என் பதிவும்,மதவெறியரின் கோபமும்

ஒக்ரோபர் 17, 2010 at 8:55 முப 16 பின்னூட்டங்கள்


இன்றையக் காலக்கட்டத்தில் அனைத்து துறைகளையும் கடந்து கணிப்பொறியின் பயன்பாடு அளப்பரியது.நம் பொழுதைப் பெரும்பான்மையாக கணிப்பொறியின் ஊடாகவே கழிக்க வேண்டியிருக்கிறது.வேலையாகினும்,பொழுது போக்காயினும்,செய்திகள் அறிவதாயினும் இன்னும் ஏனைய செயல்பாடுகளுக்கும் கணினியின் செயற்பாடு செயற்கரியது.

முக்கியமாய்..இப்போ மக்களினூடே  அதிகரித்து வரும் வலைப்பூ எழுதும் பழக்கம்.பெரும்பான்மையோர் தமக்கான ஓர் வலைப்பூ பக்கத்தை தேர்வு செய்து எழுதுவதை தம் கடமையாக செய்து வருகின்றனர்.அதில் தங்கள் சொந்த அனுபவங்கள்,கதை,கவிதை,கட்டுரை,தொழில்நுட்பம் என அவரவர்களுக்கு தெரிந்த,அறிந்த,பிடித்த விசயங்களை எழுதியும் பகிர்ந்தும் வருகிறார்கள்.

மேலும் வலைப்பூ என்பது ஓர் தனிமனிதனின் திறமையை வெளிக்கொணரும் களமாக செயல்படுகிறது.முன்னெல்லாம் ஒருவர் தன் தனித்தன்மையை வெளிக்கொணர வெகுஜன ஊடகங்களான நாடகம்,கூத்து,எழுத்து,பத்திரிக்கை,வானொலி,திரைப்படம்,தொலைக்காட்சி என ஏதேனும் ஒன்றை எதிர்ப்பார்த்து தேடிப்போய் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே திறமையை அரங்கேற்றும் சூழல் இருந்தது.ஆனால் இன்றைய சூழலில் வலைப்பூக்களின் ஊடாக..ஓர் சராசரி மனிதன் கூட தன்னை சாதனை நாயகன் ஆக்கிக் கொள்ள இயல்கிறது.

ஒருவர் என்ன எண்ணுகிறாரோ,இல்லை என்ன எழுத,எதை வெளிப்படுத்த முயல்கிறாரோ அதை எழுதவும்,வெளியிடவும் சுதந்திரம்,களம் கிடைத்திருக்கிறது.தனக்கான ஓர் பக்கம் அமைத்து அதில் தனக்கு தெரிந்ததை ,தாம் அறிந்ததை எழுதி தம்மை செம்மையாக்கிக் கொள்ள முயல்கிறார்கள்.

கதை,கவிதை,கட்டுரை என அவரவர்களுக்கான பாணியில் ஒவ்வொருவரும்  எழுதுகிறார்கள்.இதை இப்படித்தான் எழுத வேண்டுமென்ற எந்த இலக்கண வரையறைகளும் இங்கு இல்லை.வரையறைகளுக்கு உட்பட்டது எங்கும் வளர்வதும் இல்லை.ஓவியத்துறையில் எப்படி இசங்கள் மாறினவோ,திரைத்துறையில் எப்படி நான் லீனியர் வந்தனவோ,அதுப்போன்று இலக்கியத்துறையில் மரபுக்கவிதை புதுக்கவிதையானது,புதுக்கவிதை ஹைக்கூவானது என பரிணாமம் மாறிக்கொண்டு தானிருக்கும்.அவ்வாறே தற்போது வலைப்பூக்களிலும் கவிதையின் வடிவங்கள் மாறி ஒவ்வொருவரிடமும் ஓர் பாங்கு அல்லது பாணி தெரிகிறது.

ஆனால் அறியாமையில் இன்னும் சிலர் இது மரபு,இதை இப்படித்தான் செய்யவேண்டும்.அறியாமல் நீ இப்படி எழுதுகிறாய்.நீ எழுதுவதற்கு தகுதியற்றவன் என்கிற ரீதியில் ஏதோ தாம் வள்ளுவனைப் போலவும்,கம்பனைப் போலவும் கற்பனை செய்து கொண்டு அடுத்தவனுக்கு அறிவுரை மன்னிக்க அடுத்தவரின் எழுதும் ஆர்வத்தை குறைத்து,இழிவுப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

அதற்காக கருத்துக் கூறுவதோ விமர்சனம் செய்வதோ தவறு என்றுக் கூற நான் முன்வரவில்லை.ஒருவர் சொல்கின்ற கருத்து நியாயமானதாகவும்,அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும்,செம்மைப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

ஒருவர் மனதை புண்படுத்தும் நோக்கத்திலோ, தனிமனிதர் மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பை உமிழ, தன் தனிப்பட்ட காழ்ப்புண ர்ச்சியைக் காட்ட மட்டுமே பயப்படுத்தக் கூடாது.அவ்வாறானவர்கள் அறிவுரை சொல்லவோ கருத்துக் கூறவோ தகுதியற்றவர்கள்.

அப்படித்தான் நேற்று நான் எழுதிய “அழுக்கான சமுதாயம்” என்ற கவிதைக்கு பின்னூட்டமிட்ட ரமணன் என்பவர்

“வாக்கியத்தை மடித்து எழுதினால் அது கவிதை ஆகாது . என்ன சொல்ல வருகிறீர்கள் ? வீடும், ஆயுதங்களும் அழுக்காக இருக்க வேண்டுமா ? சமுதாயத்தை சீர் திருத்துவதற்கு எளிய வழி தனி மனித ஒழுக்கம் . புரட்சிக் கவிதை என்ற பெயரில் உரை நடை எழுதுவது கவிதையும் இல்லை ,சமுதாயதிற்கு அதனால் பயனும் இல்லை . தமிழில் கவிதை எழுதப் பழகுவது நன்று. இயலவில்லை எனில் ,ஒதுங்குவது தமிழுக்கு நல்லது “.

என்று என்மீது ஓர் கவிகுற்றசாட்டை முன்வைத்துள்ளார்.இந்தப் பின்னூட்டத்தை கண்டுகொள்ளாமல்,என்னால் புறந்தள்ளி போயிருக்க முடியும்.ஆனால் இதுப்போன்ற ஆட்களால்,கவிதைகளைப் பற்றிய தவறானக் கணிப்பு,வலைப்பூவில் கவிதைகளை எழுத வந்திருக்கும் புது கவிஞர்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்தப் பதிவை எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன்.

சரி அவர் என் மீது சுமத்தியிருக்கும் குற்றசாட்டைப் பார்ப்போம்.

//”வாக்கியத்தை மடித்து எழுதினால் அது கவிதை ஆகாது .புரட்சிக் கவிதை என்ற பெயரில் உரை நடை எழுதுவது கவிதையும் இல்லை ,சமுதாயதிற்கு அதனால் பயனும் இல்லை . தமிழில் கவிதை எழுதப் பழகுவது நன்று. இயலவில்லை எனில் ,ஒதுங்குவது தமிழுக்கு நல்லது ” //

முதலில் கவிதை என்றால் என்ன?.இவர் கவிதை என்று எதை விளைகிறார்?மரபுக்கவிதை மட்டுமே கவிதை என்கிறாரா?கவிதையைப் பற்றி குறைகானுவதற்கு முன் மரபுக்கவிதை,புதுக்கவிதை,ஹைக்கூ போன்றவற்றைப் படித்து கவிதைகள் என்றால் என்ன என்பதை இவர் தெரிந்து கொள்ளட்டும்.

காலத்திற்கும் ,பேச்சுவழக்குக்கும்,மாறிவரும் நாகரீகங்களுக்கும் ஏற்ப எழுத்தும் மாற்ற மடையும்.மரபும் மாறும்..அவ்வாறே மாறியும் வந்துள்ளது.எந்த ஒரு இலக்கியத்தையும் இலக்கண வரையறைக்கு உட்படுத்த முடியாது என்பதே நிதர்சனம்.மேலும் என் கவிதை பற்றிய விமர்சனத்தில் ரமணன்

“என்ன சொல்ல வருகிறீர்கள் ? வீடும், ஆயுதங்களும் அழுக்காக இருக்க வேண்டுமா ? “-என வினவியிருந்தார்..

வீடும் ,ஆயுதங்களும் அழுக்காக இருக்க வேண்டும் என்பதில்லை என் கருத்து..தினமும் அதை சுத்தப் படுத்து,தூய்மையாக வை.அதற்கு முன் உன் உள்ளத்தை தூய்மையாக்கு.சமுதாயத்தில் உள்ள பிற்போக்குத்தனமான அழுக்குகளை நீக்கு என்பதே என் கவிதையின் சாரம்.இதைப் படித்துப் பார்த்தால் பிறந்தக் குழந்தைக் கூட அதன் சாராம்சத்தை உணரும்.ஆனால் ரமணன் அதன் சாரம் உணராமல் ஏதோ பிதற்றி இருக்கிறார்.

சரி விசயத்துக்கு வருவோம்..

எமக்குதான்  தமிழ் எழுத வரவில்லைப் போலும்..அந்த ஆசானிடம் நாம் கேட்டாவது தமிழ் கற்றுக்கொண்டு இனி பதிவெழுதலாம் என யோசித்து அவர் வலைப்பூவை திறந்து பார்த்தேன்.ramanan50’blog இதுதான் அவரின் வலைப்பூ பெயர்.ஆங்கிலத்தில் பதிவெழுதும் இவர் நமக்கு அறிவுரை சொல்லவும்,ஆசானாகவும்  முயற்சித்திருக்கிறார்.

அப்போதான் எனக்கு விளங்கிற்று..இவரின் கோபம் என்மீதோ,என் எழுத்துக்களின் மீதோஇல்லை.நான் எழுதியக் கவிதையின் கருத்தின் மீது கோபம் கொண்டிருக்கிறார்.

ஆம்..இந்த ரமணன் , மக்களை மூட நம்பிக்கைக்கு உள்ளாக்கும் ஓர் மதவாதி.மேலும் எட்டு ஆண்டுகள் வேதங்களையும்,இந்துமதப் புத்தகங்களையும் படித்துள்ள ஓர் மத வெறியர்.அதனால் ஆயுதபூஜைக்கு நான் எழுதியக் கவிதையின் சாரத்தை அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அந்த வெறியின் வெளிப்பாட்டையே பின்னூட்டமாக எழுதியும் இருக்கிறார்.இவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்வது ஒன்றுதான்.

இதப்படிங்க மொதல்ல..

வாசகர்கள் சரஸ்வதியையே கேட்கட்டும்.

மதமும்,மயிரும் ஒன்னு..


Advertisements

Entry filed under: கட்டுரை. Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , .

அழுக்கான சமுதாயம்! நிர்வாணம் – 15

16 பின்னூட்டங்கள் Add your own

 • 1. karthik  |  9:40 முப இல் ஒக்ரோபர் 17, 2010

  நண்பரே, அவரவர் நம்பிக்கை அவரவருக்கு. உங்களுக்கு வெறி என்று தென்படுவது அடுத்தவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை. இதனால் ரமணனின் பின்னூட்டத்தை நான் ஆதரிப்பதாக நினைக்க வேண்டாம்.

  ஆனால் நீங்கள் நீங்கள் கொடுத்துள்ள உதாரண சுட்டிகள் தவறானவை. அவையும் மக்களிடயே தவறான கருத்துக்களை பொய்யான விஷயங்களை பரப்புபவை .

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  11:03 முப இல் ஒக்ரோபர் 17, 2010

   தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே.ரமணனின் தவறான பின்னூட்டம் தான் எம்மை இப்படி எழுத வைத்திருக்கிறது நண்பரே.

   மறுமொழி
 • 3. ramanan50  |  10:35 முப இல் ஒக்ரோபர் 17, 2010

  எண்ணங்களைச் செம்மைப்படுத்தவும் ,வளம் மிக்க தமிழை நன்கு ஆள வேண்டும் என்ற ஆதங்கத்தில் எனது கருத்து முன் வைக்கப்பட்டது .
  கவிதை என்பதற்கு இலக்கணம் சொல்லுமளவுக்கு நான் தமிழ் அறிந்தவனல்ல ,சென்னை பல்கலைக் கழகத்தில் நான் பயின்ற வருடத்தில் தமிழில் (இளங்கலை) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவன் ,Dr .மு.வ ,கி .வா .ஜ .,பொன்வண்ணன் ,ப.இராமன், அவர்களிடம் தமிழ் எதோ கேட்டதுண்டு ,கவியரசு கண்ணதாசனின் நண்பன்,ஜெயகாந்தன்,சுஜாதா ,அகிலன் போன்றோரின் பரிச்சயம் என்ற முறையில் தமிழ் கவிதை ,புதுக்கவிதை,மரபுக் கவிதை பற்றி அளவளாவியதுண்டு ..இதைத் தவிர தமிழில் எனது பயிற்சி சொல்லுமளவிற்கு இல்லை.
  என்னைப்பற்றி எழுதவேண்டும் என்பதற்காக எனது வலைப்பதிவில் உள்ள ஒரு சிறு குறிப்பை வைத்துக்கொண்டு மத வாதி எனக் கூறுமுன் எனது வலைப்பதிவில் Religion ,Hinduism ,Indian philosophy பகுப்பில் உள்ள கட்டுரைகளைப் படித்தால் நல்லது .
  சமுதாயத்தில் உள்ள அழுக்குகள் ,உதாரணமாக ,தீண்டாமை, ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை..
  அதை செயல் படுத்துவது தலையாய கடமை ; செயல் தேவை .
  மேலும் இந்து மதம் என்பது என்ன என்று ஆதார பூர்வமாக அறிந்து கொண்டு விமரிசனம் செய்வது நன்று.
  Link ;
  http://books.google.co.in/books?id=4zMY2qURR-8C&printsec=frontcover&dq=custom+and+manners+of+Hindus&hl=en&ei=S-2WTPLlBI6ycd3diKQF&sa=X&oi=book_result&ct=result&resnum=1&ved=0CCkQ6AEwAA#v=onepage&q=custom%20and%20manners%20of%20Hindus&f=பாலசே
  தமிழரின் உன்னத கலாசாரத்தை அறிய , History of The Tamils ,ப.த.ஸ்ரீனிவாச ஐயங்கார் , நூலைப் படிக்கவும் .
  நீங்கள் கொடுத்திருக்கும் ‘மதமும் மயிரும் ஒண்ணு ‘ என்னும் தலைப்பே ,தமிழ் மற்றும் தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் .

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  10:59 முப இல் ஒக்ரோபர் 17, 2010

   ///தமிழில் கவிதை எழுதப் பழகுவது நன்று. இயலவில்லை எனில் ,ஒதுங்குவது தமிழுக்கு நல்லது//
   ரமணன் அவர்களே தாங்கள் எனக்கு எழுதிய பின்னூடத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்க்கவும்..
   தாங்கள் சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழில் (இளங்கலை) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவன் என்பது முக்கியமல்ல..,Dr .மு.வ ,கி .வா .ஜ .,பொன்வண்ணன் ,ப.இராமன், அவர்களிடம் தமிழ் கேட்டதோ ,கவியரசு கண்ணதாசனின் நண்பன் என்பதோ ,ஜெயகாந்தன்,சுஜாதா ,அகிலன் போன்றோரின் பரிச்சயம் உள்ளவர் என்பதோ முக்கியமன்று..
   ஒருவருக்கு பின்னூட்டம் இடும் போது எப்படி எழுத வேண்டும் என யோசித்து எழுதியிருக்க வேண்டும்.
   நீங்கள் மேற்குறிப்பிட்டிருக்கும் மாமேதைகள் அனைவரும்,வளருபவனை வாழ்த்தத்தான் செய்வார்களே தவிர..வசைபாட மாட்டார்கள்.
   தமிழை விட்டு எம்மை ஒதுங்கி இருக்க சொல்ல உமக்கென்ன தகுதி இருக்கிறது என்பதை ஒருமுறை யோசித்துப் பார்க்க வேண்டும்..
   இந்து மதத்தைப் பற்றியோ,எந்த மதத்தைப் பற்றியோ அறிந்து கொள்ளும் அவசியம் எமக்கில்லை..
   எம்மை பொறுத்தவரை மக்களை மூடநம்பிக்கையில் தள்ளும் முதல் கருவியே மதம்தான்.

   மறுமொழி
 • 5. ஜெகதீஸ்வரன்  |  11:52 முப இல் ஒக்ரோபர் 17, 2010

  ஆயுதங்கள்

  கழுவப்பட்டு

  பூஜையில்..

  சமுதாயத்தின்

  அழுக்குகள்

  அப்படியே!

  இந்தக் கவிதையின் புரிதல்கள் இல்லாமல் இதற்கென தனிபதிவையும் இட வைத்துவிட்டார்கள். ஒரு வாசகனாக நான் புரிந்துகொண்டது, ஆயுதங்கள் தூய்மை செய்யப்படுகின்றன. சமூகம் தூய்மையாக இல்லை என்ற ஆதங்க உணர்வைதான்.

  இங்கு பதிவு எழுத வந்ததே ஒரு சுகந்திரத்திற்காக. நாம் ஒரு கவிதையை எழுதி, அதை புத்தகத்திற்கு அனுப்பி, அது அவர்களுக்கு பிடித்திருந்து, அதை பிரசுகம் செய்ய பக்கமிருந்து, பிரசுகித்து, அதன் பின் வாசர்களை சென்றடையும் காலகட்டத்தில் நினைத்த நிமிடத்தில் இங்கே கவிதைகள் வாசகர்களை சென்றடைந்து கொண்டிருக்கின்றன.

  இலக்கணம் இல்லாத தமிழுக்காக வலைப்பூக்கள் வரவேற்கப்படுகின்றன. எழுத்துப்பிழைகளுடன் எழுதும் வலைப்பூக்கள் இருக்கின்றன. வரைமுறைகளை பொருட்படுத்தாமல் இங்கே எல்லாவற்றையும் வரவேற்க தயாராகுங்கள் நண்பர்களே!. அதுவே தமிழை வளர்க்கும்.

  நண்பர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழச்சியின் தீவிர வாசகன் நான். அவரின் மற்றொரு கவிதையில் இன்னும் தீவிரமாய் கேள்வி கேட்டிருப்பார்.

  அவர்களுடைய கவிதையை இணைத்தமைக்கு நன்றி!.

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  5:11 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

   ஆமாம் நண்பரே..ஏனையோர் பயிற்சிக்காகவும்,பகிர்தலுக்காகவும்தான்,எழுத வருகிறார்கள்..அவர்களை இவரைப் போல ஆட்கள் எழுதவிடாமல் முடக்கி விடுகிறார்கள்..அதனாலேயே இப்பதிவை எழுதினேன்..தங்களின் மேலான கருத்துக்கு நன்றி சகோதரா!

   மறுமொழி
 • 7. எஸ். கே  |  12:22 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

  என்ன சொல்வதென்றே தெரியவில்லை நண்பரே.
  அவர் ஒரு வேளை தமிழ் வளர விரும்பினால் தவறில்லை. அது தங்கள் கவிதைகளில் இல்லை என்று கூறுவது தவறுதான். மாற்றுக்கருத்து எப்போதுமே மனதை புண்படுத்தக் கூடாது.

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  5:13 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

   ஆமாம்..நன்றி நண்பரே…

   மறுமொழி
 • 9. ssrsukumar  |  12:39 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

  இந்த கவிதை!யில் அர்த்தமும் ஆதங்கமும் இருக்கிறது.ஈ என்று இழிக்கவில்லை.உன் நாகரீகமாக பதிவு.ஊளைகளை புறந்தள்ளு.எண்ணம் நல்லது.ஏளனங்கள் குப்பை.ஐயம் இல்லை.ஒன்றும் புரியாமல் இருக்கும் மக்கள் ஓஹோ என்று வரவேண்டியவர்கள் என்ற தொலை நோக்குடன் எழுதப்பட்டுள்ளது.ஔவையாரையே குறை சொல்லும் உலகம் இது. அஹ்ரினை (அக்கு)யும் இங்கே உண்டு.மாற்றுக்கருத்தினையும் உணரவேண்டும்.(அ,ஆ,இ,ஈ. முறைப்படுத்தி படிக்கவும்)

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  5:17 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

   அழகிய கவிதையுடன் கூடிய தங்கள் கருத்து, அருமை .

   என் தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..மீண்டும் வாருங்கள் நண்பரே..

   மறுமொழி
 • 11. அடலேறு  |  6:03 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

  நண்பரே உங்கள் கவிதை லலிதமானது. சபை நாகரீகமும் , புரிந்துகொள்ளுதலும் இல்லாத ஆட்களிடம் ஏன் நேரத்தை கெடுத்துக்கொள்ள வேண்டும்.

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  6:49 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

   ஆமாம் நண்பரே..
   இவர் போன்றவர்கள்,மற்றவருக்கு பின்னூட்டம் இடும் போது வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும் என்பதற்காக தான் எழுதினேன் நண்பா..

   மறுமொழி
 • 13. அடலேறு  |  6:04 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

  @ரமணன்

  //வீடும், ஆயுதங்களும் அழுக்காக இருக்க வேண்டுமா ?//

  ஒரு கவிதையின் அர்த்தத்தை கூட முழுதாக உள்வாங்காமல் விவாதம் செய்வது ஏற்புடையதல்ல‌

  //புரட்சிக் கவிதை என்ற பெயரில் உரை நடை எழுதுவது கவிதையும் இல்லை//

  இங்கே யாரும் புரட்சியாக கவிதை எழுதுகிறோம்
  இங்கே வ‌ந்தால் புர‌ட்சிக்க‌விதை கிடைக்கும் என‌ விளம்ப‌ர‌ம் செய்ய‌வில்லை. உரைந‌டை க‌விதை இல்லை என்று எவ‌ர் சொன்ன‌து.

  //தமிழில் கவிதை எழுதப் பழகுவது நன்று.
  இயலவில்லை எனில் ,ஒதுங்குவது தமிழுக்கு நல்லது//

  ம‌திப்பிற்குரிய‌ ர‌ம‌ண‌ன் இங்கே விவாத‌ம் ப‌திவு ப‌ற்றி தான் சும்மானாச்சுக்கும் சொல்லிப்போக‌லாம் என “தமிழில் கவிதை எழுதப் பழகுவது நன்று” என்று உங்க‌ள் அறிவுரையை கேட்ப‌த‌ற்கு அல்ல‌

  //ஒதுங்குவது தமிழுக்கு நல்லது//
  ஒரு மான‌ம்கெட்ட‌ ச‌மூகம் இலங்கையில் தொப்புள்கொடி ச‌கோத‌ர‌ ச‌கோதிரிக‌ளை பாலிய‌ல் வ‌ல்லுர‌வுக்கு உட்ப‌டுத்தும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருந்த‌தாம், அதுவ‌ல்லாம் ந‌ல்லது ஒருவ‌ர் க‌விதையில் இருந்து ஒதுங்கிக்கொள்வ‌தால் தான் த‌மிழுக்கு ந‌ல்ல‌தா.

  முதலில் கவிதையை புரிந்து கொள்ளுங்கள். இல்லை எனில் புரிந்து கொள்ள முயற்சியாவது செய்யுங்கள். அதை விட்டு பேச வேண்டும் என்பதற்காக் பேசுவது தடித்ததனம்.

  ‌@ படைப்பாளி நண்பா கவிதை மிக அருமை

  மறுமொழி
  • 14. படைப்பாளி  |  6:46 பிப இல் ஒக்ரோபர் 17, 2010

   தங்களின் தெளிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி நண்பா..

   மறுமொழி
 • 15. adhithakarikalan  |  10:49 முப இல் ஒக்ரோபர் 18, 2010

  காட்டமான பின்னூட்டத்திற்கு, காட்டமான பதிவு…
  அவர் தனது கருத்தை கொஞ்சம் மிதமாக சொல்லி இருக்கலாம், ஒதுங்கி கொள் என்று சொன்னது அதிகப்பிரசங்கித்தனமான வாக்கியம்தான். இலக்கணம் மீறும் போது தான் புதுவகை படைப்பு உருவாகும்.

  மறுமொழி
  • 16. படைப்பாளி  |  11:36 முப இல் ஒக்ரோபர் 18, 2010

   ஆமாம்..மிக்க நன்றி நண்பரே..

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: