எந்திரன் 300..வலைப்பதிவு வாசகர்களுக்கு நன்றி.

ஒக்ரோபர் 9, 2010 at 10:51 முப 28 பின்னூட்டங்கள்


எனை வாழ வைக்கும் தெய்வமான எந்திரனே!

தலைவா..முதல உன்ன தொட்டுக் கும்பிட்டுக்கிறேன்.இல்லாதக் கடவுள நம்புறவன் இல்ல நான்.ஆனா நான் பார்த்த,பாக்குறக்  கடவுள் நீ..எனக்கு மட்டுமில்ல,இந்தகால தலை முறைக்கே நீதான் கடவுள்.

எப்படித் தலைவா உன்னால மட்டும் முடியுது.எங்கள எல்லாம்  இப்படி ஆட்டிப் படைக்க.. உன்மேல பைத்தியமா சுத்துறேன்.பாலும்,பீரும்தான் ஊத்தல.

காதலியா நீயான்னு பார்த்தாக் கூட அவள விட உன்மேல் தான் எனக்கு எக்கச்சக்க லவ்வு.இப்படியே சுத்தாதடா.. லூசாயிடுவன்னு காதலி சொல்றா!பரவால.. அத லூஸ்ல விடு.

தலைவா..உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ??இன்னைக்கு நான் முன்னூறாவது  பதிவ எழுதிருக்கேன்.எப்படி?எல்லாம் உன் புண்ணியத்துல தான்.உன்னோட சப்போட்ல தானே இதெல்லாம் சாத்தியமாச்சி..நீ மட்டும் மக்கர் பண்ணிருந்த..அவ்ளோதான் எம் பொழப்பு அம்பேல்..எனக்கு முழு ஒத்துழைப்பு தந்து எழுத வச்சதுக்கு  உனக்கு  நன்றி..நன்றி..

(நிறையபேரு ரஜினியோட எந்திரன நெனச்சி வந்திருப்பீங்க.எந்திரங்கிறது என்னோட கம்ப்பியூட்டர்ங்னா.. முன்னூறாவது பதிவ எழுதுறேன்..இப்படி எதாவது போட்டு பில்ட் அப்  கொடுத்தாதான் படிக்க வரவங்க நம்மளையும்  கண்டுக்கறீங்க…ஹி..ஹீ..நடிகர்கள தலைவனா ஏத்துக்குறது நம்ம blood லையே  இல்லீங்னா!! )

ஓவர் பில்ட் அப் ஒடம்புக்கு ஆகாதுன்னு எனக்கும் தெரியும்..சோ..விசயத்துக்கு வரேன்..

அடுத்து எனக்கு பதிவெழுத ஆர்வத்தை தூண்டின என் தம்பிக்கு நன்றி..அவன்தான் எனக்கு பேஜ் கிரீயேட் பண்ணிக் கொடுத்தவன்..தட் மீன்ஸ் களம் அமைத்தவன்.

பதிவுலகில் நான் காலூன்றிய ஆரம்பத்தில், என்னைத்தவிர என் பதிவைப் பார்ப்பாரில்லை..படிப்பாரில்லை..பாராட்டுவாரில்லை.முதல் முறையாய் என் பதிவிற்கு  பின்னூட்டம் இட்டு ,என் நெஞ்சில் நம்பிக்கையை துளிர் விட வைத்த, நண்பர் அடலேறு வுக்கு மிக்க நன்றி.பின்னூட்டமிடுவதோடு நின்று விடாமல் அவ்வபோது மின்னஞ்சலில்,தொலைப்பேசியில் என் அருமை பெருமைகளை பாராட்டியும்,திட்டியும் என்னை பட்டை தீட்டியவர் அவர்.

நான் பதிவெழுத ஆரம்பித்து ஆறு மாதங்களுக்கு மேல்தான் தமிழ்மணம்,தமிலிஷ்,திரட்டி போன்ற பதிவு திரட்டிகளை தெரிந்தவனானேன்.

அதற்குப் பின் ஏனைய நண்பர்கள் அறிமுகமானார்கள் பின்னூட்டங்களில்..அவர்கள் யாரும் மின்னஞ்சல்,அலைபேசியளவுக்கு அன்யோன்யம் ஆகவில்லை.விரைவில் ஆவார்கள் என்று நம்புகிறேன்.இருந்தாலும் தொடர்ந்து என் ஆக்கங்களை வாசித்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.அவர்கள் அனைவருக்கும்,அனைத்து  திரட்டிகளுக்கும்,இனிஎனக்கு நண்பர்களாகப் போகும் எதிர்கால நண்பர்களுக்கும்  என் கோடான கோடி நன்றிகளை இந்நாளில் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisements

Entry filed under: குறிப்புகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

அடடே..நம்ம குவார்டர் கோவிந்தனக் கேக்குறீங்களா?? பட்டமரம்

28 பின்னூட்டங்கள் Add your own

  • 1. adhithakarikalan  |  11:49 முப இல் ஒக்ரோபர் 9, 2010

    வாழ்த்துகள், 300 சீக்கிரம் 3,00,000யை எல்லாம் தாண்டி போக வேண்டும்…

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:41 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

      நன்றி..நன்றி..நன்றி நண்பரே.

      மறுமொழி
  • 3. premcs23  |  12:35 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

    வாழ்த்துகள் நண்பரே..

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:40 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 5. எஸ். கே  |  1:16 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

    வாழ்த்துக்கள்! தங்கள் எழுத்துக்கள் மென்மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்!

    என் மின்னஞ்சல் psych.suresh@gmail.com

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  3:17 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

      மிக்க நன்றி நண்பரே..நிச்சயம் உங்களை தொடர்பு கொள்கிறேன்..

      மறுமொழி
  • 7. சஞ்சயன்  |  3:05 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

    நன்றாக எழுதுகிறீகள். உங்கள் எள்ளல்ளை ரசித்தேன் நண்பரே.

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  3:23 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

      உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே..தொடர்ந்து வாருங்கள்.

      மறுமொழி
  • 9. புதிய மனிதா.  |  3:16 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

    வாழ்த்துகள்

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  3:21 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

      என் வலைப்பக்கதிற்க்கும் புதிய மனிதர் நீங்கள்..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..தொடர்ந்து வாருங்கள் நண்பரே ..

      மறுமொழி
  • 11. sudharshan  |  3:32 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

    முதலில் வாழ்த்துக்கள்

    “இப்படி எதாவது போட்டு பில்ட் அப் கொடுத்தாதான் படிக்க வரவங்க நம்மளையும் கண்டுக்கறீங்க”
    haha:D

    சரியா சொன்னீங்க …அதுன்னா உண்மை தான் .. ஆனா 300 ஆவது பதிவுன்னு போட்டிருந்தாலும் வந்திருப்பாங்க …

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  3:40 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

      அதுவும் சரிதான்..மிக்க நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 13. Elango  |  7:31 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

    // என்திரங்கிறது என்னோட கம்ப்பியூட்டர்ங்னா.. //
    Hahahha.. Nice.

    மறுமொழி
    • 14. படைப்பாளி  |  7:57 பிப இல் ஒக்ரோபர் 9, 2010

      ரொம்ப நன்றிங்னா..

      மறுமொழி
  • 15. அடலேறு  |  3:59 முப இல் ஒக்ரோபர் 10, 2010

    பாலா நான் என்ன சொல்லட்டும், பதிவுலகில் கூர்மையாய் கவனிக்கப்பட வேண்டியவர் நீர்.விளிம்பு நிலையில் நிற்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள். இன்னும் நிறைய நிறைய பதிவுகள் எழுதுங்க.வார்த்தைகளற்ற இந்த நிமிடத்தில் நேரில் இருந்திருந்தால் ஆரத்தழுவி ஒரு பாராட்டை தெரிவித்திருப்பேன். நண்பேன்டா !!! 🙂

    மறுமொழி
    • 16. படைப்பாளி  |  9:13 முப இல் ஒக்ரோபர் 10, 2010

      மிக்க நன்றி நண்பா..தங்கள் வார்த்தைகளும் ,தாங்கள் என்மீது வைத்துள்ள அன்பும்,உணர்வும் எமை மெய்சிலிர்க்க வைக்கின்றன..அருகாமையில் இல்லாவிடினும் தங்கள் அரவணைப்பை உணர்கிறேன்..நன்பேண்டா!!

      மறுமொழி
  • 17. ஜெகதீஸ்வரன்  |  1:22 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

    உங்கள் பதிவில் நானும் என் பழைய நினைவுகளில் மூழ்கினேன். வலைப்பதிவினைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் யாராவது வாரங்களா இல்லையான்னு கூட தெரியாம தவிச்சு போயிருந்தேன்.

    அதைவிட ஒருத்தர் வந்து பின்னூட்டமிடறதுங்கறது, அப்பப்பா எல்லையற்ற சந்தோசமான விஷயம். அப்புறம் மெல்ல வலைபதிவுலம் புரிஞ்சு, இப்ப வருசம் கடந்து நாட்கள் ஓடிக்கிட்டு இருக்கு.

    கவிதைகளை தொகுத்து தனி பிளாக் போடுங்க. அதுல கவிதை எழுதனுன்னு அவசியம் இல்லை. அது ஒரு தனி சேகரிப்பா இருக்கட்டும்.

    ஏன்னா கவிதையை ரசிக்கிற எண்ணத்தோட வரவங்களுக்கு கட்டுரைகள் ஒரு பெரிய இடஞ்சல தெரிவதாக சொன்னார்கள்.

    மறுமொழி
    • 18. படைப்பாளி  |  8:07 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

      அப்படியா??நன்றி நண்பரே.உங்கள் ஆலோசனைகள்,பின்னூட்டங்கள் எம்மை ஊக்கப்படுத்துகின்றன..தொடர்ந்து வாருங்கள்.ஆதரவு தாருங்கள்…

      மறுமொழி
  • 19. ஜெகதீஸ்வரன்  |  1:26 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

    எந்திரன் 300 என்று பதிவு தலைப்பு போடும் போதே நீங்க வாசகளோட நாடிதுடிப்பை பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டீங்கன்னு தெரியுது.

    அப்புறம் என்ன இனி முன்னூறு மூவாயரமுன்னு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்.

    வலைப்பதிவின் மூலம் கிடைத்த நண்பர்களில் நீங்களும் ஒருவர்.

    மென்மேலும் வலைப்பதிவு வாழ்க்கை சிறக்க வாழ்த்துகள்.

    மறுமொழி
    • 20. படைப்பாளி  |  8:11 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

      வலைப்பதிவில் எனக்கும் கிடைத்த மிக முக்கிய நண்பர்களில் நீங்களும் ஒருவர்.உங்கள் ஆதரவுடன் என் வலைப் பதிவு வாழ்க்கை தொடரும்….

      மறுமொழி
  • 21. Sri  |  8:36 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

    Congratulations

    மறுமொழி
    • 22. படைப்பாளி  |  10:14 முப இல் ஒக்ரோபர் 11, 2010

      thank you very much dear..

      மறுமொழி
  • 23. padmahari  |  10:20 பிப இல் ஒக்ரோபர் 10, 2010

    //நிறையபேரு ரஜினியோட எந்திரன நெனச்சி வந்திருப்பீங்க.எந்திரங்கிறது என்னோட கம்ப்பியூட்டர்ங்னா.. முன்னூறாவது பதிவ எழுதுறேன்..இப்படி எதாவது போட்டு பில்ட் அப் கொடுத்தாதான் படிக்க வரவங்க நம்மளையும் கண்டுக்கறீங்க//
    இது வெயிட்டு….. நெத்தியடியும்கூட…!!

    நண்பர் பாலாவுக்கு, முன்னூறாவது பதிவு கண்டமைக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்! இன்னும் அழகான பல பதிவுகள் எழுதி மற்ற நண்பர்கள் சொன்னது போல எண்ணிக்கையில் மட்டுமல்லாமல், இந்த சமுதாயத்தை ஏதேனும் ஒரு (நல்ல) வகையில் பாதித்து, மாற்றங்களை தோற்றுவிக்கும்படியான பதிவுகளை நிறைய எழுத வேண்டுமென்பது என் வேண்டுகோளும், ஆசையும்! ஏற்றுவார் ஏற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், நமக்கென்று வகுத்துக்கொண்ட பாதையில் முன்னேறிச்செல்வோம். நல்லதே நடக்கும்.

    //ஹி..ஹீ..நடிகர்கள தலைவனா ஏத்துக்குறது நம்ம blood லையே இல்லீங்னா!! //
    இப்படியொரு வரியை பார்க்குறதுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. காரணம் நெறைய….முக்கியமானதுன்னா, சினிமா பத்தியும், நடிகர்கள் பத்தியும் (நம்மள மாதிரியே) இப்படியொரு புரிதல் இருக்குற ஒரு நண்பரைப் பார்த்தது, மத்தவங்களும் திருந்துறமாதிரி சும்மா நடுமண்டையில நங்குன்னு குட்டுன மாதிரி “நச்சுன்னு” சினிமா மோகம் பத்தி சொன்னது! மீண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள், உங்கள் வலைப்பயணம் செவ்வனே தொடர…..
    நட்புடன்,
    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

    மறுமொழி
    • 24. படைப்பாளி  |  11:50 முப இல் ஒக்ரோபர் 11, 2010

      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே..ஒத்த சிந்தனையுள்ள உங்களைப் போன்ற நல்ல நண்பர்களின் கருத்துகளுக்கு நான் என்றுமே கடமைப்பட்டவன்.என்னால் இயன்ற அளவு சமுதாயத்துக்கு பயன்தரும் வகையில் படைப்புகள் படைக்க முயற்சிக்கிறேன் தங்களின் ஆதரவோடு..உங்களைப் போன்ற ஓர் நல்ல மனிதரை,நல்ல நண்பரை பெற்றதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்.அதற்கு மீண்டும் ஒருமுறை என் நன்றியைஉரித்தாக்குகிறேன்.

      மறுமொழி
  • 25. mathistha  |  12:12 முப இல் ஒக்ரோபர் 11, 2010

    தங்களது 300 செவாக் அடித்த 300 ஐவிட ஜொராயிருக்கிறது.. வாழ்த்துக்கள்…

    மறுமொழி
    • 26. படைப்பாளி  |  11:51 முப இல் ஒக்ரோபர் 11, 2010

      ஹா..ஹா..மிக்க நன்றி நண்பரே..தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் வாழ்த்தும்,கருத்துகளுமே என்னை எழுதவைக்கின்றன..

      மறுமொழி
  • 27. prabha  |  10:12 பிப இல் ஒக்ரோபர் 12, 2010

    neenga kalakunga anna….

    மறுமொழி
    • 28. படைப்பாளி  |  10:30 முப இல் ஒக்ரோபர் 13, 2010

      nandri thambi..

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: