மன்மதன் அம்பு எங்கே போனது!

திசெம்பர் 26, 2010 at 12:26 பிப 8 பின்னூட்டங்கள்


திரைவிமர்சனங்களும்,நண்பர்களின் கருத்துகளும் கேட்டு விட்டு எவ்வித எதிர்ப்பார்ப்புமற்று தான் மன்மதன் அம்பை பார்க்கப் போயிருந்தேன்.எவ்வித பில்டப்,சலனமில்லாமல் படத்தின் தலைப்பு வருகின்ற போதே ஓர் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.சூர்யா ,த்ரிஷா மன்னிக்க அம்புஜா பாடல் காட்சியுடன் படம் ஆரம்பமானது.படத்திலும் நடிகையாக த்ரிஷா. பணக்கார காதலனாக மதன் மாதவன்.த்ரிஷாவின் மேல் சந்தேகப் பிராணியாக திரிகிறார்.

மாதவனின் ஹமர் கார் ஓட்டி வரும் போது த்ரிஷா ஓர் விபத்தை நிகழ்த்திவிடுகிறார்.அந்த இடத்தில் ஓர் சம்பாசனையுடன் வெறுப்பில் காதல் அவர்களுக்கிடையில் பிளவாகிறது.இப்போ .வெளிநாட்டிற்கு சுற்றுப் பயணத்திற்கு போயிருக்கும் த்ரிஷா,அவர் தோழியாக சங்கீதா அவரின் இரண்டு குழந்தைகள் என அங்கு கதை வருகிறது.ஹீரோ என்ட்ரி… சந்தேகப் பிராணி மாதவன் ,திரிசாவை நோட்டம் விட நியமித்திருக்கும் மேஜர் மன்னாராக கமல்.நண்பனின் மருத்துவ தேவைக்காக அவர் இந்தப் பணியை ஒப்புக்கொண்டு த்ரிஷா நல்லப் பெண்தான் என மாதவனிடம் சர்டிபிகேட் தர,இதை காரணம் காட்டி மருத்துவ தேவைக்கானப் பணத்தை மாதவன் தராதிருக்க,ஹீரோ கதையில் புது கதை பின்னுகிறார். அப்போ பணம் கிடைக்க ஆரம்பிக்கிறது.அந்தப் பின்னலில் த்ரிஷா,சங்கீதா,கமல்,மாதவன் என யார் யாரோடு பின்ணிப் போகப் போகிறார்கள் என்பதுதான் பின்னணி கதை.

விமர்சனங்களைப் படித்து ஐயோ திரையரங்கில் அமரவே முடியாதோ,அவ்வளவு மொக்கையோ என்கிற அளவுக்கெல்லாம் படம் சலிப்பத் தரவில்லை.பாடல் காட்சியமைப்புகள்  அருமை.நடிகர்களின் நடிப்பு பிரமாதம்.கமல் பற்றி சொல்ல தேவையில்லை.மாதவன் குடிகாரராக பின்னிஎடுதிருக்கிறார்.சங்கீதா வயசுப் பசங்களுக்கு வாவ்,அவர் பேசும் வசனங்களையும் சேர்த்து..குடும்பத்தோட போறவங்க தான் கொஞ்சம் குற்ற உணர்வோட உக்காரணும்.சங்கீதாவின் பையனாக நடித்திருக்கும் சின்னப் பையன் எல்லோரையும் தூக்கி சாப்பிடுகிறான் நடிப்பில்.

இரண்டாம் பாதி வழக்கமான கிரேசி மோகன் பாணியில் கமல் எழுதிய வசனங்கள் ,சீன்கள் நடிகர்களுக்குள் வரும் குழப்பத்தை பார்வையாளனுக்குள்ளும் இறக்கி விடுகிறது.

கமலின் மேதாவித்தனமான சில வசனங்கள் என்னை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றன.கதையில் ஆரம்ப காட்சிகளில் கார் ஓட்டுனராக வரும் ஈழத்து தமிழனை திரிசாவுக்கு காலுக்கு செருப்பாக நடிக்கவும் தயாராய் இருக்கிறேன் என்று சொல்வது,மாதவன் பேசும் போது தமிழ் இனி மெல்ல சாகும் ன்னு சொல்லி வசனத்தை டம்மியாக்கி பேசுவது.இன்னும் சில இடங்களில் தமிழ் தேவையில்லாமல் இழுக்கப் பட்டு தரம் தாழ்த்தப் படுவதுபோல் தோன்றுகிறது(ஏற்கனவே இந்த வேலையை தசாவதாரத்திலும் செய்திருப்பார்)..அதை தவிர்த்திருக்கலாம்.கமல் காமெடி என்றாலே, ஐயோ இப்படித்தான் (சா)கடிப்பார் என்கிற எண்ணத்தை அவரின் சமீபகால படங்கள் உணர்த்தி விடுகின்றன.கிளைமாக்ஸ் ரொம்ப ஆவரேஜ்.

“அர்ஜுனன் பார்வை மன்மதனுக்கு இல்லை..அதுதான் அம்பு குறி தவறி இருக்கிறது!”

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , .

என் கல்லூரி பருவத்தில் கிறுக்கிய ஓவியம்! பொதுவெளி கழிப்பறைகளில்!

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. santhosh  |  12:31 முப இல் திசெம்பர் 27, 2010

    inda tiraipadathai chennai leyea edrukalam

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:57 முப இல் திசெம்பர் 27, 2010

      எடுத்திருக்கலாம்…ஆனால் காட்சிகள் இன்னும் வறட்சியாகிப் போயிருக்கும்.

      மறுமொழி
  • 3. adhithakarikalan  |  11:06 முப இல் திசெம்பர் 27, 2010

    நல்ல விமர்சனம்…

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  11:55 முப இல் திசெம்பர் 27, 2010

      நன்றி நண்பரே.

      மறுமொழி
  • 5. ஜெகதீஸ்வரன்  |  9:18 பிப இல் திசெம்பர் 28, 2010

    ஒரு இளம் நடிகர் கமலின் கதாப்பாத்திரத்தை எடுத்து நடித்திருந்தால் நிச்சயம் இன்னும் பாராட்டுகளோடு படம் ஓடியிருக்கும். இந்தக் கதை கமலுக்கான கதையே இல்லை. இயக்கம் மட்டும் செய்திருந்தாலே போதும் என்பது என்கருத்து.

    கர்ஜிக்கும் சிங்கத்தினை எதிர்ப்பார்த்து சென்றால் அது மிடுக்கு நடையை மட்டும் காட்டி சென்றால் எப்படி ஏமாற்றம் நடக்குமோ அதுதான் நிகழ்ந்துள்ளது.

    மிகவும் அருமையான விமர்சனம். நடுநிலையாக விவரித்திருக்கின்றீர்கள்.

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:37 முப இல் திசெம்பர் 29, 2010

      மிக்க நன்றி சகோதரா

      மறுமொழி
  • 7. manii  |  11:27 பிப இல் திசெம்பர் 30, 2010

    எனக்கு மானம் முக்கியம் நடிப்பு தேவையில்லை என்று தான் இலங்கை தமிழர் போகிறார் ,நீங்கள் சரியாக கவனிக்கவில்லை

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  10:50 முப இல் திசெம்பர் 31, 2010

      ஆமாம் நண்பரே அதையும் கவனித்தேன்..ஆனால் பல்வேறு கேலிகளுக்கு அவர் ஆளாக்கப்பட்டே அதற்கு பின் அவர் அப்படி கூறுவது போன்று காட்சியமைத்திருப்பார்கள்.அதையும் கவனித்தீர்களா நண்பரே.

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: