நிர்வாணம்-5
ஓகஸ்ட் 10, 2010 at 10:28 முப 1 மறுமொழி
நிர்வாணம்-விளம்பரம்
ஒரு பொருள் வாங்குவதற்கோ,விற்பதற்கோ விளம்பரம் இன்றியமையாத் தேவையாகி விட்டது.பல விளம்பரங்களில் நிர்வாணமும் தேவை என நிலைத்து விட்டது.
இது விளம்பரத்தன்மை,உணர்த்தும் கருத்து தேவையை பொருத்து வேறுபடுகிறது ..
விளம்பரங்கள் ,விரைவில் வாடிக்கையாளர்களை சென்றடையவும்,பார்வையாளர்களை பார்க்க வைப்பதற்காகவும் ,சில உவமை,உருவகங்களை உள்ளடிக்கியும் எடுக்கப்படுகின்றன.சோப்பு,பைக் போன்ற விளம்பரங்கள் பெண்களை உவமையாக காட்டி,அவளைப்போல்
அழகானது,கவர்ச்சியானது,மென்மையானது என்ற கருத்தை மக்களுக்கு போதிப்பவையாகவும் அமைந்து விடுகின்றன.
அழகியல் உணர்வுகளை எடுத்துக் காட்டவும்,இயற்கையானது,செயற்கை தனமில்லாதது போன்ற நோக்கங்களில்,பலப்பல எண்ணங்களின் வெளிப்பாடுகளில் வடிவமாற்றம் பெற்றும் வருகின்றன.
சில விளம்பரங்கள் கட்டாயமாக,இதை இப்படித்தான் செய்ய வேண்டும்,மக்களுக்கு இதனை பற்றிய ஆக்கம் இப்படித்தான் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்திலும் எடுக்கப் படுகின்றன.சில விளம்பரங்கள் நிர்வாணமாய் இருந்தாலும்,நகைச்சுவையாகவும்,சொல்ல வந்த கருத்தை முன்னிறுத்தும் விதமாகவும் அமைக்கப்படுகின்றன.சபலம் தூண்டும் விதத்தில்இல்லை.
அவை சில காண்டம்ஸ்,மருந்து மற்றும் கிரீம் விளம்பரங்கள் என அந்தரங்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.
அதனைப் பற்றிய கருத்தை மக்களுக்கு வெளிக்கொணர,ஆதாரமான “நிர்வாண மாடல்களை”காட்டுவது,கருத்தை தெளிவுபடுத்துவதில்,தீர்மானமான விசயமாக தென்படுகிறது.கட்டாயத்தையும் வலியுறுத்துகிறது.
-நிர்வாணம் நீளும்..
Entry filed under: என் கலைப்பயணம், நிர்வாணம். Tags: cover story, female model, NUDE, nude ad, nude model, nude movies, story.
1 பின்னூட்டம் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
ஜெகதீஸ்வரன் | 12:25 முப இல் ஓகஸ்ட் 11, 2010
ஒரு காலத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் பெண்கள் திறந்த மார்போடவே அலைந்திருக்கின்றார்கள். அந்த அரை நிர்வாணங்கள் அவர்களுடனே வசித்த ஆண்களுக்கு கிளர்ச்சி தரவில்லை.
ஆனால் இப்போது மூடுபொருள் ஆகிவிட்ட பின் அதன் கவர்ச்சி எல்லைகள் விரிவடைந்துவிட்டன். பழையகாலம் திரும்பி வரும் என்று உங்களின் காணொளிகள் சொல்லுகின்றன,
நிர்வாணம் நீளட்டும்.