட்டப் பெயரை சொல்லுவோர் சுமக்க வேண்டி வரும்..அரசு நடைமுறைப் படுத்தி,பள்ளியில் பாடமாக வைத்தால்,மனப்பாடப் பகுதியாக வைத்தால் இந்நிலை மாறும்.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: