நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது வாழ்க்கை!

ஜூன் 2, 2011 at 12:17 பிப 6 பின்னூட்டங்கள்


 • பிறந்த நாட்டை விட்டு

பிரிந்து

உறவுகளை விட்டுவிட்டு

தனியனாய்

உரிமைகள் அற்று

சிதறி

எட்டு மணிநேரத்திற்கும் அதிகமாய்

எக்ஸ்ட்ரா டுயூட்டி பார்த்து

கற்பனை வாழ்வில் மட்டுமே

கனவுகளில் லயித்து

நிஜமற்ற கானல்நீராய் நீள்கிறது

எங்கள் வாழ்க்கை!

 • எனக்கொரு கனவு

கடனில் இருக்கும் வீட்டை

என் காலத்திலாவது

கட்டி மீட்டிட வேண்டும்!

 • நண்பனுக்கொரு கனவு

தன்னோடு கஷ்டம் போகட்டும்

தன் தமையன்களுக்காவது

நல்ல படிப்பை நல்கிட வேண்டும்!

 • அறைத் தோழன்னுக்கோர் கனவு

அப்பாவின் ஆப்பரேசனுக்கு

பணம் சேர்த்து

மீளாத் துயரில் இருக்கும்

குடும்பத்தை மீட்டிட வேண்டும்!

 • தோழியின் கனவு

தான் முதிர்கன்னி ஆகிவிட்ட போதும்

தன் தங்கைகளுக்கு

திருமணம் செய்து பார்த்து

மகிழ்ந்திட வேண்டும்!

 • இப்படியாய் நாங்கள்

கனவுகள் வெவ்வேறு

பணம் ஒன்றே பிரதானமாய்

எல்லோரும் வெளிநாட்டில்!

 • காய்ச்சல் வந்ததென்றால்

கஞ்சி கொடுக்க தாயில்லை.

அன்பை பகிர்வதற்கு

அருகில் என் தங்கை இல்லை.

அதிகாரம் செலுத்திட

அருகாமையில் அப்பா இல்லை.

சோகம் சுமந்தோமேன்றால்

ஆற்றுவதற்கு ஆளில்லை.

சொல்லொண்ணா துயரில்

நாங்களும் அனாதைகள்தான்.

நாடுகடந்து வாழ்வதால்

நாங்களும் அகதிகள்தான்!

 • அம்மா அழைக்கிறாள்

சாமி உன்முகம் பார்த்து

நாளாச்சு..

கண்ணுலையே நிக்குற..

வந்து காட்டிட்டு போ

உன் முகத்தைன்னு!

 • தகப்பன் சொல்கிறார்

தங்கச்சிக்கு மாப்ள

பாத்துட்டேன்..

கல்யாணத்துக்கு

பணம் பத்தல

அனுப்பி வைப்பான்னு!

 • தம்பி கேட்கிறான்

அண்ணா..நான் நடந்தே

பள்ளிக்கூடம் போறேன்

சைக்கிள் ஒன்னு

வாங்கி தாணான்னு!

 • தங்கை கேட்கிறாள்

கண்டிப்பா

என் கல்யாணத்துக்கு

வருவியான்னு!

 • முகத்தில் மலர்ச்சி காட்டி

உள்ளத்தால் அழுகின்றோம்

எப்போ விடியும்

எங்களின் வாழ்க்கையென்று!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

காதலில் கசிந்துருகுகிறது! நாழிகை பிறக்கிறது!

6 பின்னூட்டங்கள் Add your own

 • 1. rathnavel natarajan  |  2:37 பிப இல் ஜூன் 2, 2011

  அருமையான கவிதை.
  படித்தவுடன் மனசு வேதனைப்படுகிறது.

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  3:43 பிப இல் ஜூன் 2, 2011

   மிக்க நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 3. padmahari  |  3:24 பிப இல் ஜூன் 2, 2011

  யதார்த்தம் ஈவு இரக்கமின்றி சுடுகிறது! தணிக்க தண்ணீர் தேடினால் பொய்த்துச்சிரிக்கிறது கானல் நீராய் தினசரி வாழ்க்கை……எப்பொழுது எங்கள் வாழ்க்கை???

  வரிகளில் வலிகளை உயிர்பித்த கவிதைகள் பாராட்டுக்குறியவை நண்பரே!! வாழ்த்துக்கள்……

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  3:43 பிப இல் ஜூன் 2, 2011

   மிக்க நன்றி நண்பரே!!!

   மறுமொழி
 • 5. அனு(win)கனவுகள்  |  10:31 பிப இல் ஜூன் 2, 2011

  எப்படி அடுத்தவரின் வலிகளை எழுத முடிந்தது நண்பா??? வெளி நாடு மட்டுமில்லை, வேறு மாவட்டத்தில் இருக்கிறாயே அதனால் எழுதியதோ??? ஆனாலும் படித்த போது என்னைப் பற்றி சொல்லியது போல தோன்றியது…

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  11:43 முப இல் ஜூன் 3, 2011

   இருக்கலாம் தோழி..உறவுகளைப் பிரிந்து தூரத்தில் இருக்கும் வலி எல்லோருக்கும் ஒன்றுதானே!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,274 hits

%d bloggers like this: