இந்தக் குழந்தையை உங்களுக்கு தெரியுமா??

செப்ரெம்பர் 1, 2010 at 10:20 முப 16 பின்னூட்டங்கள்


—————————————————————————————————————————————————————-

நேற்று மாலை மின்னஞ்சலில் வந்த அந்த பிஞ்சு முகம் இன்னும் நெஞ்சிலிருக்கிறது..அழகின் வடிவாய் புன்னைகைப் பூத்திருக்கிறாள் அவள்..அவள் புகைப்படத்தோடு,சேர்ந்து வந்த செய்தியும் இன்னும் அகலாமல் நெஞ்சில் கனக்கிறது.

—————————————————————————————————————————————————————-

இவள்தான் பூஜா..4 வயது பிஞ்சுக்குழந்தை.இந்த மழலையைத்தான் ஓர் பிச்சைக்காரன் கடத்தி வந்து தன்னுடன் பிச்சைஎடுக்க வைத்திருக்கிறான்.குழந்தைகள் பிச்சையெடுத்தால்,இரக்கம் கொண்டு காசு போடும் மக்கள் குணத்தை புரிந்துகொண்டு பூஜாவை பயன்படுத்தியிருக்கிறான்.இதுமாதிரி பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளைக் கடத்தும் வழக்கம் ஆங்காங்கே இருந்து கொண்டுதான் இருக்கிறது..அனாதையானதால் பிச்சை எடுப்பவர்கள் ஒருபுறம்..அனாதையாக்கப் பட்டு பிச்சை எடுக்க வைக்கப்படுபவர்கள் மறுபுறம்.

பூஜாவை கடத்தியப் பிச்சைக்காரன் கேரளா போலீசாரிடம் சிக்கியுள்ளானாம்..பிச்சைக்காரனிடமிருந்து காப்பாற்றப் பட்ட குழந்தை தற்போது கேரளா,திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசு பவன் எனும் அனாதைக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறாளாம்.

போலீசார் குழந்தை குறித்தும்,அவள் இருப்பிடம் குறித்தும் அறிந்து கொள்ள பிச்சைக்காரனிடம் விசாரிக்க முயன்றபோது..அவன் காது கேட்காத,வாய் பேசமுடியாத ஆள் என்பதை அறிந்திருக்கிறார்கள்.இதனால் பூஜா குறித்த மேற்கொண்ட தகவல்களை அறிய இயலாமல் போய்விட்டதாம்.

குழந்தை கூறியுள்ள தகவல்:

தாய்மொழி-ஹிந்தி

தந்தை பெயர்-ராஜூ

தாயார் பெயர்-முன்னி தேவி

எனவும் மற்றும் ஒரு அக்கா,ஒரு தம்பி தனக்கு இருப்பதாவும்,தன்னுடைய ஊர் நாகலூப்பி எனவும் கூறியிருக்கிறாளாம்.ஆனால் விசாரித்து பார்த்ததில் அப்படியோர் ஊர் எங்கும் இல்லை என அறிந்திருக்கிறார்கள்..குழந்தையின் மொழியில் கூறுவதால் அறிய இயலாமலிருக்கலாம்..இல்லை அவளுக்கு அது சொல்ல தெரியாமலிருக்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.

எனவே யாருக்கேனும் இக்குழந்தைப் பற்றிய தகவல் தெரிந்தாலோ,அல்லது குழந்தை கூறிய இடத்தைப் பற்றி அறிந்திருந்தாலோ,குழந்தையை காணாமல் தவிக்கும் பெற்றோரைப் பற்றிய தகவல் கிடைத்தாலோ திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசு பவன் அனாதைக் காப்பகத்தை(nirmala sisu bhavan,trivandrum,kerala,india) அணுகுமாறு மின்னஞ்சலில் செய்தி சொல்லியிருக்கிறார்கள்.

நிர்மலா சிசு பவன் அனாதைக் காப்பகம்

தொலைபேசி எண் :0471-2307434

—————————————————————————————————————————————————————-

குறிப்பு: நண்பர்களே என் மின்னஞ்சலுக்கு வந்த மேற்கூறிய செய்தியை ஓர் நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே நான் பதிவு செய்திருந்தேன்..ஆனால் இந்த செய்தியை படித்த நண்பர் கோவி.கண்ணன் 2003 ஆம் ஆண்டிலிருந்தே இந்த செய்தி பரவுவதாகவும்,இது வதந்தி எனவும் குறிப்பிட்டு பின்னூட்டத்தில்

http://www.hoax-slayer.com/help-pooja-find-parents.shtml

ஒரு லிங்க் அனுப்பி இருக்கிறார்..அவர் குறிப்பிட்ட லிங்க் இது வதந்தி என்பதை உறுதி செய்கிறது. உணர்வினால் அறியாமல் எழுதிய பதிவிற்காக மனம் வருந்துகிறேன்..உங்கள் மின்னஞ்சலுக்கும் இந்த செய்தி வந்திருக்கக் கூடும்..யாரும் இதனை நம்ப வேண்டாம் எனவும் வலியுறுத்துகிறேன்..இந்த செய்தியை தெளிவு படுத்திய கோவி.கண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

————————————————————————————————————————-

Entry filed under: குமுறல். Tags: , , , .

எச்சில் சொந்தங்கள்.. கிருஷ்ண ஜெயந்தி..ஹா..ஹா..

16 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கோவி.கண்ணன்  |  11:16 முப இல் செப்ரெம்பர் 1, 2010

    என்ன கொடுமைங்க இது…….

    http://www.hoax-slayer.com/help-pooja-find-parents.shtml

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:48 முப இல் செப்ரெம்பர் 1, 2010

      கொடுமையின் உச்சம் நண்பரே..

      மறுமொழி
  • 3. சீனா  |  11:24 முப இல் செப்ரெம்பர் 1, 2010

    கொடுமையிலும் கொடுமை

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  11:43 முப இல் செப்ரெம்பர் 1, 2010

      ஆமாம் நண்பரே..

      மறுமொழி
  • 5. கோவி.கண்ணன்  |  12:06 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

    //கொடுமையின் உச்சம் நண்பரே..//

    நீங்க செய்வது தான் கொடுமை. அந்தக் குழந்தைப் பற்றிய அப்படியான வதந்தி 2003ல் இருந்தே உலாவருகிறதாம். அதற்கான இணைப்பத்தான் மேலே கொடுத்து இருக்கிறேன்

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:25 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

      அப்படியா.மன்னிக்கவும்..இன்னும் படிக்கவில்லை நண்பரே அந்த செய்தியை..
      உண்மையில் இந்த செய்தி வதந்தியாக இருப்பின் நானும் வருந்துகிறேன்..என் மின்னஞ்சலுக்கு நேற்று வந்த செய்தி இது..ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே பதிவு செய்தேன்…

      மறுமொழி
  • 7. கோவி.கண்ணன்  |  1:35 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

    இந்தப் புகைப்படங்களைப் பார்த்தால் இவை டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்பட்ட படம் அல்ல, ஸ்கேன் செய்யப்பட்டப் படம் என்பது நன்கு தெரியும். அண்மையில் இந்த குழந்தை காணமல் போய் இருந்தால் டிஜிட்டல் புகைப்படமாக எடுத்த படம் நமக்கு கிடைத்திருக்கும். எனவே இவை பழைய இணைய வதந்திகளில் ஒன்று என்று கொள்ளலாம்.

    மேலும் பூஜா காணாமல் போன தகவல்களை கூகுளில் தேடிப்பாருங்கள்.
    http://www.google.com.sg/#hl=en&q=Circulating+Request+-+Help+Pooja+Find+Her+Parents&aq=f&aqi=&aql=&oq=&gs_rfai=&fp=6fef3bf771f4c3b7🙂

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:25 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

      இதற்கான வருத்தத்தை மேற்குறிப்பிட்ட பதிவிலேயே இணைத்து விட்டேன் நண்பரே…தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி..

      மறுமொழி
  • 9. adhithakarikalan  |  3:43 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

    இப்படித் தான் நிறைய பேர் forwardings அனுப்றாங்க, என்ன, ஏதுனு தெரியாம நாமும் அதை மத்தவங்களோட பகிர்ந்துக்கிறோம். நம்மள கடைசில காமெடியனா ஆகிட்ரானுங்க.

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  3:47 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

      ஆமாம் நண்பரே…

      மறுமொழி
  • 11. nalavirumbi  |  3:48 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

    உன் சேவை உள்ளத்திற்கு என் வாழ்த்துகள்

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  4:44 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

      நன்றி நண்பா

      மறுமொழி
  • 13. ஜெகதீஸ்வரன்  |  3:50 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

    மெயில்களில் மட்டுமி்ல்லை, குறுஞ்செய்திகலாக கைப்பேசிக்கும் இதுபோன்ற பல வதந்திகள் வருகின்றன. ஒரு முறை அந்த குறுஞ்செய்தியை படித்துவிட்டு தொடர்பு கொண்டபோது, அந்த நபர் மிகவும் வருத்தம் தெரிவித்தார். இப்படிதான் பல நாட்களாக அவருக்கு அழைப்புகள் வருகிறதாம். என்னைப் போல பலர் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.

    மிகவும் கொடுமை!

    மறுமொழி
    • 14. படைப்பாளி  |  4:43 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

      ஆமாம் நண்பரே..இதனால் நாளை உண்மையான செய்திகள் வந்தாலும்..வதந்தியோ என் எண்ணும் நிலை ஏற்ப்படும்.

      மறுமொழி
  • 15. சுல்தான்  |  11:57 பிப இல் செப்ரெம்பர் 1, 2010

    இன்னும் வந்து கொண்டேதான் இருக்கிறதா! ??🙂
    எனக்கு வந்து ஒரு இரண்டு வருடம் இருக்கும்.

    மறுமொழி
    • 16. படைப்பாளி  |  10:44 முப இல் செப்ரெம்பர் 2, 2010

      ஆமாம் நண்பரே..இன்னும் சூறாவளியாய் சுற்றி அடிக்கிறது போலும்..வதந்திகள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன..நாம் தான் உண்மை என்று நம்பி சில சமயங்களில் ஏமாந்துபோகிறோம்..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: