பக்குவப்பட்ட இந்தியனாய் நம்மையும் இணைத்துக் கொண்டோம்!

ஏப்ரல் 9, 2011 at 8:26 முப 12 பின்னூட்டங்கள்


அழுக்கேறிக்

கொண்டே இருக்கிறது.

துருப்பிடித்த கறை

விரைவாய் பரவுகிறது.

அழுகிய பிணத்தின்

வாடை ஆக்ரமிக்கிறது.

ரத்தம் தோய்ந்த பூமி

சிவப்புக் கம்பளமாகிறது.

பாதைகள் பயன்படுத்தப்படாமல்

பசும் புற்களை மிதித்து நடக்கிறோம்.

கூரியக் கற்களின்

சிராய்ப்புகள் ரசிக்கப்படுகின்றன.

தலைகள் வெட்டப்பட்டு

ஆங்காங்கே வீசப்படுகின்றன.

குப்பையில் வாழவும்

சகிப்பை பெறுகிறோம்.

சாக்கடைகளின் நாற்றம்

நறுமணம் கமழ்கிறது.

ரத்தக் கொதிப்பு

நமக்கு வருவதே இல்லை.

விடியலை விடவும்

இருட்டு விரும்பப்படுகிறது.

பக்குவப்பட்ட இந்தியனாய்

நம்மையும்

இணைத்துக் கொண்டோம்

ஊழலில்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

பிரிந்த ஜோடி! என்னைப் பார் யோகம் வரும்!

12 பின்னூட்டங்கள் Add your own

  • 1. கோவை கவி  |  11:51 முப இல் ஏப்ரல் 9, 2011

    “”..குப்பையில் வாழவும்

    சகிப்பை பெறுகிறோம்.

    சாக்கடைகளின் நாற்றம்

    நறுமணம் கமழ்கிறது,,!!
    ஆறறிவு மனிதனின் அவல நிலைத் தெளிவு…
    யப்பான் போன்று ஒரு அவலம் நேர்ந்தாலும் ஒரு வேளை இவன் திருந்துவானோ!!!!…..

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  12:07 பிப இல் ஏப்ரல் 10, 2011

      அங்கே ஜப்பானில்,அப்படி ஓர் அவலம் நேர்ந்தும் சுனாமியில் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள் காணாமல் போகாமல் அப்படியே இருந்தனவாம் ..இங்கே விபத்தில் அடிபட்டவனிடம் முதலில் எதை களவாடலாம் என்கிற எண்ணம் தானே இருக்கிறது…இந்தியா திருந்தாது!

      மறுமொழி
  • 3. Rathnavel Natarajan  |  12:51 பிப இல் ஏப்ரல் 9, 2011

    அரசியல்வாதிகள் நாறடிக்கிறார்கள்.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  12:08 பிப இல் ஏப்ரல் 10, 2011

      ஆமாம் நண்பரே!

      மறுமொழி
  • 5. அனு-win கனவுகள்  |  8:40 பிப இல் ஏப்ரல் 9, 2011

    ஊழல் இல்லாமல் இருக்க என்ன செய்வது நண்பா?

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  12:09 பிப இல் ஏப்ரல் 10, 2011

      தனிமனித ஒழுக்கம் வேண்டும்..நாமும் வழியில்லாமல் ஊழலில் ஓர் ஆளாகத்தானே ஆகிப் போகிறோம் இச்சமுதாயத்தில்!

      மறுமொழி
  • 7. சீற்றத்தில் சீதை  |  2:09 பிப இல் ஏப்ரல் 11, 2011

    இந்தியர்கள் திருந்தினால், இந்தியா திருந்தும்.
    அதற்கு தான் அன்னா ஹாசாரே வந்து இருக்கிறாரே.
    நாம் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் நண்பா

    மறுமொழி
    • 8. படைப்பாளி  |  2:50 பிப இல் ஏப்ரல் 11, 2011

      ஆமாம் ஒவ்வொரு தனி மனிதனும் திருந்த வேண்டும்…!

      மறுமொழி
  • 9. ஹேமா  |  3:37 முப இல் ஏப்ரல் 16, 2011

    நம் நாடுகளின் அழகியலில் இதுவும் ஒன்றுதானே !

    மறுமொழி
    • 10. படைப்பாளி  |  8:06 முப இல் ஏப்ரல் 16, 2011

      அழகியலில் மிகவும் முக்கியமானது ..

      மறுமொழி
  • 11. Sri  |  1:23 பிப இல் மே 4, 2011

    Hats of to your words. eazhuthu vanmai miga arumai

    மறுமொழி
    • 12. படைப்பாளி  |  2:24 பிப இல் மே 4, 2011

      mikka nandri!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 158 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 183,838 hits

%d bloggers like this: