முகநூளில் முகம் தெரியாதவளோடு!
ஜனவரி 5, 2011 at 10:42 முப 12 பின்னூட்டங்கள்
அப்படி ஓர் எதிர்முனை தாக்குதலை நான் எதிர் பார்த்திருக்கவில்லை அவளிடத்தில்.
காலையில் என் அலைபேசியை அடைந்த ஆரம்ப குறுஞ்செய்தி அழகாய் என்னை வாழ்த்துவதாயும்,என் இன்முக புன் சிரிப்பை எதிர் நோக்கி அனுப்பியதாயும் தான் எனக்குப் பட்டது.வரிசையாய் வந்திருந்த ஏழு செய்திகளையும் ஒன்றன் பின் ஒன்றாக பின்தொடர எனக்கு பின்மண்டையில் அடிப்பது போல் பேரிடியாய் வார்த்தை சீற்றம் குறுஞ்செய்தி வடிவில்.புன் சிரிப்பு மாறி புண்ணானது நெஞ்சம்.வார்த்தையில் சுட்டெரிக் கிறாள்.வலிமிகுந்த நெஞ்சில் எழுத்தீட்டியால் குத்தி எம்மை பிளக்கிறாள்.என்னை தாக்கிய வார்த்தைகள் எமக்கு வலிக்காது என அறிந்தவள் தம்மையே தாக்கி குறுஞ்செய்தியில் குமுறுகிறாள்.வேகம் கொண்ட வெறியில் எம் அன்பை அறிமுகம் செய்த,கொஞ்சம் கொஞ்சமாய் எங்கள் நேசம் சேமித்து, நூறு சதவிகிதம், எங்கள் காதலை அடைகாத்து வைத்த அந்த வலைப்பகுதியில்,அவள் பக்கத்தை அகற்றுகிறாள்.அப்படியோர் அழுகையை அவளிடத்தில் அதற்கு முன் யாம் அறிந்ததில்லை.
பாசத்தின் வெளிப்பாடு கண்ணீராய் கசிகிறது.நெஞ்சம் வலிக்க நான் கூனிக் குறுகிப் போகிறேன் குற்ற உணர்வில்.அவள் அனுப்பிய வார்த்தைகளில்,அதிலுள்ள காதலின் ஆழத்தில்,அவள் அன்பின் ஆர்ப்பரிப்பில்!
மன்னிப்பாயா பாடலை திரும்ப திரும்ப கேட்டுப் பார்க்கிறேன்.
இன்னோர் இடத்திலிருந்தும் என்னையே நெஞ்சில் சுமந்து கிடக்கிறாளே..என்னை ஒவ்வொரு படியிலும் தூக்கி விட முனைகிறாளே!என் வளர்ச்சிக்காய் ஏதேதோ செய்கிறாளே!அப்படி பட்டவளை மறந்துவிட்டு..
ஆமாம் என்ன செய்து விட்டேன் நான்.
அவளுக்கு தெரியாமல் இன்னோர் புறாவுக்கு தூது விட்டுக் கொண்டிருந்தேன் சிக்குகிறதா என்று!முகநூளில் முகம் தெரியாதவளோடு ,மொக்கைப் போட்டுக் கொண்டு..நீங்களே சொல்லுங்கள்….
அவள் என்னை என்ன செய்திருக்க வேண்டும்?
Entry filed under: குறிப்புகள். Tags: அன்பு, அழுகை, இயக்கம், உணர்வு, உயிர், உவமை, ஊடல், எழுத்து, கட்டியனை, கண்ணீர், காதல், காமம், கூடல், சண்டை, நெஞ்சம், நேசம், படைப்பாளி, படைப்பு, பரிவு, பாசம், புக், முகநூல், முத்தம், வெறி, வேகம்.
12 பின்னூட்டங்கள் Add your own
மறுமொழியொன்றை இடுங்கள்
Trackback this post | Subscribe to the comments via RSS Feed
1.
Sri | 10:53 முப இல் ஜனவரி 5, 2011
Super article for your blog
2.
படைப்பாளி | 7:20 பிப இல் ஜனவரி 5, 2011
thank you very much!
3.
எஸ்.கே | 11:28 முப இல் ஜனவரி 5, 2011
இது உண்மையோ கற்பனையோ ஆனால் தவிப்பு நன்றாக இருந்தது!
4.
படைப்பாளி | 7:21 பிப இல் ஜனவரி 5, 2011
அப்படியா..மிக்க நன்றி நண்பரே!
5.
அன்பரசன் | 9:38 பிப இல் ஜனவரி 5, 2011
நல்ல தவிப்பு
6.
படைப்பாளி | 7:53 முப இல் ஜனவரி 6, 2011
தவிக்கிறது தானே ஆண்மக்கள் வேலை.lol!
7.
Lakshmi | 10:01 பிப இல் ஜனவரி 5, 2011
oru varam ungaludan pesathirukka vendum….
8.
படைப்பாளி | 7:53 முப இல் ஜனவரி 6, 2011
haa..haa..appadiyaa!
9.
ஹேமா(சுவிஸ்) | 12:16 முப இல் ஜனவரி 6, 2011
மனதிற்கும் முகத்திற்கும்தான் எத்தனை வித்தியாசம் உணர்வுகளில்.சிலரது சந்தோஷங்கள் சிலரது வேதனையில்தானே !
10.
படைப்பாளி | 7:52 முப இல் ஜனவரி 6, 2011
ஆமாம் தோழி!
11.
thirumavalavan | 12:32 முப இல் ஜனவரி 6, 2011
மச்சி, ரொம்ப அடி வாங்குன மாதிரி தெரியுது…. இது சொந்த அனுபவமா???? இல்லை கற்பனையா???
இந்த பசங்களே இப்படித்தான்…. ஒரு புறா பக்கத்துல இருக்கும் போதே, முன்னாடி போற கிளிக்கு வலை விரிப்பாங்க… நீ மட்டும் விதிவிலக்கு இல்லை…..
இதுக்காக எல்லாம் நீ வருத்தப்படாதே…. உன் பணியை நீ தொடர்ந்து செய்….. கடமையை செய்….. பலனை எதிர்பாராதேனு பெரியவங்க சொல்லி இருக்காங்க…. உன் கடமை தங்கு தடையின்றி தொடர என் வாழ்த்துக்கள் அருமை நண்பா…….
12.
படைப்பாளி | 7:51 முப இல் ஜனவரி 6, 2011
ஹா.ஹா..உன் பேச்சைக் கேட்டா இன்னும் அடி விழும் போல!