எம் இனமான உறவு அண்ணன் சீமான் அவர்களுக்கு,

ஜூன் 30, 2010 at 10:52 முப 10 பின்னூட்டங்கள்


எம் இனமான உறவு அண்ணன் சீமான் அவர்களுக்கு,

உம் உறவின் வணக்கம்.உறவுகளே என்று நீர் எம்மை அழைத்த போதெல்லாம் எங்கள் உடன்பிறந்த உறவாய் உம்மை நெஞ்சில் சுமந்தோம்.உம் உறுமுகிற குரல் கேட்டு இன்னொரு தமிழ்ப் புலியின் சீற்றம் என்று நினைந்தோம்.தமிழனுக்காய் இன்னோர் தலைவன் எழுவதாய் தரணி எங்கும் புகழ்ந்தோம்.உம் உரை கேட்காத தமிழர்கெல்லாம் youtube இல் உம் சீற்றம் காட்டி சிவந்தோம்..இதற்கிடையில் இடையிடையே சிலர் இடைச்சொருகலாய் உமை இகழ்ந்து கூறினர்.ஈழம் சொல்லிக் கட்சி வளர்த்து நீ ஆலமாகிறாய் என்றனர்.இன்னும் சிலர் நீ வெகுண்டு எழுவதெல்லாம் வெளிநாட்டுப் பணத்திற்கு என்றனர்.சீமான் காரியவாதி யல்லர் என்று,யாம் காரி உமிழ்ந்தோம் அவர் முகத்தில்…

இப்போதோ சில நாட்களாய் உன் மேல் உணர்வுள்ள நம் உறவுகளே சூர்யாவின் “ரத்த சரித்திரா”விவகாரத்தில் உம் சீற்றம் குறைந்து ஆற்றம் அடங்கி விட்டதாய் அறிகின்றனர்,அறிவிக்கின்றனர்…”ரத்த சரித்திரா” விவகாரத்தில் உம் நிறம் மாறியுள்ளதாய் மனமுடைந்து குமுறுகின்றனர். முன்பே உமைக் குறைக் கூறிய மீதியினரும் சமீபத்தில் நீர் இது சம்பந்தமாக கொடுத்தப் பேட்டிகளின் சாரம் காட்டி எம் முகத்தில் உமிழ்கின்றனர்…

நான் படித்த ஆனந்த விகடன் கேள்வி??நீர் சொன்ன பதில்..இதோ..

“சூர்யாவிடம் நீங்கள் கால்ஷீட் கேட்டுள்ளதால்தான், அவருடன் விவேக் ஓபராய் நடித்துள்ள ‘ரத்த சரித்ரா’ படத்தைத் தமிழகத்தில் தடை செய்வதுபற்றிப் பேச மறுப்பதாகக் கூறுகிறார்களே?”

சூர்யாவிடம் நான் கால்ஷீட் கேட்கவும் இல்லை. அவர் என் படத்தில் நடிக்கவும் இல்லை. ‘ரத்த சரித்ரா’ படம் ஐஃபா விழா தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டது. என்னைப் போலவே சூர்யாவும் தமிழ் உணர்வாளர். ஐஃபா விழாவுக்குப் பிறகு விவேக் ஓபராயுடன் சூர்யா நடித்திருந்தால், அது தவறு. அதைப்போன்ற ஒரு தவறை சூர்யா செய்ய மாட்டார்!”

என்று பதிலளித்துள்ளீர்கள்…

சரி உங்கள் சொற்படியே ஏற்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்..அப்போ சீமான் அண்ணா தெரியாமல் தான் கேட்க்கிறேன், ஹிர்த்திக் நடித்த கைட்ஸ் திரைப்படம் ஐஃபா விழாவிற்கு பின்னால் எடுக்கப் பட்டதா ??அதை மட்டும் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தீர்களே..ஹிர்த்திக் ஐஃபா விழாவுக்கு போனதால் திரைப்படத்தை தடுத்தேன் என்பீர்களா??அப்போ விவேக் ஓபராய் மட்டும் என்ன விதிவிலக்கா???சூர்யா என்னைப்போல் உணர்வாளர் என்றால்..உணர்வாளர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா??அந்த உணர்வாளர் தான் முன்னமே இந்தோ-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் படம் பண்ண கையெழுத்திட்டாரா??அப்புறம் உணர்வாளர்களால் ஏற்ப்பட்ட நெருக்கடி காரணமாகவே அந்தப் படத்தில் நடிக்காமல் ஜகா வாங்கினாரே..அது உமக்கு நினைவில்லையா?ஹிந்திக் காரனுக்கோர் நியாயம்..நம்மின களைகளுக்கோர் நியாயமா??பொதுவாழ்க்கையில் சகோதரப் பாசத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.. அதற்கு ஏனையோர் இருக்கிறார்கள்..உணர்வையும்,கொள்கையையும் உறவுகளுக்காக,நட்புக்காக,இனத்திற்காக விட்டுக் கொடுக்க…அதற்கு நீங்கள் தேவையில்லை…தேசியத்தலைவரை முன்மாதிரியாக் கொண்டு களம் இறங்கிய நீங்கள் களைகளுக்கு இடம் கொடுப்பதேன்?தன் உயிரினும் மேலான உறவாய்,நட்பாய் எண்ணின மாத்தையா தன் இனத்திற்கு எதிரான களை என்று அறிந்த வுடன் அழித்தொழித்தாரே அவரை அண்ணனாக ஏற்றுக் கொண்டு தம்பி ஏன் இப்படி செய்கிறீர்? சூர்யா நம் தமிழன்  என்பதால் தலையசைத்து விட்டீர்களா ??நமக்குள்ளேயே களை வளர்த்துக் கொண்டு  நாம் எப்படி தமிழனாக முடியும் ??இல்லை நம்மினக் களைகளை  நாமே ஏதேனும் காரணம் கண்டுபிடித்து காப்பாற்ற வேண்டுமா???இப்படித்தானே வழிவழியாய் நமினத்துக்குல்லேயே நாமே  விஷ விதைகளைத் தூவி,வளர்த்து  நாரி நாற்றமெடுத்து இருக்கிறோம்..ஏன் இன்னுமும் அதை ஆதரிக்கிறீர்கள்?தமிழனின் பலவீனம் உறவுகளுக்காய் உரிமையை,கொள்கையை விட்டுக்கொடுப்பதில் தான் உற்பத்தியாகிறது..அறிவீர்கள் என்று அறிகிறேன்..உங்கள் தம்பி படத்து பாணியிலேயே, கடைசிக் கேள்வியாய் இந்த தம்பி உங்களிடம் ஓர் கேள்வியைக் கேட்கிறேன்.எமக்கு பதில் சொல்லுங்கள் அண்ணா..

உம் பேட்டிகளின் சாரம் காட்டி நான் மேற்கூறிய அனைத்து கேள்விகளையும்,எம்மிடம் கேட்டு,உம் அண்ணன் சீமான்  இவ்வளவு தானா??என்றுக்கூறி எம் முகத்தில் காரி உமிழ்ந்தோர்க்கு நான் என்ன சொல்ல..

இப்போ நான் என்ன செய்ய???

தலைக்  குனிந்து கொள்ளவா???

Advertisements

Entry filed under: குமுறல். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

ராவணன்-பாடல் வரியில் பட விமர்சனம் பொறி வைத்த எலி

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. அகரமதி  |  4:59 பிப இல் ஜூலை 1, 2010

  எல்லாம் சரியான கேள்விகளே தோழர், அண்ணன் சீமான் இதற்கான விளக்கம் வெளியிடும் வரை அவர் தம்பிகளின் அதரவை இழந்து கொண்டிருப்பார். இதற்கான விளக்கம் சீமானால் கொடுக்க முடியும், அதை எதிர் பார்த்திருப்போம்……

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  5:36 பிப இல் ஜூலை 1, 2010

   ஆமாம் நண்பரே….அவரின் நல்லதோர் முடிவை எதிர்ப்பார்த்து தான் தம்பிகள் காத்திருக்கிறோம்.

   மறுமொழி
 • 3. Rajan  |  10:46 முப இல் ஜூலை 4, 2010

  தம்பி.. உங்க அண்ணனாக இருந்தாலும், அவரின் வீர மரணமடைந்த தம்பியாக இருந்தாலும் சரி.. இயக்கம் நடத்தக் காசு வேண்டும். நாலு பேரை அனுசரிச்சுப் போகணும். சீமான் புத்திசாலி.. புழைச்சுக்குவார்.. உங்கள மாதிரி ஆளுங்க தான் விடை தெரியாமல்..

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  4:16 பிப இல் ஜூலை 4, 2010

   காசுப் பாக்குறதுக்கு ஏகப் பட்ட கழகங்கள் இருக்கு..உணர்வுள்ள இயக்கங்களுக்கு தன்மானம் மட்டுமே போதுமானது.

   மறுமொழி
 • 5. anu  |  4:51 முப இல் ஜூலை 28, 2010

  tamilzanoda thanmanam ipolam verum varthaigala dan iruku,
  idha yaralum maruka mudiyadhu!!!!!
  pesi pesiye kalatha kadatha vendiyathu dan………..

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  10:27 முப இல் ஜூலை 28, 2010

   unarvoda adhaiyaavadhu seivorgalaanaal paaraattukku uriyavargale..silar tamilil pesuvadhaiye thanmaanak kuraivaaga ennugiraargal.

   மறுமொழி
 • 7. Robin  |  11:27 முப இல் ஜூலை 28, 2010

  தனிமனித வழிபாடு செய்தால் தலை குனிந்துதான் ஆக வேண்டும்.

  மறுமொழி
 • 8. படைப்பாளி  |  11:55 முப இல் ஜூலை 28, 2010

  ராஜபக்சே,காங்கிரஸ் உடன் கூட்டு பிரார்த்தனை செய்யவா…!!
  அப்போ..தலை நிமிருமா நண்பரே??

  மறுமொழி
 • 9. Robin  |  12:56 பிப இல் ஜூலை 28, 2010

  பிரார்த்தனை தனியாகவே செய்யலாம். யாருடனும் சேரவேண்டிய அல்லது கண்ணை மூடி நம்ப வேண்டிய நிர்பந்தம் இல்லை.

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  4:42 பிப இல் ஜூலை 28, 2010

   இது சேர்தலோ,நம்புதலோ இல்லை நண்பரே..ஓர் உணர்வாளன் விலைபோய் விடக்கூடாது என்கிற உணர்வின் வெளிப்பாடு …. ஒரு கை தட்டினால் ஓசை வருவதில்லையே..அதுதான்.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 188,126 hits

%d bloggers like this: