“கடவுள் முரளி வாழ்க”

செப்ரெம்பர் 9, 2010 at 12:23 பிப 13 பின்னூட்டங்கள்


நேற்று நடிகர் முரளி அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி அனைவரும் அறிந்தது..பல வெற்றிப்படங்களையும்,உருக்கமான,உணர்வு மிக்க காதல் மற்றும் குடும்ப பாங்கான கதைகளில் தனக்கான தனி முத்திரையை,தடத்தை பதித்தவர்..காதலுடன்,காலேஜ் ஸ்டூடண்டாகவே பல காலம் பவனி வந்தவர்…அவர் நடுத்தர வயதில் மரணமடைந்த செய்தி,அவர் ரசிகர்கள் மட்டுமின்றி நம்மை எல்லாம் கலங்க வைத்தது..

“கடவுள் முரளி வாழ்க”

-சிறு வயதில் சென்னை முழுவதும் சுவர்களில் நான் கண்ட வாசகம்.”

இப்படியோர் செய்தியை என் நண்பர் அருண் நேற்று பேஸ் புக்கில் பகிர்ந்திருந்தார்…அவரை மட்டுமல்ல,இந்த வாசகம் என்னையும் பத்து ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்து சென்றது..ஏன் சென்னை வாசிகள் பலர் பின்னோக்கி யோசித்திருக்ககூடும்.

மறந்திருக்க இயலாது.அப்படி ஓர் மறக்க இயலாத வாசகம்..

சென்னையின் சுவர்களை கட்சி விளம்பரங்கள் ஆக்ரமித்திருந்ததோ இல்லையோ “கடவுள் முரளி” ஆக்ரமித்திருந்தார்..எங்கெங்கு காணினும்,எப்பக்கம் நோக்கினும் கரிக்கட்டையால் கிறுக்கப்பட்ட எழுத்துக்கள் வெற்று சுவற்றை நிரப்பியிருக்கும்…ஆமாம் யார் அந்த கடவுள் முரளி??வேறு யார் நம்ம இதயம் நாயகன் தான்..அவர் படங்களிலே தன் இதயத்தை தொலைத்த எவனோ ஒருவனின் கிறுக்கல்கள் தான் அவை..

நிச்சயம் அவர் மீது கொண்ட பைத்தியத்தில் அவன் பைத்தியமாகி இருக்கக் கூடும்..எப்போ எழுதுகிறான்,யார் எழுதினார்கள் என்பதை அறியாமலே காலையில் நாம் திரும்புகிற பக்கமெல்லாம் அந்த வாசகம் தென்படக் கூடும்..

எந்த நடிகருக்கும் கிடைக்காத ஓர் அங்கீகாரம் அவருக்கு கிடைத்திருக்கிறது..அதன் வெளிப்பாடுதான் அது…சமீப காலமாய் அந்த வாசகம் நம் கண்களில் தென்படுவதில்லை…ஒருவேளை அவர் தன் கடவுளுக்கு முன்பே இறந்திருக்கக்கூடும்..இல்லையேல் வேறோர் ஊரில் அவர் இருக்கக்கூடும்..ஒருவேளை எங்கேனும் இருப்பின்..அங்கேயும் கடவுள் முரளி சுவர்களில் வாழக்கூடும்..

எது..எப்படியோ..தன் நடிப்பால் தமிழ் திரையுலகில் தனக்கான ஓர் இடத்தை தக்க வைத்திருந்த நடிகர் முரளியின் நினைவுகள் மக்கள் மனதில் இறவாமல் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருக்கும் என்பதில் ஐயமில்லை….

Advertisements

Entry filed under: தகவல். Tags: , , , , , .

வாடா..போடா..நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் உயிர்நீத்த உதட்டுச்சாயம்..

13 பின்னூட்டங்கள் Add your own

 • 1. mathistha  |  12:44 பிப இல் செப்ரெம்பர் 9, 2010

  அவர் ஆத்ம சாந்திக்க இறைவனைப் பிரார்த்திப்போம்…. அவர் மகனும் அவர் பெயரைக் காப்பாற்ற வேண்டும்…

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  12:46 பிப இல் செப்ரெம்பர் 10, 2010

   ஆமாம் சகோதரி..நிச்சயம் காப்பாற்ற வேண்டும்..காப்பாற்றுவார்

   மறுமொழி
 • 3. premcs23  |  2:26 பிப இல் செப்ரெம்பர் 9, 2010

  ஆத்மா சாந்தி அடைய வாழ்த்துகள்

  மறுமொழி
 • 4. தமிழ் ராம்  |  2:35 பிப இல் செப்ரெம்பர் 9, 2010

  “கடவுள் முரளி வாழ்க” இவ்வாசகத்தை எழுதியவர் மதுரையை சேர்ந்த “கே.கே. பெருமாள்”. இன்று வரை எழுதிக் கொண்டு தான் இருந்தார். சில நாட்கள் நடிகர் முரளியுடன் சென்னையில் வசித்த போது அங்கும் இதே தான் செய்தார். இப்போது என்ன செய்யப் போகிறாரோ தெரியவில்லை.

  மறுமொழி
  • 5. படைப்பாளி  |  12:44 பிப இல் செப்ரெம்பர் 10, 2010

   அப்படியா நண்பரே..நான் அந்த வாசகங்களை தினந்தோறும் சுவர்களில் பார்த்திருக்கிறேன்..இப்போதான் எழுதியவர் யாரென்பதை அறிந்தேன்..

   மறுமொழி
 • 6. adhithakarikalan  |  3:19 பிப இல் செப்ரெம்பர் 9, 2010

  அன்னாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்…

  மறுமொழி
 • 7. Mohammed  |  4:32 பிப இல் செப்ரெம்பர் 9, 2010

  hi………i’m a 15 year old blogger…..currently taking part in the “My Demand” contest……
  please read my post n support me by voting if u find it interesting….

  My post link: http://www.indiblogger.in/indipost.php?post=30629

  Greetings,
  Mohammed!

  மறுமொழி
 • 8. மாயவரத்தான்....  |  1:42 பிப இல் செப்ரெம்பர் 10, 2010

  எல்லாம் சரி தான்.

  ஆனால் எந்த ஒரு விஷயத்திலும் தெரியாத ஒரு நபரைப் பற்றி எழுதும் போது தவறியும் கூட அவர் செத்திருப்பாரோ என்ற ரீதியில் எழுத வேண்டாம் நண்பரே.

  அவரோ, அவரது உறவினர்களோ, நண்பர்களோ அதைப் படிக்க நேரிட்ட்டால் அவர்கள் மனது என்ன பாடு படும்?!

  கே.கே. பெருமாளுக்காக மட்டும் இதை சொல்லவில்லை!

  மறுமொழி
  • 9. படைப்பாளி  |  3:32 பிப இல் செப்ரெம்பர் 10, 2010

   தங்கள் கருத்தை ஏற்கிறேன் நண்பரே…இனி வரும் இடுகைகளில் இது போன்ற தவறு வராமல் பார்த்துக் கொள்கிறேன்..

   மறுமொழி
 • 10. krishnamoorthy s p  |  12:14 முப இல் செப்ரெம்பர் 11, 2010

  INI KADAUL K K PERUMAL VAALGA ENA ELUTHUVAARGAL

  மறுமொழி
 • 11. தி.தமிழ் இளங்கோ  |  2:52 பிப இல் செப்ரெம்பர் 11, 2010

  மாரடைப்பால் அகால மரணம் என்று தெரிவித்துள்ளீர்கள்.மாரடைப்பால் வரும் மரணத்தை யாரும் அகால மரணமாக சொல்வதில்லை.

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  8:09 பிப இல் செப்ரெம்பர் 12, 2010

   தாங்கள் சுட்டிக் காட்டிய தவறினை நீக்கிவிட்டேன் நண்பரே..

   மறுமொழி
 • 13. ஜெகதீஸ்வரன்  |  12:40 முப இல் செப்ரெம்பர் 13, 2010

  முரளியின் மரணம் சமூகம் கவணிக்கத்தக்கது. இறந்தவர் பற்றிய விமர்சனங்கள் கொஞ்சம் வலியை ஏற்படுத்துவதுதான். இருந்தாலும் அவர் போதைக்கு அடிமையானவர் என்ற கருத்தை சிலர் வைக்கின்றார்கள். நல்ல வேலை அதுபோல யாரும் இங்கு பதிவுசெய்யவில்லை.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,745 hits

%d bloggers like this: