பருவம் கண்ட பைங்கிளி பாட்டியா?

ஒக்ரோபர் 26, 2010 at 10:36 முப 8 பின்னூட்டங்கள்


பின்னிரவில்

ஓர்நாள்

விழித்து

முகம்காட்டிய

பென்னிலவைப்

பார்த்தேன்.

அவள் முகம்

வெளிறி

சுருங்கிய நிலையில்

இருந்தது.

மேகங்கள் நகராமல்

வழிமறித்து நிற்க

அவள் நடையிலும்

தளர்ச்சி.

ஏனடிப் பெண்ணே!

உன்னிடத்தில்

இத்தனை

மாற்றமென்றேன்.

பின்னே

பருவம் வந்த

பைங்கிளியை

நீரெல்லாம்

பாட்டி வடை சுடுவதாகத்தானே

சொல்கிறீர்..

என வருத்தம் கொண்டு

வடிவிழந்து

மறைந்தாள்

காலையில் நிலவு.

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

“மங்கையால் மண்டியிட்ட மனிதர்கள்” என்னில் வலியுண்டாக்கிய பதிவு..

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. lakshmi  |  11:56 முப இல் ஒக்ரோபர் 26, 2010

    superbbbb……..

    மறுமொழி
  • 3. எஸ். கே  |  12:54 பிப இல் ஒக்ரோபர் 26, 2010

    செம சூப்பர்! அழகான கற்பனை!
    உங்கள் கற்பனை வளம் மேம்பட்டுகொண்டே வருகிறது!

    மறுமொழி
  • 5. prabha  |  2:20 பிப இல் ஒக்ரோபர் 26, 2010

    புதிதாக வேலையில் அமர்ந்த போலீஸ் காரர்களின் தொப்பை நாளுக்கு நாள் மேம்படுவது போல,
    உங்கள் கவிதையின் நடையும் மேம்பட்டுகொண்டே போகிறது…………………………………………………………..

    காவல் துறையினர் மன்னிக்கவும்
    🙂 🙂

    மறுமொழி
  • 7. vaarththai  |  1:19 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

    //பென்னிலவைப்//

    பொன் நிலவை அல்லது
    பெண் நிலவை
    என்று சொல்ல வந்தீரா கவிஞரே…

    இல்லை
    என் தவறா…?

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  3:54 பிப இல் ஒக்ரோபர் 27, 2010

      பெண்ணிலவு என்று விரும்பிதான் எழுதினேன் நண்பரே..இருந்தாலுன் தாங்கள் சொன்னதால் பென்னிலவை பெ(ர)ன்நிலவு ஆக்கலாம் என எண்ணினேன்.google transliterate இல் கால் வாங்க இயலவில்லை நண்பரே.

      மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,597 hits