பத்து வயதுக்கு போன பாக்யம்!

நவம்பர் 19, 2010 at 12:28 பிப 10 பின்னூட்டங்கள்


எங்களை அள்ளி, துள்ளி விளையாடிய நீர் நிறைந்த ஆற்றை,பள்ளிப் பருவத்தில் பருவ காலங்களில் பார்த்ததோடு சரி.இப்போ ஊருக்கு போகும் போதெல்லாம் வறண்ட ஆற்றை பார்ப்பதே வாடிக்கையாகி விட்டது.மணல் கூட இல்லாமல் மங்கிக் கிடக்கிறது ,எங்களின் மனம் மயக்கிய ஓடை .கல்லாறு என்ற பெயர் சுமந்ததற்காய் தன் கர்ப்பபையில் கற்களை மட்டுமே சுமந்தவளாய் காட்சி அளித்துக் கொண்டிருந்தது.நான் நண்டு பிடித்த ஆறா இது?என் தூண்டில்களில் துவண்ட மீன்களை அள்ளித் தந்த அந்த ஆறா இது?பெரு வெள்ளத்தில் பிடுங்கிக் கொண்டு வந்த மரங்களை எங்கள் இடம் தேடி எங்களுக்காய் இருத்தி விட்டுப் போகுமே அந்த ஆறா? என அவ்வபோது என் மனம் என்னை கேட்கும்படி செய்தது.

ஆற்றில் மீண்டும் குளிக்க வேண்டும்.மீன் அள்ளிட வேண்டும்.செந் நண்டை சேற்றிலே தேடிப் பிடித்திட வேண்டும்.

ஒவ்வொரு முறை ஊரு போகும் போதும் என் பழைய நீர் நிறைந்த ஆற்றையும்,என் பழைய நினைவுகளையும் எண்ணி,எண்ணி ஏங்கிப் போயிருக்கிறேன்.

என்ன ஆச்சர்யம் !இந்த தீபாவளிக்கு ஊருக்கு போன போது எமக்காய் செந்நீரை அள்ளி வந்திருந்தது,கொடுத்து சிவந்த எங்கள் ஆறு.ஆசை தீர ஆற்றில் குளித்தேன்.ஊரில் இருந்த நாட்களை ஆற்றிலேயே கழித்தேன்.இங்கே அளந்து குளிப்பதை மறந்து விழுந்து,விழுந்து ருசித்தேன்.

தாயைப் போல தன் வயிற்றிலே வைத்து தாலாட்டியது ஆறு..எப்படிதான் என் ஆற்றுக்கு மட்டும் எம்மை பத்து வயதுக்கு இழுத்துப் போகும் பாக்யம் கிடைத்திருக்கிறதோ!

Advertisements

Entry filed under: குறிப்புகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

பூக்கூடை ஓவியம் காதலைவிடவும் அழகாய் தெரிகிறது காமம்!

10 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  1:11 பிப இல் நவம்பர் 19, 2010

    மிக அழகான படங்கள்! சிறு வயது ஞாபகங்கள்! அருமை!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  9:05 பிப இல் நவம்பர் 19, 2010

      நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 3. sivaprabu  |  3:51 பிப இல் நவம்பர் 19, 2010

    மிக அருமையான பதிவு !!!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  9:05 பிப இல் நவம்பர் 19, 2010

      நன்றி தம்பி !

      மறுமொழி
  • 5. adhithakarikalan  |  5:41 பிப இல் நவம்பர் 19, 2010

    இளமை அனுபவங்கள் எல்லாமே இனிமை, அதை இப்போது செய்து பார்க்கும்போது நமக்கு வயது குறைந்தது போல தோன்றும்… மனம் சந்தோசமாகும் உண்மை தான்.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  9:06 பிப இல் நவம்பர் 19, 2010

      ஆமாம் நண்பரே…பழைய பள்ளிப் பருவத்து நினைவுகளில் மூழ்கும் போது மனது லேசாகிறது!

      மறுமொழி
  • 7. அன்பரசன்  |  11:09 பிப இல் நவம்பர் 19, 2010

    தல இந்தமாதிரில்லாம் எழுதி என்னை ஊர்பக்கம் கூட்டிட்டு போறீங்களே!!!

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  9:42 முப இல் நவம்பர் 20, 2010

      பரவால வாங்க சேர்ந்து போகலாம்..நம் பத்து வயதிற்கு!

      மறுமொழி
  • 9. Elango  |  10:30 முப இல் நவம்பர் 20, 2010

    நாங்களும் ஊருக்குப் போகணும். என்ன எங்க ஊர்ல ஆறு இல்ல.
    ரெண்டாவது போட்டோ சூப்பர்.

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  10:39 முப இல் நவம்பர் 20, 2010

      நன்றி நண்பா..எங்க ஊர்லயும் ஆறு இல்ல..ஓடைதான்..ஆறு இல்லா ஊருக்கு ஓடையும் ஆறுதான்னு பாவிக்கிறோம்!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,852 hits

%d bloggers like this: