ஆடுகளம் பாத்து ஆச வந்துடுச்சி!

பிப்ரவரி 4, 2011 at 12:34 பிப 6 பின்னூட்டங்கள்


படம் வந்தும்,விமர்சனங்கள் படித்தும் பல நாட்கள் கழித்து சமீபத்தில்தான் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது.படம்,காட்சியமைப்புகள் ,காதல் காட்சிகள் எப்படியோ… அதையெல்லாம் கடந்து தனுசின் ஆடுகளத்தில் என்னைக் கவர்ந்தது அவரின் ஆட்டக் களம்தான்.காதல் ஓகே ஆகுற மாதிரி தெரிஞ்சவுடன், அந்த லுங்கியோட ஒரு குத்து போடுவார் பாருங்க..அலட்டிக்காம..அம்சமா..லுங்கிய தூக்கி மூஞ்ச போத்திகிட்டு..அந்தக் குத்து போதும்ங்க..நான் ரொம்ப ரசித்த ஆட்டம் அது.நாலு ஸ்டெப் னாலும் நறுக்குன்னு..சும்மா நச்சின்னு பண்ணிருக்கார்.அந்த குத்தாட்டதுக்கே உள்ள பலம்,அழகு,வசீகரம் அந்த ஆட்டத்தில்.என்னதான் பார்முலா ஆட்டமெல்லாம் இருந்தாலும் குத்தாட்டத்துக்கு முன்னாடி எல்லாமே வெத்தாட்டம் என்பதை நிரூபிக்கும்படி.

அந்த ஆட்டம் பார்க்கும்போது தான் அந்த ஆசை உள்ளூற வந்து ,என்னில் ஒட்டிக்கொண்டது.இப்போதெல்லாம் சொந்த ஊருக்கு கிராமத்துக்கு போனால் கூட ஒரு சார்ட்ஸ் (அரைக்கால் சட்டை)பையில் வைத்து எடுத்து செல்வது எனக்கு வாடிக்கையாகிவிட்டது.ஏனோ லுங்கி என்னில் இருந்து அன்னியப்பட்டதாய் ஆகி இருந்தது.ஆனால் லுங்கி கட்டுவதில் உள்ள சுவாரசியம் வேறு..நல்ல காற்றோட்டம்..ஒரு ப்ரீயான பீலிங் இருக்கும்..லுங்கி கட்டுக்கு ஏத்த ஆளு கெட்டப்பையும் மாத்தும்.தூக்கி கட்டுனா ஒன்னு.ஒரு மாதிரி தூக்கி நடுவுல விட்டு கட்டும் போது பொறுக்கி மாதிரி ன்னு ஒரு மனநிலையை உருவாக்கும்.அதுல நிறைய கெட் அப் இருக்குங்கோ! ஏனோ அப்பப்போ அவிழ்வது தான் கொஞ்சம் அயர்ச்சியை உண்டு பண்ணும்.சார்ட்ஸ் அந்த விசயத்துல பிரச்சினை இல்ல..மாட்டிக்கிட்டா அவ்ளோதான் அவிழாது என்கிற மனநிலை..அதுதான் நகரம் வந்ததிலிருந்து சார்ட்ஸ் கு மாறியிருந்தேன்.

ஆனாலும் ஆடுகள தனுசின் ஆட்டமோ, அப்படியே லுங்கியக் கட்டிக்கிட்டு ஒரு குத்தாட்டம் போடணும்கிற ஆசைய எனக்குள்ள உண்டு பண்ணிடுச்சி!

Advertisements

Entry filed under: விமர்சனங்கள். Tags: , , , , , , , , , , , , , , , .

மலடி! மானமிகு நாய் காதல்!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. எஸ். கே  |  1:43 பிப இல் பிப்ரவரி 4, 2011

    நல்ல ஆட்டம்!

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  2:44 பிப இல் பிப்ரவரி 4, 2011

      குத்தாட்டமாச்சே அதான் …!!!!

      மறுமொழி
  • 3. lakshmi  |  10:10 பிப இல் பிப்ரவரி 4, 2011

    no comments…….

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  10:14 பிப இல் பிப்ரவரி 4, 2011

      haa.haa.haa

      மறுமொழி
  • 5. thirumavalavan  |  10:15 பிப இல் பிப்ரவரி 4, 2011

    இப்பவாவது லுங்கியோட அருமை உனக்கு புரிஞ்சதே… ரொம்ப சந்தோசம்… நானே எகிப்து வரும் போது ரெண்டு லுங்கி எடுத்து வந்து இருக்கேன்…. சென்னைல இருக்குற உனக்கு என்ன…. உடனடியா போய் 10 லுங்கி வாங்குற வழியப்பாரு……

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  2:36 பிப இல் பிப்ரவரி 5, 2011

      சரி மச்சி…வாங்கி வச்சுடுறேன்…

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,140 hits

%d bloggers like this: