காலம் கடந்த கணினி காதல்!

பிப்ரவரி 12, 2011 at 10:53 முப 10 பின்னூட்டங்கள்


 • உன் தாவணி வரவை

எதிர்பார்த்து

குட்டிச்சுவரில் தவம் செய்து

நீ உதிர்க்கும் ஒற்றை

மென்சிரிப்பிற்காய்

எம் காலம் முழுக்க

காத்துக் கிடந்து

காலத்தை கடத்தியிருக்கலாம்!

 • உன் நாணம் செய்கிற

கோணத்திலும்

கால்கள் போடுகிற

கோலத்திலும்

மட்டுமே நம் காதலை

நாம் உறுதி

செய்துக் கொண்டிருக்கலாம்!

 • பேசா மொழியில்

நம் கண்கள் மட்டுமே பேசி

உறவாடி உயிர்ப்பித்தக்

காதலை

இன்னும் கொஞ்சம் நாள்

பேசாமலே பேசியிருக்கலாம்!

 • நீ பார்த்து விட்டுப் போன

ஒற்றைப் பார்வைக்காகவே

பலநாள் தூக்கத்தை

தொலைத்து

தூங்கா விரதத்தை

உன் நினைவிலேயே

துவங்கி இருக்கலாம்!

 • பக்கத்து வீட்டுப்

குழந்தை பையனை

பத்து பைசா

மிட்டாய்க் காய்

காதல் தூதாக்கி

புறா தூதனுப்பாத

காலத்தின் தேவையை

பூர்த்தி செய்திருக்கலாம்!

 • காதல் கடிதங்களும்

தூரத்துக் காற்றிலிட்ட

முத்தங்களுமாய்

நம் காதலை வாழ்வித்துக்

கொண்டிருக்கலாம்!

 • உன் பெயரை

நெஞ்சில் சுமந்து

பச்சை குத்திய மார்புடன்

விழுப்புண் பட்ட

வேந்தனைப்போல்

வீறுநடை போட்டிருக்கலாம்!

 • உன்னை மட்டுமே

காதலித்து

வாழ்நாள் சாதனையாய்

என் வாலிபத்தை

வென்றிருக்கலாம்!

அலைபேசியும்,கணினியும் அற்ற

அக்காலத்தில்

நம் காதல் வந்திருந்தால்!

 • எவ்வித சுவாரசியமுமின்றி

அலைபேசியில்

hi என்றும்

சமூக வலைப்பின்னலில்

bye என்றும்

பொறுப்பற்று அலட்சியமானது

காலம் கடந்து வருகின்ற

நம் கணினிக் காதல்கள்!

 

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

பசலை நோய்! களவாணி!

10 பின்னூட்டங்கள் Add your own

 • 1. mithran  |  12:03 பிப இல் பிப்ரவரி 12, 2011

  எப்படிங்க உங்களால் மட்டும் இப்படி…
  Simply Super!!

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:35 பிப இல் பிப்ரவரி 12, 2011

   ரொம்ப நன்றிங்க நண்பரே!

   மறுமொழி
 • 3. padmahari  |  3:56 பிப இல் பிப்ரவரி 12, 2011

  நண்பா…..பிரமாதம்! பின்னிட்டீங்க போங்க……

  உணர்வற்ற நிகழ்கால யதார்த்தமும், நினைக்க நினைக்க இனிக்கும் இறந்தகால யதார்த்தமுமாய் உங்க கவிதை……அட அட!

  எதை சொல்ல எதை தள்ள…..என வரிகள் அனைத்தும் தமிழ்ச்சுவை!

  வாழ்த்துக்கள்…..

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  5:34 பிப இல் பிப்ரவரி 12, 2011

   மிக்க நன்றி நண்பரே.

   மறுமொழி
 • 5. ravana  |  7:11 பிப இல் பிப்ரவரி 12, 2011

  எப்படிங்க
  awesome 🙂

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  7:55 பிப இல் பிப்ரவரி 12, 2011

   ஹா..ஹா..நன்றிங்க..
   அது என்னமோ தெரியலீங்க..லவ் னாலே தானா வருதுங்க…

   மறுமொழி
 • 7. சி.கருணாகரசு  |  8:58 பிப இல் பிப்ரவரி 12, 2011

  நல்ல அழகியல்…. பாராட்டுக்கள்.

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  7:48 முப இல் பிப்ரவரி 13, 2011

   மிக்க நன்றி நண்பரே.!

   மறுமொழி
 • 9. அனு-win கனவுகள்  |  9:50 பிப இல் பிப்ரவரி 15, 2011

  மிகவும் அழகாக இருந்தது உங்கள் கவிதை ! !
  கவிதைக்காக காதல் அழகா? காதலால் கவிதை அழகானதா நண்பரே???

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  11:03 பிப இல் பிப்ரவரி 15, 2011

   காதலாலே கவிதை அழகாகியிருக்கலாம் தோழி!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,742 hits

%d bloggers like this: