நிர்வாணம்-4
ஓகஸ்ட் 4, 2010 at 10:56 முப 4 பின்னூட்டங்கள்
நிர்வாணம்-சினிமா
அக்காலம் முதல் இக்காலம் வரை,மக்களுடனான நேரடித் தொடர்பில் அதிகப் பங்கு திரைப்படத்திற்கு உண்டு.அதனில் வரும் சம்பவங்கள்,விரைவில் மக்களையும் சென்றடைகின்றன.
இப்படி மக்களுக்கு அன்றாடம் ஆகிவிட்ட திரைப்படங்களிலும்,நிர்வாணம் என்பது தேவையாகி விட்டது.
சினிமாத் துறையில் சில கதாப் பாத்திரம் எதார்த்தத்தை முன்னிறுத்தும் வகையிலும்,கதையம்சத்தின் கட்டாயத்திற்காகவும்,நிர்வாணத் தேவையை நிலை நிறுத்துகிறது.சமுதாய பங்களிப்புள்ள,கருத்து செறிவை உள்ளடக்கிய திரைப்படங்களில் கூட,பாத்திர அவசியம் கருதி,நிர்வாணக் காட்சியமைப்புகள் கட்டாயமாக்கப் படுகின்றன.
அது பல சமயங்களில் கதை சார்ந்த அமைப்பாக,அந்தக் காட்சியமைப்பின் தேவைக்காக,கண்டிப்பாக வைக்க வேண்டிய சூழலை உள்ளடக்கிய விசயமாக முன்னோக்கி நிற்கின்றன.
உடைபோட்டு மறைக்க வேண்டிய விஷயம்,நான்கு சுவற்றுக்குள் நடைபெறும் விஷயம் என்ற கருத்து இருப்பினும்,ஓர் பார்வையாளனுக்கு,அந்த படைப்பை பற்றிய முழுமையான இலக்கை,எதார்தத்தை,இயக்குநனின் விருப்பத்தை,தேவையை,கடமையை உணர்த்த வேண்டிய கட்டாயம் பல சமயங்களில் அந்தக் காட்சி அமைப்புகளின் வாயிலாகவே தென்படுகிறது.
அதை உற்றுநோக்கி பார்க்கும் போது,கதையம்சத்திற்கு “நிர்வாண காட்சியமைப்புகள்” கட்டாயம் தேவை என எண்னுமளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
இப்படத்தில் வரும் நிர்வாணக் காட்சியைப் பார்க்கின்ற போது,தேவையில்லை என எண்ணத் தோன்றுகிறதா?இல்லை.ஏன்?
காட்சியமைப்பு:ஓர் ஓவியன்,காதலியின் மீதுள்ள அதீத காதல் மற்றும் தனது படைப்புத்திறமையை அரங்கேற்ற வேண்டிய கட்டாயம்,கலைஞனின் மனோபாவம்,அவளின் விருப்பம்,(அவன் மீதுள்ள அளவுக்கடந்த அன்பு, காதல் தானே அவளை அங்கே அவனுக்காக நிர்வாணமாக்குகிறது)இப்படி பல்நிலை பொறுப்புகளை அக்காட்சியமைப்பு தாங்கி நிற்கிறது.ஆகவே அது தேவையில்லை எனக்கூற யாரும் முன்வருவாறில்லை.கூறவும் இயலாது.
கதையின் கண்டிப்பு..கட்டாயம்..அங்கே ஆபாசம்,விரசம் தெரிவதில்லை.தேவையின் தேடல் தெரிகிறது.
இந்தியன் படத்தில் கூட ஓர் காட்சியமைப்பு வருகிறது.வெள்ளையர்கள் “நம் நாட்டுப் பெண்களின் உடைக்களைந்து அவர்களை அவமானப்படுத்துதல்”
போன்ற காட்சி.அது அரை நிர்வாணமாகத்தான் காட்டப்படும்,இருந்தாலும் அது கதைக்கான,விவரிக்க வேண்டிய அவசியம் உள்ள காட்சியாகப் படுகிறது.இதுப் போன்ற இடங்களில் நிர்வாண சம்பந்தப்பட்ட காட்சிகள் கட்டாயமாகிறது.
சில திரைப்படங்கள் தாம்பத்யம் பற்றிய அறிவு போதிக்கும் நிலையிலேயும் உள்ளன.அதற்க்கும் நிர்வாணக் காட்சிகள் கட்டாயமாக தேவைப்படுகிறது.
இப்படி பலத்திரைப் படங்களில் பல்வேறு விதமான மனிதர்கள்,அவர்களின் குணாதிசியங்கள் பாத்திர அமைப்புகளைக்காட்ட,கதையை நிலைநிறுத்த,அந்தந்த கதைகளுக்கும்,பாதிரங்களுக்குமேற்ற நிர்வாண காட்சியமைப்புகள் இடம் பெறுதல் அவசியமாகிறது..
(விளம்பரம் வரும்..)
Entry filed under: என் கலைப்பயணம், நிர்வாணம். Tags: angelina jolie, சினிமா, திரைப்படம், நிர்வாணத் திரைப்படம், நிர்வாணப்பெண், நிர்வாணம், kamasutra, NUDE, nude class, nude model, nude movie, nude scene, titanic, titanic nude.
4 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
adhithakarikalan | 11:47 முப இல் ஓகஸ்ட் 4, 2010
நிர்வாணம் – மோட்சம்
2.
படைப்பாளி | 8:52 பிப இல் ஓகஸ்ட் 4, 2010
நன்றி நண்பரே
3.
ஜெகதீஸ்வரன் | 6:00 பிப இல் ஓகஸ்ட் 4, 2010
காமத்தின் தேவையை அழகிய முறையில் உணர்த்தும் படம் சம்சாரா.,
நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா நண்பரே!,..
4.
படைப்பாளி | 8:51 பிப இல் ஓகஸ்ட் 4, 2010
நன்றி..முழுமையாக பார்த்ததில்லை நண்பரே..சில சீன்ஸ் பார்த்திருக்கிறேன்…அருமையானப் படம் என்பதை அதுவே உணர்த்தி இருக்கின்றன.அதுவும் அந்த சேலையில் சுற்றி ஊஞ்சலாடிக் கொண்டு..அப்பாப்பா..விரைவில் முழு படத்தையும் பார்த்து விடுகிறேன்..