இருட்டில்..

செப்ரெம்பர் 28, 2010 at 10:28 முப 12 பின்னூட்டங்கள்


ஆளரவமற்ற அமாவாசையின்

அமைதி இரவு.

தூரத்துப் பூச்சியின் இரைச்சலில்

சலங்கையின் ஒலி.

கம்பிமீதில் காய்ந்து தொங்கும்

வேட்டியின் ஆவி அவதாரம்.

சலனமற்ற பின்னிரவில்

ஜன்னல்மூடும் சத்தம்.

காய்ந்த வயிற்றின் வேதனையில்

ஊளையிடும் நாய்.

உணவு தேடும் ஆந்தையின்

அகங்காரமிக்க அலறல்.

மின்மினிப் பூச்சியின்

கண்சிமிட்டும் ஒளி.

பதட்டத்தில் நடக்கின்றபோது

பின் தொடரும் ஓசை.

இவையெலாம்…

இல்லாத பேயை

இழுத்து வருகின்றன என்னிடம்..

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , .

நிர்வாணம்-12 கசங்கிய காகிதங்களில் கலைஞனாகலாம்!

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  12:30 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

    என் சிறுவயது ஞாபகம் வருகிறது. இப்படி பயந்த காலங்கள் உண்டு. ஒரு சிறு சம்பவம் சொல்கிறேன். என் தம்பிகளை பயமுறுத்துவதற்காக சுவற்றில் நான் ஒரு எலும்புகூடு படத்தை வரைந்து வைத்தேன். கொஞ்ச நேரம் கழித்து எல்லோரும் வெளியே செய்ன்று விளையாட போய்விட்டோம் நான் தண்ணீர் குடிக்க வீட்டுக்கு வந்தேன். நான் வரைந்த படத்தை பார்த்து நானே பயந்து விட்டேன்.

    இப்போது நினைத்தாலும் சிரிப்பாக வருகிறது! 🙂

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:36 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

      உங்களின் படமே உங்களை மிரட்டி விட்டதா..ஹா..ஹா..
      நம் சமுதாயம் நம்மை பயமுறுத்தி வைத்திருந்திருக்கிறது..

      மறுமொழி
  • 3. premcs23  |  12:33 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

    நன்றாக உள்ளது

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:38 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 5. anu  |  7:02 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

    idhu engayo ketta mari iruke?!!!!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  7:53 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

      inga dhaan…

      மறுமொழி
  • 7. அன்பரசன்  |  8:05 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

    பயமுறுத்துறிங்க நண்பா.
    Nice.

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  8:30 பிப இல் செப்ரெம்பர் 28, 2010

      நன்றிங்க நண்பா…

      மறுமொழி
  • 9. Uzhavan  |  10:53 முப இல் செப்ரெம்பர் 29, 2010

    துணிவு இருக்கின்ற பேயையும் விரட்டியடிக்கும் 🙂
    நல்ல கவிதை

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  12:59 பிப இல் செப்ரெம்பர் 29, 2010

      ஆமாம் ..நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 11. ஜெகதீஸ்வரன்  |  6:56 பிப இல் செப்ரெம்பர் 29, 2010

    ஆமாம்,. நண்பர்கள் சொல்வது போலவே எனக்கும் சிறுவயது பேய்கள் ஞாபகத்திற்கு வருகின்றன. தனிமையும் இருட்டும் எத்தனை முறை என்னை பயம் கொள்ள செய்திருக்கின்றன. விதவிதமான கதைகள், விதவிதமான பேய்கள் அப்பப்பா@.

    ஆனால் அவைகளை மறந்தேவிட்டேன் என்பதை இப்போதுதான் உணர்கிறேன். ஒரு வேளை பேய்களும் என்னை மறந்துவிட்டனவோ!.:-)

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  7:49 பிப இல் செப்ரெம்பர் 29, 2010

      ஹா..ஹா..ரசனையாய் எழுதியிருகிறீர்கள் நண்பரே..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,138 hits

%d bloggers like this: