தமிழ் ஊடகப் படைப்பாளிகள் மன்றம்-முதல் அமர்வு சங்கமம்

செப்ரெம்பர் 20, 2010 at 2:26 பிப 18 பின்னூட்டங்கள்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எத்தனையோ திறமைகள் ஒளிந்துக்கிடக்கின்றன.அந்த திறமைகளை அரங்கேற்ற அவகாசமோ,தேவையான வாய்ப்பு வசதியோ ஓர் சிலரை தவிர, எல்லோருக்கும் கிடைத்து விடுவதில்லை.

நம்மில் உள்ள அந்த தனித்தன்மையை வெளிக்கொணர வாய்ப்பின்றி,வாழ்வாதாரத் திற்காக ஒவ்வொருவரும் ஏதேனும் ஓர் பணியில் முடங்கி விடுகிறோம்,நம்மில் இருக்கும் அந்த படைப்பாளியை நம்முள்ளேயே முடக்கி விடுகிறோம்.

இதனால் யாருக்கும் தெரியாமல் ,தனக்கு மட்டுமே தெரிந்த,அந்த கலைஞனோ,கவிஞனோ,ஓவியனோ,நடிகனோ,எழுத்தாளனோ அந்த குறிப்பிட்ட நபருக்குள் அடங்கி அடையாளமிழந்து போகிறான்.

ஏன்?பல்வேறு மனிதர்களின் திறமையை அரங்கேற்றும், ஊடகங்களில் பணிபுரியும் ,பல்வேறு துறையினருக்கு கூட, தன் திறமையை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாமல் போகிறது..செய்திவாசிப்பாளராகவும்,நிகழ்ச்சி தொகுப்பாளராகவும்,செய்தி சேகரிப்பாளராகவும்,படத் தொகுப்பாளராகவும்,வரைகலை நிபுணராகவும்,இன்னும் பிற துறையினராகவும் அறியப்படும் பலரில் உள்ள படைப்பாளி யாருக்கும் அறிமுகமாவதில்லை…

இப்படி ஊடகத்தில் பணிபுரியும் படைப்பாளியின் படைப்புத் திறமையை, பாரறிய செய்வது,முழுக்க முழுக்க படைப்பாளியின் படைப்புத்திறனை வெளிக்கொணர வழி காண்பது,அதற்கான களம் அமைத்து அவர்களை அடையாளம் காட்டுவது, போன்ற ஊடகப் படைப்பாளிகளின் நலன் கருதி தமிழ் ஊடகப் படைப்பாளிகள் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

நெடுநாட்களாக நண்பர் சக்திவேல் இதன் செயலாக்கம் குறித்து என்னிடமும்,ஏனைய ஊடக நண்பர்களிடமும் உரையாடி,அதனை அசைப்போட்டு ,முழுவடிவமாக்கி,செம்மையாக்கவும்,செயல் படுத்தவும் அதன் ஆக்கம் குறித்து கருத்து கேட்கவும் நாள் குறித்திருந்தார்.அது குறித்து அனைவர்க்கும் கடிதம் மூலமும்,அலைபேசி வாயிலாகவும் அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது.

சொல்லியபடி 19.09.10 மாலை 4 மணிக்கு முதல் அமர்வு சங்கம நிகழ்ச்சி மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு பின்புறம் கூடியது…பெரும்பாலான ஊடக நண்பர்கள் 3.30 மணிக்கு வந்து விட்டிருந்தனர்.பிள்ளையார் சிலை கரைப்பு நாளாதலால் பலத்த பாதுகாப்பு..பிள்ளையார் எங்களை பார்த்தபடி உற்சாகமாய் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தார்..ஒரு சில நண்பர்கள் வர தாமதமானதால் 4 மணி கூட்டம் 4.30 மணிக்கு கடற்கரை மணலில் சங்கமமானது..பலூன் கட்டிய காமெராவுக்கு பக்கத்தில் எங்கள் வட்ட(மணல்)மேசை மாநாடு ஆரம்பமானது.

நண்பர்கள் க.சக்திவேல்,கோ.கோபி,அசோக் ரத்னம்,து.விஜய பாபு,இரா.விஜயராஜ்,க.கார்த்திக்கேயன்,நன்மாறன், சந்ரூ ,கா.ஜானகிராஜன்,சிவா இளஞ்செழியன்,ச.முரளி,A.V.முத்துக்கிருஷ்ணன் மற்றும் நான்(பாலாஜி ஆறுமுகம்) கலந்துகொண்டிருந்தோம்.

வரவேற்புரையை நண்பர் சக்தி வேல் வழங்கி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, நண்பர் முரளி தொடங்கி வைத்து,என் உரையையும் எடுத்தியம்ப சொன்னார்..

அதற்கடுத்து, அனைத்து ஊடகப் படைப்பாளிகளும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.அறிமுக படலமே அசத்தல்..தங்களை படைப்பாளிகள் என மெய்ப்பிக்கும் வண்ணம் தங்கள் கடந்து வந்த பாதைகளை நினைவுகூர்ந்து, நண்பர்கள் ரசனையோடு பேசியது ரசிக்க வைத்தது…

பெரும்பாலான ஊடகங்களில் இருந்தும் ஊடக நண்பர்கள் கலந்து கொண்டிருந்தனர்.அனைவரும் தங்கள் ஆக்கங்களை வெளிக்கொணர ஊக்கத்துடன் காணப்பட்டனர்.

அனைவர் கருத்தும் ஒருசேர சேகரிக்கப்பட்டது..ஊடகப் படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களை எப்படி உலகறியச் செய்வது..அவர்களுக்கான ஓர் களம் அமைப்பது..வளரும் படைப்பாளிகளை ஊக்கப்படுத்துவது போன்ற கருத்துகள் முக்கியமாய் விவாதிக்கப் பட்டன..விண்ணப்பபடிவங்கள் கொடுத்து எழுதி பெறப்பட்டன..நிகழ்ச்சி முடியும் தருவாயில் நண்பர் சக்தி தன் குறுஞ்செய்தியில் அறிவித்திருந்தபடி அனைவர்க்கும் ஓர் (high tea)சுக்கு காப்பி வாங்கி கொடுத்தார்.அதிலும் சர்க்கரை அதிகம்..நிகழ்ச்சி போலவே சுக்கு காப்பியும் சுகமாய்,சுவையாய் இருந்தது..

அடுத்த முறை கூட்டம் கூடுவதற்குள் செய்யவேண்டிய ஆரம்பப்பணிகள் செம்மைப் படுத்தப்படும் குறிக்கோளோடு நன்றி அறிவிக்கப் பட்டது..

உங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று சொல்லி எங்களுக்கான உற்சாக கைதட்டலை கடலலை எழுப்பி அனுப்பி வைத்தது..விடைப்பெற்றோம் அனைவரும்..

————————————————————————————————————————-

குறிப்பு:தமிழ் ஊடகப் படைப்பாளிகள் மன்றத்தைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள,மன்றத்தில் தங்களையும் இணைத்துக் கொள்ள விரும்பும் ஊடக படைப்பாளிகள் தொடர்புக்கு :

க.சக்திவேல்  –  9962010203

பாலாஜி ஆறுமுகம்   –  9840803022

ச.முரளி –  9003281969

Advertisements

Entry filed under: குறிப்புகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

கட்டிக்கொள்கிறாய்.. நிர்வாணம்-11

18 பின்னூட்டங்கள் Add your own

 • 1. adhithakarikalan  |  3:20 பிப இல் செப்ரெம்பர் 20, 2010

  தமிழ் ஊடகப் படைப்பாளிகள் மன்றம் வெற்றியடைய என் வாழ்த்துகள்.

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  10:51 முப இல் செப்ரெம்பர் 21, 2010

   நன்றி நண்பரே..

   மறுமொழி
 • 3. premcs23  |  3:30 பிப இல் செப்ரெம்பர் 20, 2010

  நானும் ஊடக துறையை சேர்ந்தவன்.. என் சக ஊடக நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்..

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:52 முப இல் செப்ரெம்பர் 21, 2010

   வாருங்கள் ஒன்றாய் கை கோர்த்து வெற்றியின் சிகரத்தை எட்டுவோம்..

   மறுமொழி
 • 5. arunmozhidevan  |  3:31 பிப இல் செப்ரெம்பர் 20, 2010

  I just saw “Tamil Uudaga Padaippaligal mandram” first meeting in chennai merina. I also look the photography in it. I want to more about youe mandram. I want to contact through my mother tongue, tamil. How it is possible to us. Give details about it. I heartly appreciate your efforts. Thanks in advance. Yours, Arunozhidevan .

  மறுமொழி
 • 6. arunmozhidevan  |  3:34 பிப இல் செப்ரெம்பர் 20, 2010

  I just saw “Tamil Uudaga Padaippaligal mandram” first meeting in chennai merina. I also look the photography in it. I want to more about youe mandram. I want to contact through my mother tongue, tamil. How it is possible to us. Give details about it. I heartly appreciate your efforts. Thanks in advance. Yours, Arunozhidevan .

  மறுமொழி
  • 7. படைப்பாளி  |  3:59 பிப இல் செப்ரெம்பர் 20, 2010

   நண்பரே கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து , பக்க வாட்டில் தமிழ் என்பதை தேர்வு செய்து கொண்டு,ஆங்கிலத்தில் பதிவு செய்தீர்களானால் அது நம் தாய் மொழி தமிழில் மாற்றமடையும் ..மிகவும் எளிதான வேலை.முயன்று பாருங்கள்..
   http://www.google.com/transliterate/
   எ .கா ;amma -அம்மா
   anbu -அன்பு

   மறுமொழி
 • 8. யுவகிருஷ்ணா  |  12:00 பிப இல் செப்ரெம்பர் 21, 2010

  வாழ்த்துகள் தோழர்களே!

  மறுமொழி
  • 9. படைப்பாளி  |  12:09 பிப இல் செப்ரெம்பர் 21, 2010

   மிக்க நன்றி..தாங்களும் ஊடக படைப்பாளி என்பதை நானறிவேன்..அடுத்த கூட்டத்திற்கு தங்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம்..தவறாமல் கலந்து கொள்ளுங்கள் நண்பரே..

   மறுமொழி
 • 10. அனாமதேய  |  12:57 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

  […] தமிழ் ஊடகப் படைப்பாளிகள் மன்றம்-முதல… […]

  மறுமொழி
 • 11. M.S.Vasan  |  2:22 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

  அமைப்பின் அடுத்த மீட்டிங் ?

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  3:08 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

   தேதி இன்னும் முடிவாகவில்லை..அறிவிக்கிறோம் நண்பரே.நிச்சயம் வாருங்கள்.

   மறுமொழி
 • 13. mullaiamuthan  |  4:35 பிப இல் செப்ரெம்பர் 24, 2010

  vaazhthukkal
  -kaatruveli-noolagam.blogspot.com

  மறுமொழி
  • 14. படைப்பாளி  |  10:04 முப இல் செப்ரெம்பர் 29, 2010

   மிக்க நன்றி நண்பரே..

   மறுமொழி
 • 15. anu  |  1:09 முப இல் செப்ரெம்பர் 27, 2010

  nalla muyarchi vaalzthukal….

  மறுமொழி
  • 16. படைப்பாளி  |  10:10 முப இல் செப்ரெம்பர் 27, 2010

   nandri…nandri..

   மறுமொழி
 • 17. Srikanth  |  9:01 முப இல் செப்ரெம்பர் 29, 2010

  பாசமு(பாலா,சக்தி, முரளி)டன்
  தங்கள் அழைப்பு வந்திருந்தாலும், நாஞ்சில் முப்பெரும் விழாப்பணிகளில் ஈடுபட்டிருந்தமையால் சென்னையில் இல்லை.
  தங்களின் அமைப்புக் கூட்டம் அழகுற நிகழ்ந்தமை கண்டு மகிழ்ச்சி.
  தங்களின் ஆக்கப் பணிகளுக்கு அணிலின் சேவையாக என் பங்களிப்பும் தொடரும்.
  புதிய விடியலுக்கு பூமாலை சூடி பூபாளம் பாடும் த.ஊ.ப.ம வெற்றிக்கு வாழ்த்துக்கள்
  அன்புடன்
  கண்மணிமைந்தன் ஸ்ரீகாந்த்.

  மறுமொழி
  • 18. படைப்பாளி  |  10:09 முப இல் செப்ரெம்பர் 29, 2010

   பரவாஇல்லை நண்பரே..அடுத்தக்கூட்டத்தில் நிச்சயம் கலந்து கொள்ளுங்கள்.. உங்கள் பங்களிப்பும்,வழிகாட்டுதலும் த.ஊ.ப.மன்றத்திற்கு கட்டாயம் தேவை…வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,745 hits

%d bloggers like this: