அலைபேசி குறுஞ்செய்தியும்,அலெக்சாண்டர் க்ரஹாம்பெல் காதலியும்

ஜூலை 9, 2010 at 10:27 முப 11 பின்னூட்டங்கள்


காலையில் குட்மார்னிங் சொல்லி, தான் வந்தக் கடமையை முடித்துக் கொண்ட,அந்தக் குறுஞ்செய்தி,குட்மார்னிங் சொன்னதோடு சேர்த்து ஓர் சுவைமிகு கருத்தையும் சுமந்து வந்திருந்தது..

அடடே… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!தெரியாமலே உச்சரித்திறிக்கிறோம்  அவள் பெயரை..நான் மட்டுமல்ல உலகமே அடுத்தவன் காதலி பெயரை, நொடிக்கொரு முறை உச்சரித்திருக் கிறதே..சாதித்துவிட்டான்..சாதித்தவன் அவனாக இருந்தாலும் சாதனை நாயகியாய் அவன் காதலி அல்லவே ஆகிவிட்டாள்..

ஓ…அதனால்தானோ என்னவோ…இன்றும் அவன் கண்டுபிடிப்பே காதலையும்,உறவையும் வாழ்வித்து வருகிறது.காதல் என்றால் இதுதானோ!!..இந்த உலகம் இருக்கும் வரை அவள் பெயர் வாழும்!!தாஜ்மஹால் என்னப் பெரிது..இதுவல்லவே அதை விடப் பெரிது!!இப்படி தான் நினைத்து விட்டேன் அந்தக் குறுஞ்செய்தியைப் படித்தவுடன்.அப்படியோர் செய்தி அது..

செய்தி இதுதான்..தொலைப்பேசியை கண்டு பிடித்தவர் அலெக்சாண்டர் க்ரஹாம்பெல் என்பது அனைவரும் அறிந்தது..ஆனால் தொலைப்பேசியில் நாம் பேச ஆரம்பிக்கும் போது சொல்லும் ஹலோ என்பது என்ன என்று உங்களுக்குதெரியுமா??ஹலோ என்பது அலெக்சாண்டர் க்ரஹாம்பெல்லின் காதலி பெயர்..அவர் தொலைப்பேசியைக் கண்டுப் பிடித்ததின் நினைவாக,பேச ஆரம்பிக்கும் போது ஹலோ என்று அவர் காதலியின் பெயர் பயன்படுத்தப்பட்டது..உங்கள் பெயரை நீங்கள் மறந்தாலும்,ஹலோ என்ற, அவர் காதலிப் பெயரை மறக்க முடியுமா?என்று கேட்டு முடிகிறது அந்தக் குறுஞ்செய்தி.

ஆச்சர்யமுற்ற நான், எவ்வளவு பெரிய விஷயம்!இவ்வளவு நாள் அந்தக் காதலின் பெருமை அறியாமலே,ஹலோவை பயன்படுத்தி இருக்கிறோமே..அதைப் பற்றி நண்பர்களிடம் சொல்ல வேண்டும்.அதற்கு முன் அந்த செய்தி உண்மையா என அறிந்து கொண்டு சொல்வோம் என்றெண்ணி,கூகுளில் அலசிய போது விஷயம் வேறு மாதிரி தெரிய வந்தது ..ஹலோ என்ற வார்த்தையை தாமஸ் எடிசன் (Thomas Edison) என்பவரே அறிமுகம் செய்ததாகவும்,அலெக்சாண்டர் க்ரஹாம்பெல் கண்டுபிடித்தபோது அஹாய் (Ahoy) என்ற வார்த்தையையே அவர் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிய வந்தது…அப்போ அந்தக் காதலிக் கதை..??????????அது வெறும் டுபாகூர்…

நல்லவேளை,இதை பார்க்காமலோ,படிக்காமலோ யாரிடமாவது அதைப் பற்றி நான் பேசி இருந்தால்,அவருக்கு விஷயம் தெரிந்திருக்கும் பட்சத்தில், ஒன்று நான் அசிங்கப் பட்டிருக்க வேண்டும்.இல்லை அவருக்கு அது பற்றி தெரியாதப் பட்சத்தில் தவறான கருத்தை அவருக்கு நான் போதித்திருக்க வேண்டும்…இப்படித்தான் பல செய்திகள் அலைபேசியில்,குறுஞ்செய்தியாய் தவறானத் தகவல்களை சுமந்துக் கொண்டு நம்மை வந்தடைகின்றன.அப்படி வரும் செய்திகளின் உண்மைநிலை தெரியாமல் நாமும் மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்கிறோம் .. அப்படி அனுப்பப் படும் செய்திகள் தவறான கருத்தோடு மற்றவர்களுக்கு சென்றடைகின்றன…எனவே நமக்கு வரும் குறுஞ்செய்திகள் உண்மை என்று தெரியும் பட்சத்தில் அதை மற்றவர்களுக்கு அனுப்புங்கள்..அதை பற்றி தெரிந்துக் கொண்டு மற்றவர்களிடம் பேசுங்கள்..இல்லையேல்….தெரியாமல் நாம் அனுப்பும் செய்திகளும்,தகவல்களும் தவறானக் கருத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கொண்டுபோய் சேர்த்துவிடும்..குறுஞ்செய்தி அனுப்பும் முன் அதை மனதில் கொண்டு செயல்படுவது நலம்..

Advertisements

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , , , .

என் பட்டியலில் முதலிடம் பிடித்தப் பாடல் கால்பந்தாட்ட நாயகன் 2010

11 பின்னூட்டங்கள் Add your own

  • 1. premcs23  |  11:58 முப இல் ஜூலை 9, 2010

    கண்டிப்பாக யோசிக்க வேண்டிய ஒன்று…

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:01 பிப இல் ஜூலை 9, 2010

      நன்றி நண்பா

      மறுமொழி
  • 3. sri  |  12:04 பிப இல் ஜூலை 9, 2010

    Very good naan solli kodutha madhiriyea eazhudhita

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:05 பிப இல் ஜூலை 9, 2010

      நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய…

      மறுமொழி
  • 5. adhithakarikalan  |  12:04 பிப இல் ஜூலை 9, 2010

    நல்ல செய்தி, சுவாரஸ்யமான செய்தியும் கூட…

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:07 பிப இல் ஜூலை 9, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 7. kalakakaaran  |  4:53 பிப இல் ஜூலை 9, 2010

    inimey unga kadhali peyari sollunga phone pannum pozhuthu

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  5:20 பிப இல் ஜூலை 9, 2010

      அதிலும் ஒரு பிரச்சினை இருக்கிறது..எந்தக் காதலி பெயரை சொல்வதென்று!!!ஹா..ஹா..

      மறுமொழி
  • 9. anu  |  5:53 முப இல் ஜூலை 30, 2010

    well said

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:40 முப இல் ஜூலை 30, 2010

      thank you

      மறுமொழி
  • 11. prabha  |  8:14 பிப இல் ஒக்ரோபர் 24, 2010

    ஹலோ! அசத்துறீங்க அண்ணா…..

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 181,524 hits

%d bloggers like this: