அமாவாசை இருட்டில் அவள்..

ஒக்ரோபர் 19, 2010 at 10:13 முப 13 பின்னூட்டங்கள்


  • மண்மீதில் இப்படியோர்

மங்கையா!

உன் அழகைக்கண்டு

ஆச்சர்யம் கொண்டு

பார்த்த மாத்திரத்தில்

முகம் மலர்ந்ததோ

நிலவு

-பௌர்ணமியாய்!

  • நிலவும் பெண்னன்றோ

பொறாமைக் கொண்டனளோ!

உன்னழகை இருட்டடிப்பு

செய்வதற்காய்

இருக்கின்றாள் கண்மூடி

-அமாவாசையாய்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

நிர்வாணம் – 15 உன்னைப்போல்தான் நானும்!

13 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  10:21 முப இல் ஒக்ரோபர் 19, 2010

    பெண்ணும் நிலவும் ஒன்றுதானோ! அருமையான வரிகள், ஒப்பீடு!

    மறுமொழி
  • 3. அன்பரசன்  |  10:31 முப இல் ஒக்ரோபர் 19, 2010

    அருமை நண்பரே!

    மறுமொழி
  • 5. Narayanan  |  4:27 பிப இல் ஒக்ரோபர் 19, 2010

    that’s true.But how to see her face at dark night? that is my doubt.
    Please rectify my Doubt.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  9:26 பிப இல் ஒக்ரோபர் 19, 2010

      இருட்டிலும் அவள் முகம் ஒளிரும்..கண்டுப்பிடிப்பது எளிது!

      மறுமொழி
  • 7. adhithakarikalan  |  10:35 முப இல் ஒக்ரோபர் 20, 2010

    நிலா, சூரியனிடமிருந்து ஒளியை பெறுமாம் அதுபோல உன் முகம் கண்டு அவள் முகம் மலர்ந்திருக்கும் நண்பரே, அவள் முகம் மலர்ந்தது கண்டு நிலவு ஒளிர்ந்திருக்கும்…. வெட்கத்தில் முகம் மூடினால் வருமோ அமாவாசை… ?

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  11:57 முப இல் ஒக்ரோபர் 20, 2010

      ஹா..ஹா..மிக்க நன்றி நண்பரே..போனஸாக நீங்களும் ஒரு கவிதை தந்துவிட்டீர்கள்..

      மறுமொழி
  • 9. prabha  |  9:12 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

    அமாவாசைக்கும், பௌர்ணமிக்கும் உள்ள இடைப்பட்ட காலங்களில் அவளின் அழகு எப்படி இருக்கும் என வருணை செய்யுங்கள் கலைஞரே !!!!

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:17 பிப இல் ஒக்ரோபர் 23, 2010

      அதற்கான ஓர் கவிதையை எழுதிவிடுவோம் விரைவில்..

      மறுமொழி
  • 11. prajaraman  |  2:43 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

    பெண்களுக்கு ஒரு படைப்பாளி போல்! நம்ம மக்களுக்கு யாரும் அவர்கள் பக்கத்திலிருந்து எழுத வர மாட்டாங்கப்பா!
    நண்பரே! கவிதை அருமை!

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  2:54 பிப இல் ஒக்ரோபர் 29, 2010

      நன்றி நண்பரே..
      பரவால விடுங்க ..நமக்கு நாமே எழுதிப்போம்..பெண்களுக்குதான் பரந்த மனப்பான்மை இல்ல..ஹா.ஹா..

      மறுமொழி
      • 13. ஜெகதீஸ்வரன்  |  2:26 பிப இல் ஒக்ரோபர் 30, 2010

        இப்படி புகழ்ந்து கூட எழுத வேண்டாம். ஆனா எழுதரதெல்லாம் நமக்கு எதிராய்தான் எழுதுகிறார்கள். யாரோ சிலர் செய்யும் செயல்கள் தான் அவர்களுக்கு தெரிகிறது. பேருந்தில் உராசும் ஒருவனையே கவிதைக்கு கதாநாயகனாக மாற்றுகின்றார்கள். ஒய்யாரமாய் இவர்கள் அமர்ந்திருக்க முடியாமல் நிற்கும் வயதான மனிரை இவர்களின் கண்கள் கவணிப்பதேயில்லை.

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,580 hits