ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் எம்மை!

திசெம்பர் 31, 2010 at 4:55 பிப 6 பின்னூட்டங்கள்


தன் வாழ்நாளின் கடைசி மணித்துளிகளை, எண்ணிக்கொண்டிருக்கிறது 2010 ஆண்டு.இந்த ஆண்டு, சில, பல மறக்க இயலாத நினைவுகளை ,தன்வசம் சுமந்துள்ளது.ஒரு வருடம் பண்ணிரண்டு மாதங்கள் ,பல நாழிகைகள், பல நாட்கள் ,என நம் வசம் ஒவ்வொரு ஆண்டும், ஒப்படைத்துப் போனாலும் ,அதனில் மறக்க இயலா மணித்துளிகளை ,இனிமையை,வெறுப்பை சுக துக்கம் என தன் பரிணாம பக்கங்களாய் படர வைத்துள்ளது.எனினும் கால ஓட்டத்தில், சில நாட்கள் மறந்தும் போகின்றன மறக்க இயலாமலும் ஆகின்றன. அப்படி நான் மறந்த,மறக்க இயலாமல் என் மனதில் நிறைந்த ஏனைய பக்கங்களை இவ்வாண்டு சுமந்துள்ளது.சென்ற புத்தாண்டுக்கு முதல் வாழ்த்தை யார் எம்மிடம் முதலாய் பதிவு செய்தார்கள் என்பதிலிருந்து,அந்த புத்தாண்டு இரவை எப்படி கழித்தேன்,எத்தனை புது வரவுகள்,புது உறவுகளுக்கு சென்ற ஆண்டு பாலமானது,எத்தனை நட்பு என்னுடன் வளர்ந்து பலமானது என்பது வரை ஏனைய சுவடுகள் 2010 ஆண்டின் பக்கங்களில்! முக்கியமாய் பதிவுலகம்,அதனால் பரிச்சயமான தோழமைகள்,முகநூல் நட்பின் முகவரிகள்,என எந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு நிறைய நண்பர்களை நிறைவாகவே தந்து சென்றது!அதற்காய் 2010 ஆண்டுக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டவனாகிறேன்.

ஒவ்வொரு ஆண்டின் கடைசி மூச்சும் , எம் முகத்தில் உமிழ்ந்து , நமட்டு சிரிப்புடன் அந்தக் கேள்வியை மட்டும் கேட்டு விட்டுப் போகும்..சென்ற ஆண்டின் பிறப்பில் லட்சியமாய் ஏதோ கொள்கை வகுத்துக் கொண்டாயே.என்ன செய்து கிழித்தாய் என்று.நானும் அலட்டிக் கொள்ளாமல் அதே கொள்கையை இவ்வாண்டில் ஏற்கிறேன்,இவ்வாண்டில் செய்து முடிப்பேன் ,என்று மீண்டும் மீண்டும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன்.. காலத்தை அல்ல..எம்மை!

Entry filed under: கட்டுரை. Tags: , , , , , , , , , , , .

ஏழ்மையின் கையிலிருப்பதால்! 2011 புத்தாண்டு வாழ்த்துகள்!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  4:58 பிப இல் திசெம்பர் 31, 2010

    நண்பா இனிவரும் ஆண்டு நம் கனவுகளையும் லட்சியங்களையும் நிறைவேற்றி இனிய நிகழ்வுகளை அளிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    மறுமொழி
  • 2. ஜெகதீஸ்வரன்  |  12:49 பிப இல் ஜனவரி 1, 2011

    புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே!.

    மறுமொழி
    • 3. படைப்பாளி  |  7:12 பிப இல் ஜனவரி 4, 2011

      நன்றி நண்பரே…

      மறுமொழி
  • 4. Ramanujam  |  11:52 பிப இல் ஜனவரி 1, 2011

    மகிழ்சிகரமான ஆண்டிற்கு வாழ்த்துக்கள் கோடி தோழரே

    மறுமொழி
    • 5. படைப்பாளி  |  7:12 பிப இல் ஜனவரி 4, 2011

      நன்றி நண்பரே….

      மறுமொழி
  • 6. THIRUMAVALAVAN  |  12:51 முப இல் ஜனவரி 3, 2011

    நீ மட்டும் அல்ல நண்பா… துணைக்கு நிறைய தோழர்கள் இருக்கிறார்கள்…. தம்மை தாமே ஏமாற்றிக் கொண்டு…. உன்னையும் என்னையும் போலவே…. காலம் கடந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: