பௌர்ணமி வெளிச்சத்தில் அமாவாசை இருட்டு …

ஜனவரி 9, 2011 at 10:25 முப 13 பின்னூட்டங்கள்


சாரல் தெளித்த

சாலையொன்றில்

சாயங்கால நேரம்.

மழைவந்து நனைக்க

மருங்கி மதில் மீதில்

சாய்ந்து நின்றேன்.

வாடா மலரொன்றின்

வயதொத்த ஒருத்தி

சரீரம் நனைந்தும்

வாடியவளாய் இருந்தாள்.

நிலவான அவள் முகத்தில்

பொலிவில்லை.

பௌர்ணமி வெளிச்சத்தில்

அமாவாசை இருட்டு.

செக்க சிவந்ததொன்று

சிவந்தவளின் முகத்திலில்லை.

நிறங்கள் நீர்த்தவளாய்

வெறுமையை போர்த்தியிருந்தாள்.

அவள் அருகிலமர்ந்து

கேட்டேன்

ஆனாலும் உனை சுற்றி

ஆயிரம் ஆடவர் கண்.

என்னடி வைத்திருக்கிறாய்

உன்னிடத்தில்

மட்டுமென்றேன்.

சற்றே சிரித்தும்

கொஞ்சம்

முறைத்தவள் சொன்னாள்.

அறியாமலா என்னிடத்தில்

தைரியம் கொண்டு

அருகமர்ந்து பேசுகிறாய்.

ஆயிரம் ஆடவர் கண்களில்

உமதொன்றும்

உள்ளதடா!

இறந்திட்டான் என் கணவன்

எமை இத்தனைக் கண் நோக்குதடா!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

பிட்சா கார்னரில் பழைய சோறு! எஞ்சிய மனிதநேயம்!

13 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ்.கே  |  11:41 முப இல் ஜனவரி 9, 2011

    //ஆயிரம் ஆடவர் கண்களில்

    உமதொன்றும்

    உள்ளதடா!

    இறந்திட்டான் என் கணவன்

    எமை இத்தனைக் கண் நோக்குதடா! //

    உண்மையில் கலங்க வைத்த வரிகள்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  10:55 முப இல் ஜனவரி 10, 2011

      மிக்க நன்றி நண்பரே!

      மறுமொழி
  • 3. Lakshmi  |  12:28 பிப இல் ஜனவரி 9, 2011

    Manam negizigirathu….. miga arumai….

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:56 முப இல் ஜனவரி 10, 2011

      மிக்க நன்றி தோழி !

      மறுமொழி
  • 5. Ramanujam  |  11:13 பிப இல் ஜனவரி 9, 2011

    //சற்றே சிரித்தும்

    கொஞ்சம்

    முறைத்தவள் சொன்னாள்.

    //ஆயிரம் ஆடவர் கண்களில்

    உமதொன்றும்

    உண்மைவரிகள்!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  10:56 முப இல் ஜனவரி 10, 2011

      மிக்க நன்றி நண்பரே!..

      மறுமொழி
  • 7. Narayanan  |  8:37 முப இல் ஜனவரி 10, 2011

    mika

    மறுமொழி
  • 8. Narayanan  |  8:38 முப இல் ஜனவரி 10, 2011

    this poetry is very legitated.now the time all men status is on the way of this mirror/poetry.

    மறுமொழி
    • 9. படைப்பாளி  |  10:57 முப இல் ஜனவரி 10, 2011

      thank you friend!

      மறுமொழி
  • 10. Dr.sivam mk  |  1:47 பிப இல் ஜனவரி 10, 2011

    thank you very much

    மறுமொழி
    • 11. படைப்பாளி  |  7:27 பிப இல் ஜனவரி 10, 2011

      thank you!

      மறுமொழி
  • 12. ஹேமா  |  4:46 முப இல் ஜனவரி 11, 2011

    பெண்ணின் உணர்வோடு வலித்த வரிகள் !

    மறுமொழி
    • 13. படைப்பாளி  |  8:19 முப இல் ஜனவரி 11, 2011

      மிக்க நன்றி தோழி!!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: