முள்ளிவாய்க்காலுடன் முடியாது!

மே 18, 2011 at 10:22 முப 6 பின்னூட்டங்கள்


இதுபோன்றொரு

நாளில்தான்

எம் சொந்தங்கள்

சோறின்றி பட்டினியாய்

உறக்கமின்றி ஊர் ஊராய்

உறவுகளை இழந்து

உரிமைகளை துறந்து

ஓய்வின்றி உழன்று

கால்கடுக்க நடந்து

கன்னி வெடிகளில் சிக்கி

பதுங்குகுழிகளில் புதைந்து

உறுப்புகள் ஆங்காங்கே

சிதறி விழுந்திட

இருக்கின்ற உயிரையாவது

எடுத்துக் கொண்டு

போவோமென

ஓடோடி வந்தனர்

இந்த உலகத்திடம்

உயிர் பிச்சை கேட்டுக்கொண்டு!

அவர்கள்

வரும் வழியெங்கும்

பிணங்களின் குவியல்.

துறந்த உயிர்களின்

துர்நாற்றம்.

முலை அறுத்து

கொல்லப்பட்ட பெண்.

இல்லாத மார்பில் பால் குடிக்க

எத்தனிக்கும் குழந்தை.

பிறப்புறுப்பில் துப்பாக்கி

துளையிட்டு

தொலைந்த பெண்போராளி.

சுமந்து பெற்ற பிள்ளை

முன்னே

ராணுவ ராட்சசன்களை

சுமந்த அம்மா.

அம்மா முன்னே

அம்மனமாக்கப்பட்ட

மகன்.

தந்தை பார்க்க

கற்பழிக்கப்பட்ட

மகள்.

உயிருடன் பிடித்து

கண்களை கட்டி

சுட்டுக் கொல்லப்பட்ட

இளைஞர்கள்.

எவ்வளவோ கத்தியும்

கேட்கவில்லை

இவ்வுலகின்

செவிட்டு செவிப்பறைகளுக்கு

எம்மினத்தின் குரல்.

எங்கேனும் பார்த்திருக்குமோ

இவ்வுலகம்

இப்படியோர் அவலம்.

முள்ளி வாய்க்காலில் முடிந்துவிட்டது

எம் வரலாறென

மூச்சு விடுகிறாயா

சிங்களனே ..

பொறுத்திரு..

உன் சிரம் கொய்யும்

காலம்

சீக்கிரம் வரப்போகிறது!

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

அ(டுத்த)றிவு தலைமுறை! காதல் நாடகம்!

6 பின்னூட்டங்கள் Add your own

  • 1. jegadeeswaran.R  |  11:33 முப இல் மே 18, 2011

    கந்தக குண்டுகளில் கருகிச் செத்த பச்சிளம் குழந்தைகளின் அலறலுக்கும், பிறந்தால் தமிழ் பேசும் என கருவறையிலேயே கல்லறையான தமிழ் குழந்தைகளின் கதறலுக்கும், கதர் சட்டைக்காரன் முதல் கடைக்கோடி துரோகிகள் வரை கழுவேற்றும் காலம் வரும்.

    அதை நோக்கியே பயணிப்போம்..

    தங்கள் கவிதை உணர்வுகளின் கொதிப்பு. அருமை.

    மறுமொழி
    • 2. படைப்பாளி  |  11:43 முப இல் மே 18, 2011

      அது ஒவ்வொரு தமிழனின் கடமை..வெல்வாம்..வாழ்வோம் சுதந்திர ஈழத்தில்!
      நன்றி நண்பரே..

      மறுமொழி
  • 3. rathnavel natarajan  |  3:44 பிப இல் மே 18, 2011

    வேதனையாக இருக்கிறது.

    மறுமொழி
    • 4. படைப்பாளி  |  8:03 பிப இல் மே 18, 2011

      என்ன செய்ய இயலாத தமிழனாகி விட்டோம்!

      மறுமொழி
  • 5. Palanivel  |  2:29 பிப இல் மே 27, 2011

    congrats….

    மறுமொழி
    • 6. படைப்பாளி  |  2:32 பிப இல் மே 27, 2011

      thank you!

      மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 159 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 177,119 hits

%d bloggers like this: