“மங்கையால் மண்டியிட்ட மனிதர்கள்”

ஒக்ரோபர் 25, 2010 at 10:31 முப 15 பின்னூட்டங்கள்


கடந்த ஒரு வாரமாக என் சமூக வலைப்பின்னல் சகோதரன் தம்பி பிரபா என்னிடம் ஓர் கோரிக்கையை வைத்துக் கொண்டிருந்தான்.அண்ணா நான் சொல்கிற தலைப்பில் எனக்காக ஓர் கவிதை நீங்கள் நிச்சயம் எழுத வேண்டுமண்ணா?சரி தம்பி என்று நானும் மறுதலித்து வைத்தேன்.

“மங்கையால் மண்டியிட்ட மனிதர்கள்”-இதுதான் அவன் எனக்களித்த தலைப்பு.மகளிர் சங்கத்துல மாட்டி விடுற மாதிரி தலைப்பைக் கொடுத்துட்டான்..கஷ்டமான தலைப்புதான்..நாம மண்டியிடாம இருந்தா சரி.ஹ்ம்ம்..ட்ரை பண்ணிப்  பார்ப்போம்னு களம் இறங்கியிருக்கேன்.

எழுந்தான்

பாக்கெட் பர்சிலிருக்கும்

அவள் முகத்தில்

விழித்தான்.

பாரடி உமை எவ்வளவு

பத்திரப்படுத்தி

வைத்திருக்கிறேனென்று

அவளிடம் விளித்தான்.

ஆனால் அவள்

விழித்ததோ

பர்சிலுள்ள காந்தியின்

முகத்தில்..

——000——

காந்தியிருந்தவரை

அவளுக்கும் அவனுக்குமான

உறவு

அப்படியே இருந்தது.

காந்திக் கறையக் கறைய

அவள் மறை(ற)ந்தாள்.

——000——

அம்மாவைக்கூட

ஏற்றாத பைக்

அவளை மட்டுமே

ஏற்றி சுற்றியது.

இன்றவள் இன்னொருவன்

வண்டியில்.

இப்போ சுற்றியது

இவனது தலை மட்டும்.

——000——

அன்று

அவள் பின்னால்

செல்லவதும்,காவல் காப்பதுமே

தன் கடமையாய்க்

கொண்டான்.

இன்று

அவள் மேலாளராய்

இருக்கும்

அதே அலுவலகத்தில்

இவன் செக்யூரிட்டி.

——000——

சில ஆண்களின்

வெற்றிக்குப் பின்னால்

பெண்கள்.

பல ஆண்களின்

தோல்விக்குப் பின்னாலும்..

——000——

போனஸ்:
புலி பதுங்குறது
பாயுறதுக்காக..
அப்போ..
மங்கையிடம்,மனிதன்
மண்டியிடுவது?
மே————!!
(எந்திரன்ல ரஜினி கத்துற மாதிரி)

குறிப்பு:தம்பி பிரபா ஒ.கே வா?பொண்ணுங்கள கலாய்க்கிற மாதிரி மேட்டர் நமக்கு கைக்கூடமாட்டுதுப்பா..ஏதோ என்னால முடிஞ் அளவுக்கு உளறி வச்சுருக்கேன்..படிச்சு பாத்துக்கப்பா..ஹி..ஹி..

நான் எஸ்கேப் ஆகிக்குறேன்..இல்ல என்ன ஆணாதிக்கவாதின்னு நம்ம ஆளுங்க முத்திரை குத்திருவாங்க.இதனால சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், இதுக்கெல்லாம் காரணம் நான் இல்லீங்கோ!நான் நம்ம எம்.ஜி.ஆர் மாதிரி..தாய்குலத்த மதிக்கிறவங்கோ!
Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , .

வலைப்பதிவு வாசகர்களுக்கு.. பருவம் கண்ட பைங்கிளி பாட்டியா?

15 பின்னூட்டங்கள் Add your own

  • 1. vaarththai  |  11:29 முப இல் ஒக்ரோபர் 25, 2010

    //ட்ரை பண்ணிப் பார்ப்போம்னு களம் இறங்கியிருக்கேன்.//

    சிங்கம் களம் இறங்கிரிச்சு…

    //இதுக்கெல்லாம் காரணம் நான் இல்லீங்கோ!நான் நம்ம எம்.ஜி.ஆர் மாதிரி..தாய்குலத்த மதிக்கிறவங்கோ!//

    நம்பிட்டோம்….
    🙂

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:48 முப இல் ஒக்ரோபர் 25, 2010

      ஹா..ஹா..உண்மை அதுதான் நண்பா..

      மறுமொழி
  • 3. prabha  |  11:29 முப இல் ஒக்ரோபர் 25, 2010

    தலைவா! பின்றியே……..
    உங்களுக்கு இதுனால எந்த பிரச்சன வந்தாலும் நா பாத்துகிறேன்…..

    மே————!!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  11:50 முப இல் ஒக்ரோபர் 25, 2010

      இப்படி ஏத்தி உட்டு ஏத்தி உட்டே ஒடம்ப ரணகளம் ஆக்குரான்கப்பா ..

      மறுமொழி
  • 5. prabha  |  11:57 முப இல் ஒக்ரோபர் 25, 2010

    மிக்க நன்றி அண்ணா!

    மறுமொழி
  • 6. எஸ். கே  |  1:11 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

    பிரச்சினை வருமோ 🙂
    Anyway மிக நன்றாக உள்ளது!

    மறுமொழி
    • 7. படைப்பாளி  |  2:48 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 8. அன்பு  |  4:27 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

    // பொண்ணுங்கள கலாய்க்கிற மாதிரி மேட்டர் நமக்கு கைக்கூடமாட்டுதுப்பா //

    மேல அந்தக் வாங்கு வாங்கிட்டு கடைசியா இப்படி சொல்லிட்டா தப்பிச்சுக்கலாம்ன்னு நினைக்கறீங்களா? வாய்ப்பே இல்லை..:).. ரெடியாயிடுங்க..:).. வந்துக்கிட்டு இருக்காங்க.. :)..

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  5:11 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

      பொண்ணுங்ககிட்ட போட்டுக்கொடுக்குறதுக்கு காத்துகிட்டு இருக்குறாங்கலேப்பா..இந்த ஆண் வர்க்கம்..
      ஹா..ஹா.. மிக்க நன்றி நண்பா..தங்கள் வருகைக்கும்.வாழ்த்துக்கும்..

      மறுமொழி
  • 10. அன்பரசன்  |  6:58 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

    கவிதை நச் நண்பா..

    மறுமொழி
    • 11. படைப்பாளி  |  11:04 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

      நன்றி நண்பா..

      மறுமொழி
  • 12. ஜெகதீஸ்வரன்  |  7:34 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

    பெண்கள்.

    பல ஆண்களின்

    தோல்விக்குப் பின்னாலும்..


    யாரும் சொல்ல வராத உண்மை.

    மறுமொழி
    • 13. படைப்பாளி  |  11:04 பிப இல் ஒக்ரோபர் 25, 2010

      நன்றி சகோதரா..

      மறுமொழி
  • 14. Nivetha  |  12:06 முப இல் ஒக்ரோபர் 28, 2010

    Rompa nalla irukku…

    மறுமொழி
    • 15. படைப்பாளி  |  12:52 பிப இல் ஒக்ரோபர் 28, 2010

      romba nandringa…

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,002 hits

%d bloggers like this: