வலைப்பதிவு வாசகர்களுக்கு..
ஒக்ரோபர் 24, 2010 at 10:08 முப 12 பின்னூட்டங்கள்
அந்தப் பதிவை படித்து முடித்ததும், முதலில் எனக்கு ஏற்ப்பட்டது, நானும் தமிழன் என்கிறப் பெருமிதம்தான்.அது உண்டு பண்ணின நெகிழ்ச்சி அப்படி. நம் உடன்பிறப்பான ஓர் தமிழன் செய்யும் அளப்பரிய சேவை,தன்னிகரில்லாத் தொண்டு தரணிக்கு தெரிந்திருக்கிறது.தமிழனுக்கும்,தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்ந்திருக்கிறது.தமிழ்நாட்டிலுள்ள நமக்கு தெரிய இவ்வளவு நாட்களாகி இருக்கிறது.இங்கே உள்ள எந்த ஊடகங்களும் அந்த மாமனிதனை அடையாளம் கட்டவில்லை..அதனால் யாம் அறியவும் வாய்ப்பில்லை.அழுக்கடைந்த மனிதரைப் பார்த்தாலே ஆறடி தள்ளி நிற்கும் அழுக்கு உள்ளம் படைத்தோர் நாம்.ஆனால் அரவணைத்து உணவூட்டுகிறது அவரின் தெளிந்த உள்ளம்.மனநிலை,மூளை வளர்ச்சிக் குன்றியவர் நம் குறுகியப் பார்வையில் பைத்தியம்,கிறுக்கு.அந்தத் தமிழனின் அகன்றப் பார்வையில் அன்புக்குரியவர்கள்.
அந்த தமிழனை,தலைவனை பற்றி மேலும் அறிந்து கொள்ள..
தமிழகத்தின் புதிய “சூப்பர் ஸ்டார்” நாராயணன் கிருஷ்ணன், சி.என்.என் அறிவிப்பு!!
2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்
குறிப்பு: பதிவுலகத்துல நண்பர்களுக்காகவும்,நல்லப் பதிவுகளுக்காகவும் ஓட்டுப் போட ஆர்வம் காட்டும் நாம்,இந்த தலையாய தமிழனுக்கோர் ஓட்டிடலாமே!இது ஒவ்வொரு தமிழனின் தலையாயக் கடமை.மறக்காமல் போடுங்கள் ஓட்டு.
http://heroes.cnn.com/vote.aspx
Entry filed under: என்னைக் கவர்ந்தவை. Tags: Akshaya's trust, அனாதை, அனாதைகள் இல்லம், இணையம், ஏழ்மை, சேவை, சேவை மனப்பான்மை, டிரஸ்ட், தமிழன், தமிழ், தலைநிமிர்ந்த தமிழன், தியாகம், நாராயனான் கிருஷ்ணன், பண்பாடு, முதியோர் இல்லம், வறுமை, வலை, வலைப்பதிவு வாசகர்களுக்கு, CNN-IBN Real Heroes, narayanan krishnan, trust.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
அன்பரசன் | 10:17 முப இல் ஒக்ரோபர் 24, 2010
நான் ஏற்கனவே போட்டுட்டேன் நண்பரே!
2.
படைப்பாளி | 10:32 முப இல் ஒக்ரோபர் 24, 2010
அப்படியா..அருமை நண்பா..
3.
ஜெகதீஸ்வரன் | 11:00 முப இல் ஒக்ரோபர் 24, 2010
நானும்தான்.
இப்போது உங்களுக்காக இரண்டாவது முறையும் ஓட்டு போட்டாச்சு. எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டு போடலாம் போலிருக்கு. நல்ல நண்பர்கள் தங்கள் மேலான ஆதாரவுக்கு கள்ள வோட்டுகளை கூட போட அனுமதி தந்திருக்கின்றார்கள் போல.
4.
படைப்பாளி | 3:10 பிப இல் ஒக்ரோபர் 24, 2010
நல்லது ஜெயிக்கணும்னா கள்ள வோட்டும் போடலாம்..ஹா..ஹா..நன்றி நண்பா..
5.
Kakkoo.Mnaickam | 11:48 முப இல் ஒக்ரோபர் 24, 2010
மிக அவசியமான , அணைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.
தந்தமைக்கு நன்றி.
—
6.
படைப்பாளி | 3:10 பிப இல் ஒக்ரோபர் 24, 2010
நன்றி நண்பரே..
7.
எஸ். கே | 1:08 பிப இல் ஒக்ரோபர் 24, 2010
அவருக்கு என் வணக்கங்கள்! நானும் மீண்டும் ஓட்டுப்போடுகிறேன்!
8.
படைப்பாளி | 3:20 பிப இல் ஒக்ரோபர் 24, 2010
இன்னொருமுறை ஓட்டுப் போட்டதற்கு என் இனிய நன்றி..
9.
Sate | 7:22 பிப இல் ஒக்ரோபர் 24, 2010
am already done it bala
10.
படைப்பாளி | 2:47 பிப இல் ஒக்ரோபர் 25, 2010
thank you friend.
11.
Elango | 8:06 பிப இல் ஒக்ரோபர் 24, 2010
Im voted 🙂
12.
படைப்பாளி | 2:46 பிப இல் ஒக்ரோபர் 25, 2010
ok..thank you friend.