400 வது பதிவு- ஓர் நாளில் மூவர் பிரசவம்

ஜனவரி 28, 2011 at 12:55 பிப 8 பின்னூட்டங்கள்


ஒரு தாய் தன் கருவை சுமக்கின்ற தருணம்..கரு சுமந்ததிலிருந்து அவள் பெறுகின்ற அகமகிழ்வு.வளரும் கருவை வயுறு தடவி பெறுகின்ற சுகம்.உதைப் பட்டபோதும் உள்ளம் மகிழ்கின்ற உணர்வு.வயிறு வளர வளர அவள் உடலில் ஏற்படும் வனப்பு.என கடக்கும் தருணங்களைத் தாண்டி அக்குழந்தையின் முகம் பாக்க துடிக்கின்ற ஏக்கம் எத்துனை சுகமானதோ,அவள் பெறுகின்ற பிரசவ வலியையும் தாண்டி..அத்தனை சுகம் சுமந்த பிரசவ நாள் இன்று..எனக்கும் ,என் உடன்பிறந்த தமையன் ஜெய் மற்றும் உடன் பிறவாத் தமையன் ராகுலுக்கும்.

—-000—

எனது பிரசவம் :

இன்று என் படைப்பாளி 400 வது படைப் பெழுதுகிறான்.ஓராண்டைக் கடந்து எனக்கும் இணையத்துக்குமான உறவுபாலம், என்னுடன் ஏனைய நண்பகளை இணைத்து வைத்திருக்கும் களம்.

எத்தனை உறவுகள்..என்மேல் பாசம் சுமந்து,என் எழுத்துக்களைப் படித்தும்,பாராட்டியும்,விமர்சித்தும் எம்மை செதுக்குகின்ற பண்பான நேசங்கள் எத்தனை..அது என்னில் உண்டாக்கி இருக்கும் நெகிழ்ச்சி.மட்டற்ற மகிழ்ச்சி.அதை என் சின்ன வார்த்தைகளால் எழுதி செதுக்கிட இயலாது.வலைப் பதிவு எமக்கு கொடுத்திருக்கும் உறவுகளை பற்றி எழுதினால் எமக்கு ஓராண்டு பத்தாது.இந்த தருணத்தில் எம்மேல் உரிமை மிகுந்த அந்த உறவுகள் அனைவர்க்கும் நன்றி சொல்லக் கடமைப்படுகிறேன்.

—-000—

எம் தமையன்களின் பிரசவம்: .

பல கனவுகளோடு கனவுப்பட்டறைக்குள் நுழைந்து ,தங்கள் கனவுகளை வெள்ளித்திரையில் நினைவாக்க வாடா போடா (திரைப்படம் ) பயிற்சிப் பட்டறையில் கலை இயக்குனனாய் ராகுலும் ,உதவி இயக்குனனாய் ஜெய்யும், வேலை செய்து இன்று வெள்ளித்திரையில் தங்கள் பெயர்களை ,முதன் முதலாய் உலகம் பார்க்க உரித்தாகும் நாள்.திரைத் துறையில் என்னிருத் தம்பிகளின் விலாசமும் விசாலப் படும் நாளின்று.ராகுல் மேலும் பல சிறந்த படங்கள் செய்து சீரிய முறையில் பெயர் விளங்கவும்,பார் போற்ற பவனி வரவும்,வெற்றி பல சூடவும்,இன்று உதவி இயக்குனனான ஜெய் ,விரைவில்இயக்குனனாய் ஜெயம் கொண்டு ,பரணி ஆளவும், இத்தரணி போற்றவும் வளம் வர இந் நன்நாளில் வாழ்த்துவதில், பெருமகிழ்வு கொள்கிறேன் தன் குழந்தையை பிரசவித்த தாயைப்போல!

நன்றி: யூத்புல் விகடன் குட் ப்ளாக்சில் தேர்வு செய்தமைக்கு.


Advertisements

Entry filed under: கட்டுரை, குறிப்புகள், விகடன் குட் ப்ளாக்ஸ். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

காங்கிரசை ஒழிப்பதற்காக ஜெயலலிதாவை ஆதரிப்பது நியாயமா? சீமானுக்கு கவிஞர் தாமரையின் பகிரங்கக் கடிதம்! கனவில்!

8 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  1:12 பிப இல் ஜனவரி 28, 2011

    400வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    உங்களுக்கும் உங்கள் சகோதரர்களுக்கும் வாழ்த்துக்கள்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  5:46 பிப இல் ஜனவரி 28, 2011

      மிக்க நன்றி நண்பா!!

      மறுமொழி
  • 3. sivaprabumba  |  6:17 பிப இல் ஜனவரி 28, 2011

    Congrats na……..

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  9:18 பிப இல் ஜனவரி 28, 2011

      thank you pa..

      மறுமொழி
  • 5. jaya  |  3:22 பிப இல் ஜனவரி 31, 2011

    wow..great to hear!!
    All the best frnd!! conver my hearty congratulations to ur brothers!!

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  3:55 பிப இல் ஜனவரி 31, 2011

      thank you dear…

      மறுமொழி
  • 7. ஹேமா  |  3:51 முப இல் பிப்ரவரி 4, 2011

    உங்களுக்கும் உங்கள் படப்புகளுக்கும் சகோதரர்களுக்கும் பிந்தினாலும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    குட்டிக் குட்டியா இன்னும் நிறைய எழுதணும் நீங்க !

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:43 பிப இல் பிப்ரவரி 4, 2011

      தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் ஆதரவு என்னை எழுத வைக்கட்டும்.மிக்க நன்றி!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 182,485 hits

%d bloggers like this: