பிரணாப் முகர்ஜி முதல் அம்பானி வரை-அழைப்பும்,அதிர்ச்சியும்

ஓகஸ்ட் 6, 2010 at 10:17 முப 2 பின்னூட்டங்கள்


ஹலோ..கேன் ஐ ஸ்பீக் டூ மிஸ்டர்…..என்று ஆரம்பிக்கும் அந்த அழகான பெண்களின் குரல் இப்போ காதுகளுக்கு இனிமையாய் இருப்பதில்லை..வெறுப்பாகிப் போயிருந்தது.முகத்தில் அடித்தாற்போல் திட்ட தோன்றுகிறது.வீட்டு லோன் வேணுமா?பர்சனல் லோன்?கிரெடிட் கார்ட்?என நேரம் காலம் தெரியாமல் வரும் அழைப்புகள் என்னை மட்டுமல்ல,அலைபேசி உபயோகிக்கும் அனைவரையுமே அலைக்கழித்துக் கொண்டுதானிருக்கிறது தினமும்.

இந்தக் கொடுமைய தான் தாங்க முடியலனா,SMS வேற அனுப்பி இப்போ நோகடிக்க ஆரம்பிச்சிடாங்க..இதனால பாதிக்கப் பட்டு ஏனையோர் பொலம்புறாங்க..நம்ம இப்படி பொலம்புறதுக்கு மத்தியில ஓர் நாட்டோட பொலம்பளும் இப்போ சேந்திருக்கு??என்னடான்னு கேக்குறீங்களா??

நம்ம நிதி இருக்கே,அதுதாங்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி,கடந்த 2ஆம் தேதி திங்கள்கிழமை,விலைவாசி உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சியில்,எழுந்த அமளியை முடிவு கட்ட,சமாதானம் பேசுறதுக்காக பா.ஜா.க தலைவர்களோட உக்காந்திருக்காரு..

அப்போ பாத்து அவர் அலைபேசிக்கு கால் வர சோனியாவா இருக்குமோன்னு மனுஷன் பதறிப் போயிருக்காரு..கால் அட்டென்ட் பண்ணி பேசிருக்காரு..எதிர்முனையில பேசுனப் பொண்ணு உங்க ப்ரோபைல் சூப்பரா இருக்கு..நீங்க இதுவரைக்கும் எந்த லோனும் வாங்கல..வீட்டு லோன் வேணுமான்னு கேட்டுருக்கு..மனுஷன் கடுப்பாகி கட் பண்ணிருக்காரு தொடர்பை…ஏற்கனவே பிரணாப்பு டென்ஷன் பார்ட்டின்னு வேற சொல்றாங்க.

முகம் வெளிறி வந்த மனுஷன் கிட்ட ,என்ன சார் மேட்டர்னு ,சுத்தி இருந்த தலைங்க கேக்க..மேட்டர சொல்லிருக்கு பார்ட்டி.இதுமாதிரி டெய்லி ரெண்டு,மூணு கால் ஆவது வந்துருதாம்.

விலைவாசி உயர்வுல மக்கள் மட்டுமல்ல.. நம்ம நிதியமைச்சரும் கடன் வாங்குனா தான் காலத்த ஓட்ட முடியும் னு பேங்க் காரன் நெனசுட்டான் போல…ஒருவேளை பா.ஜா.க போட்ட திட்டமா இருக்குமோ!! ஹி..ஹீ..

—————————————————————————————————————————————————————–

கொசுறு:கடைசியா பாத்தா இந்த மாதிரி டெலிகாலர்கள் கிட்ட பிரணாப் முகர்ஜி மட்டுமல்ல..ஏனைய பிரபலங்கள் மாட்டி இருக்காம்.

4000 கோடி ரூபாய் சொந்த செலவுல வீடு கட்ற ஆளானப்பட்ட முகேஷ் அம்பானிக் கே கால் பண்ணிருக்காங்க  நம்ம பேங்க் டெலி காலேர்ஸ்.…உங்க ப்ரோபைல் சூப்பரா இருக்கு..வீட்டு லோன் வேணுமா சார்னு..

இன்னொரு பெண் அரசியல் பிரபலம் கிட்ட முடி வளர்ற மெசின் வேணுமான்னு கேட்டாங்கலாம்..பா.சிதம்பரம் பாரின்ல இருக்கும் போது , மிட் நைட் ல கால் வந்ததாம்..என்னனு பார்த்தா, கிரெடிட் கார்டு வேணுமா சார்..??இப்படி நீள்கிறதாம் பட்டியல்..சொல்லிக்கிறாங்க..ஹ்ம்ம்..என்ன கொடுமை சார் னு சொல்ல தோனுதுல்ல..வேற வழி பெரிய பார்டிங்களுக்கே இந்த கதினா??நம்ம கதி??

ஹலோ..கேன் ஐ ஸ்பீக் டூ மிஸ்டர் blogger?பதில் சொல்றதும் கட் பண்றதும் உங்க இஷ்டம்..

——————————————————————————————————————————————————————-

Entry filed under: குமுறல். Tags: , , , , , , , , , , .

விளம்பர யுத்தம் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

2 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  11:07 முப இல் ஓகஸ்ட் 6, 2010

    இப்போ தான் சந்தோசமா இருக்கு…சீக்கிரம் இதுக்கு ஒரு விடிவுகாலம் பொறக்கும்னு நினைக்கிறன்…

    மறுமொழி
  • 2. premcs23  |  10:32 முப இல் ஓகஸ்ட் 7, 2010

    என்ன கொடுமை சரவணன்…

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,084 hits

%d bloggers like this: