எந்திரனும்..அந்நியனும்..

ஒக்ரோபர் 1, 2010 at 10:10 முப 17 பின்னூட்டங்கள்


அலுவலகம்,பேருந்து,உணவகம்,இணையம்,சமூக வலைப் பின்னல்கள்,நடைபாதை,தெரு,நண்பர்கள்,கழிப்பிடம் என கிட்டத்தட்ட இந்த ஓரிரு வாரங்களாகவே ஒரே டாக்தான். ஏதோ திருவிழாவை எதிர்நோக்குவது போன்று மக்களின் எதிர்ப்பார்ப்பு.பத்துப்பேரில் ஒருவர்,இருவராவது தவறாமல் அதனைப் பற்றி பேசியும்,சிலாகித்தும்,பெருமைப்பட்டும் கொண்டிருக்கிறார்கள்.

ஒருபக்கம் டிக்கெட் வாங்கும் சாதனைக்காக தங்களை தயார்ப் படுத்திக் கொண்டிருந்தார்கள்,கொண்டிருக்கிறார்கள்.இன்னொருப்பக்கம் டிக்கெட் வாங்கிய சாதனையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.100 ரூபாய் டிக்கெட் 500 ரூபாய் 1000 என்றெல்லாம் ஆங்காங்கே கொக்கரிக்கிறார்கள்..எவ்வளவு ஆனாலும் பரவால.. தலைவர் படத்தை முதல் நாள் பாக்கணும் எடு.என ஒருக்கூட்டம் கூக்குரலிடுகிறார்கள்.ரஜினி நடித்த ரோபோ என்கிற எந்திரனுக்கு டிக்கெட் வாங்குவதற்கும்,படம் பார்ப்பதற்கும் தான் இந்த அலப்பறை.. புளித்துப்போன இந்த செய்தியை திரும்பத் திரும்ப,திரும்புமிடங்களில் எல்லாம் கேட்டு வெறுத்துப்போயிருந்தேன்.

அவர்கள் படம் பார்க்கும் ஆர்வத்தில் பேசுவதாலோ,ரஜினி மீதுள்ள அபிமானத்தில் டிக்கெட் வாங்க முயச்சிப்பதாலோ அல்ல அந்த வெறுப்பு.இந்த வெறியோ,வேகமோ,உணர்வோ ஈழத்தில் உக்கிரமானப் போரில் நம் இனத்தான் செத்தானே அன்று இருந்திருக்கலாமே.அதற்காகப் போராட பயன்பட்டிருக்கலாமே.(யாருமே போராடவில்லை என்றுக் கூற நான் முன்வரவில்லை)இப்படி டிக்கெட் வாங்க அலைமோதுகிற இனமே,இளைய சமுதாயம் ஒன்று கூடியிருந்தால் வரலாற்றை திருப்பி போட்டிருக்கலாமே!குறைந்தபட்சம் இறந்தவனின் எண்ணிக்கையையாவது குறைத்திருக்கலாம்.நாமும் இனமானம் உள்ளவர்கள் தான் என்று இந்த உலகத்துக்கு உணர்த்தி இருக்கலாம்!

ஆனால் நமக்குதான் உடுத்த உடையும்,வாழ இடமும்,உண்ண உணவிருக்கோ இல்லையோ குடிக்க சரக்கு மன்னிக்க தலைவர் கட் அவுட்டுக்கு ஊத்த சரக்கும் கவலையின்றி கிடைக்கிறதே..நாம் ஏன் கவலைப் பட வேண்டும்.(இது கனடாவிலும்,லண்டனிலும்,சுவிச்சர்லாந்திலும்,அமெரிக்காவிலும் இன்னும்பிற நாடுகளிலும் சுகவாசிகளாய் இருந்து கொண்டு எந்திரனுக்காய் போராடும் போராளிகள் அனைவர்க்கும் தான்)ஈழத்தில் போராடும் தமிழனுக்கு தலைவன் என்ற அங்கீகாரத்தில் போராளி இருக்கிறான்.இங்கே சினிமா கதாநாயகன் தானே எல்லோருக்கும் தலைவன்.எவன் செத்தாலும் கவலைக் கொள்ளாது சினிமாவில் கோடிகளில் கொடி கட்டி பறக்கும் கண்ணியவான்கள் தான் தமிழ் நாட்டு சிம்ம சொப்பனங்கள்.ஹீரோவுக்கு சூட்டிங்கில் சின்ன காயம் பட்டால் கூட நம் உள்ளம் வலிக்கும்,நெஞ்சம் துடிக்கும்.நாம் இளகிய மனது உள்ளவர்கள்.தமிழனாய்,நம் இனத்தானாய்  இருந்தாலும் ஈழத்தவன் நமக்கு அந்நியன் என்று தானே இருக்கிறோம்..நமக்கேன் வலிக்கிறது.

இவன்களுக்கு வேற வேலையே இல்ல..இப்படித்தான் ஈழம்,தமிழ்ன்னு அது இதுன்னு வெட்டியா பேசுவான்க..வாங்க நாம எந்திரன் பாக்கப் போலாம் …

Advertisements

Entry filed under: குமுறல். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

மதமும்,மயிரும் ஒன்னு.. எனை புலம்ப வைத்த வறட்சியான மொழிகள்…

17 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  10:22 முப இல் ஒக்ரோபர் 1, 2010

    நண்பரே! மனித மனம் எப்போது களிப்பையே நாடுகிறது! சினிமா மோகம் இங்கே சிறு வயதிலேயே உருவாக ஆரம்பிக்கிறது. அதனால் கற்பனை மனிதனுக்கு கவலைப்படும் அளவிற்கு நிஜ உலகின் சக மனிதர்களை பற்றி எண்ணுபவர்கள் இங்கே குறைவுதான்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:09 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      ஆமாம் நண்பரே..கொஞ்சம் உணர்வுகளையும் சேர்த்துக்கொண்டால் நன்றாக இருக்குமே.

      மறுமொழி
  • 3. adhithakarikalan  |  10:36 முப இல் ஒக்ரோபர் 1, 2010

    இந்தக் கேள்விக்கு எந்த காலத்திலும் பதில் கிடைக்காது…. இந்தக் கேள்வியை கேட்கும் நீங்களும், செவி மடுக்கும் நாங்களும் தான் அந்நியர்கலாகிறோம் அவர்களுக்கு.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:10 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      ஆமாம் நண்பரே…இதை பற்றி பேசினால் நம்மை அந்நியப் படுத்தி விடுகிறார்கள்..

      மறுமொழி
  • 5. Karthick  |  10:47 முப இல் ஒக்ரோபர் 1, 2010

    Unmai sudukirathu… thozha.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:14 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      ஆமாம் தோழா..

      மறுமொழி
  • 7. Chellapayian  |  2:28 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

    Still im didnt try to see t robot movie. Bcoz ticket kidaikala nanba

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:33 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      haa..haa..theeviramaana muyarchi vetri tharum nanbaa..

      மறுமொழி
  • 9. Sivaprabu  |  4:12 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

    இவனுங்க எல்லாம் 1000 பெரியார் வந்தாலும் திருந்த மாட்டாங்க அண்ணா !!!!!!!

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  4:54 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      ஆமாம் தம்பி..

      மறுமொழி
  • 11. ஜெகதீஸ்வரன்  |  4:30 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

    இது ரஜினியின் படமோ, சங்கரின் படமோ இல்லை. சன் பிச்சர்ஸ் படம். ஆளும் வர்க்கத்தின் படத்தின் எதிர்த்தால், ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என நினைத்துவிட்டார்கள்.

    வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்கு கலைஞர் சலுகை சந்து டிக்கெட் கொடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  4:53 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      ஹா..ஹா..கலாய்கிறீங்க நண்பா..

      மறுமொழி
  • 13. jegadeeswaran  |  6:22 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

    புறக்கணிப்போம் எந்திரனை

    ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின்
    சிந்தனைகளை முடக்கி
    அரிதார அழகிகளின் அங்கங்களை காட்டி
    அதில் தொழில் செய்து
    தமிழை கொன்று
    தமிழின வேதனைகளை
    இருட்டடிப்பு செய்த
    தொலைக்காட்சி சவப்பெட்டியின்
    சங்கை நெறிக்க…!!
    புறக்கணிப்போம் எந்திரனை

    தமிழ் சமுதாயத்தின்
    சாபக்கேடாகிப்போன
    ஒரு தனிமனிதனிடமிருந்து..
    திரயுலக்கத்தின்
    மாய உலகில் மூழ்கிக்கிடக்கும்
    தமிழ் இளைஞர்களை மீட்டுக்க
    புறக்கணிப்போம் எந்திரனை

    சொந்த (எந்திரன்) ஆதாயதிர்க்காக
    IIFA வை புறக்கணித்து,
    தமிழர்களின் உணர்வுகளை
    புரிந்து கொண்டதாக தம்பட்டம் அடித்த
    அரிதார அழகியின் கோட்டம் அடக்க..!!
    புறக்கணிப்போம் எந்திரனை

    மறுமொழி
    • 14. படைப்பாளி  |  7:47 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      புறக்கணிப்பதால் மட்டும் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை நண்பரே..படத்திற்கு முன்னால்,படத்திற்குப் பின்னால் என எத்தனையோ தொழிலாளர்களின் உழைப்பு அதிலிருக்கிறது..அதனால் அவர்களின் வயிர் நிறைந்திருக்கிறது.படம் வெற்றியடையும் போதுதான் அவர்களின் அடுத்தவேளை உணவுக்கு ஆதாரங்கள் இருந்து கொண்டு இருக்கும்.இன்னும் நிறைய பேர் படம் பண்ண முன் வருவார்கள்.
      நம் இளைஞர்களிடையே படம் பார்க்க இருக்கும் இந்த வேகம்,ஆர்வம்,உணர்வு இனத்தின் மேல் இல்லை…அதிலும் உணர்வைக் காட்டுங்கள்..என்பதே எனது அவா..

      மறுமொழி
      • 15. jegadeeswara  |  11:00 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

        நிச்சயமாக..!

        பல்வேறு நாட்டு கலாசார மக்களினூடே வசித்துக்கொண்டு என் தாய் மொழி அழிவின் விளிம்பில் நிற்ப்பதை பார்க்க நெஞ்சம் பொறுக்கவில்லை. மாறும் நிலை வரை போராடுவோம், அதுவரை பயணிப்போம்.

        நன்றி

  • 16. அன்பரசன்  |  7:43 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

    நியாயமான கேள்விதான்?
    ஆனால் பதில்தான் கிடையாது..

    மறுமொழி
    • 17. படைப்பாளி  |  7:51 பிப இல் ஒக்ரோபர் 1, 2010

      ஆமாம் நண்பரே..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 185,138 hits

%d bloggers like this: