நான் தமிழனாய் பிறந்தது,கர்வம் கொள்வதற்கு!

நவம்பர் 26, 2010 at 12:01 முப 9 பின்னூட்டங்கள்


இனமானம் இல்லாதோரால்
தன்மானம் இழந்தோரால்
தமிழ் சொல்லி பிழைப்போரால்
எம்மினம் இறந்தபோது
இயலாமையில்
கைகட்டி ,வாய்பொத்தி
நின்ற
எம்மைப் போன்றோரால்..
இப்படி ஆயிரம் காரணம்
அடுக்குவேன்
நான் தமிழனாய்
பிறந்ததற்கு
கவலைப் பல கொண்டதற்கு!

எம்மினத்தில் இப்படியோர்
தலைவன்
தன்னலம் பாராது
இனநலம் காப்பவன்!
தமிழினத்தை தலைநிமிர்த்த
எம்மினத்தில் வாய்த்தவன்!
என்ற ஒரே ஒரு காரணம்
போதும்
நான் தமிழனாய்
பிறந்ததற்கு
கர்வம் பல கொள்வதற்கு!

வாழ்க தலைவா!வளர்க நின் புகழ்!!
ஈழம் வெல்லும்!அது நின் பெயர் சொல்லும்!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , .

இணைபிரியா காதல்! மாவீரர் நாள் வீரவணக்கம்!

9 பின்னூட்டங்கள் Add your own

  • 1. ஹேமா  |  3:37 முப இல் நவம்பர் 26, 2010

    மறக்க நினைத்தாலும் மறக்கமுடியாத மறத்தமிழன்.சரித்திர நாயகன்….அண்ணாவாய் தம்பியாய் எங்கள் உயிர்ச்சகோதரன்.சொற்களுக்குள் அப்பாற்பட்டவன்.மூச்சோடு வாழ்பவன் !

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:00 முப இல் நவம்பர் 26, 2010

      ஆமாம் தோழி..நம் மூச்சிலும்,பேச்சிலும் முழுதாய் நிறைந்தவன்..எம் தமிழ் தகப்பன்..வாழ்க நின் பல்லாண்டு!

      மறுமொழி
  • 3. எஸ். கே  |  2:15 பிப இல் நவம்பர் 26, 2010

    அவர் சென்ற பாதை வன்முறைகள் நிறைந்ததாய் இருந்தாலும் நோக்கத்திற்காக வீர வணக்கங்கள்!

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  2:45 பிப இல் நவம்பர் 26, 2010

      வன்முறை என்பது தவறான புரிதல் தோழரே.இந்திய ராணுவமும் எதிரியிடம் அகிம்சா வழியில் போராடுவதில்லை..ஆயுதம் ஏந்தியே காவல் நிற்கிறது.ஆயுதம் எடுத்தவர் அனைவரும் வன்முறையாளர் இல்லை..போராளியும்,தீவிரவாதியும் நோக்கத்தில் வேறுபடுகிறார்கள்.பிரபாகரன் என்ற போராளியை தீவிரவாதி போன்று அடையாளப்படுத்த இந்திய அரசும்,இங்குள்ள ஊடகங்களும் முயற்சிக்கின்றன.
      அறமொடு போரைப் புரிந்த போராளி அவர்.புரட்சியாளர்.தமிழின காப்பாளர்..தமிழினத்தை தலைநிமிர்ந்து வாழவைக்க போராடியவர்.தமிழினத்திற்கான தன்னலம் பாராத ஒரே தலைவர்.

      மறுமொழி
      • 5. எஸ். கே  |  2:50 பிப இல் நவம்பர் 26, 2010

        ஊடகங்களும் அரசியல்வாதிகளும் அவரை அப்படிப்பட்டவராய் காண்பித்ததால் சாதராண பொதுமக்களுக்கு தவறான புரிதலே ஏற்படுகிறது!

  • 6. படைப்பாளி  |  2:57 பிப இல் நவம்பர் 26, 2010

    ஆமாம் நண்பரே.அனைத்து ஊடகங்களும் அரசியல் சார்ந்தவை.அதனால்தான் அரசியலுக்கு சாதகமாக சாயம் பூசுகின்றன.
    முடிந்த அளவு நாம் அறியாதவர்களுக்கு அவரைப் பற்றி தெரியப்படுத்துவோம்.

    மறுமொழி
  • 7. anu  |  1:16 முப இல் நவம்பர் 27, 2010

    tamilan iruka perumai paduvadhai vida garvam kolvom!!!…..
    tamil valzga! valaruga!….
    tamil thalaivanuku thalai vananguvom…..

    மறுமொழி
  • 8. aruleesan  |  2:19 முப இல் நவம்பர் 27, 2010

    இனமானம் இல்லாதோரால் தானே
    இவ்வழவு இழிவுகண்டோம்.
    எம்தலைவன் இருந்திருந்தால்
    கைதடியில் குடிவருவானோ ???
    அண்ணன் வருவான் தன்பணி தொடர்வான்
    அதுவரை பொறுப்போம் .

    அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    உங்கள் பணி தொடரட்டும் நன்பனே .

    மறுமொழி
  • 9. Sivaprabu  |  2:51 பிப இல் நவம்பர் 27, 2010

    வீரவணக்கங்கள்!

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: