எம்.எப்.ஹூசேனும்..இறவாப் புகழும்..!

ஜூன் 10, 2011 at 10:30 முப 20 பின்னூட்டங்கள்


 • வென்தாடியில் கிழம்

தட்டியவன்

எண்ணத்தில்

பதினாறை தொட்டவன்!

 • தளர்நடையில்

தடி பிடிக்கும் வயது

தளராத மனத்தோடு

தூரிகை பிடித்தவன்!

 • மாதுரி தீட்சித் முதல்

அனுஷ்கா சர்மா வரை

அனுபவித்து ரசிக்க

இவனிடத்தில்

இருக்கிறது இன்னும்

இளமைத்துள்ளல்!

 • இந்து கடவுளை  வரைந்தான்

பாரத மாதாவை வரைந்தான்

பகட்டு உடையின்றி

ஆடை களைந்தான்!

நிர்வாணம் இவன்

ஓவியத்தில் நிரூபணம்!

 • இவன் வரையும்

குதிரைகளில் தெரியும்

இவன் கோடுகளின்

தாண்டவம்!

கோடிகளில் கொட்டுகிறது

இவன்

கோடுகளுக்கு பணம்!

 • நாட்டின் புகழுயர்த்தி

நாயகனாய் நின்றவனை

நாட்டைவிட்டு விரட்டினர்

கேடுகெட்ட சிலகுழுக்கள்!

இல்லாத கடவுளுக்கு

ஏனடா உடையணியவில்லை என்று!

 • ஒருவேளை கலைமகள்

இருந்திருந்தால்

சினங்கொண்டு சிவந்திருப்பாள்

எனை கலைநயத்தோடு

வரைந்தவனை

உங்கள் களைக் கண்ணால்

பார்க்கிறீர்களே என்று!

 • இங்கு இருக்கும்வரை

மதிக்காது

இறந்தபின்

எங்களவர் என்று சொல்லி

எப்போதும் போலவே

இப்போதும்

மார்தட்டிக் கொள்ளப்போகிறது

இந்தியா.

நாமும் பெருமை கொள்வோம்

இனி..

எம்.எப்.ஹூசேன்

எங்கள் நாட்டவர்தான்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , .

அருகில் வராதவரை அனைவரும் தேவதைகளே! தொலைதூரத்தில் நின்றபடி!

20 பின்னூட்டங்கள் Add your own

 • 1. jsree  |  11:15 முப இல் ஜூன் 10, 2011

  no value for real(valuable thngs) heroes…ur words r so cute da…

  மறுமொழி
  • 2. படைப்பாளி  |  2:28 பிப இல் ஜூன் 10, 2011

   thank you very much!

   மறுமொழி
 • 3. Sri  |  11:16 முப இல் ஜூன் 10, 2011

  Sogam thangavilai ipo than group 1 exam la oru question ivara pathi keaturundhan manushan adhukula poitarea

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  2:29 பிப இல் ஜூன் 10, 2011

   aamaam..thannaithaane naadu kadatthik konda oviyar yaarendru..naanum yositthen…

   மறுமொழி
 • 5. அனுwin கனவுகள்  |  12:15 பிப இல் ஜூன் 10, 2011

  I expected this content from you today….

  அது கலையா இல்லை கொலையா என்று ????
  பாம்பின் கால் பாம்பு தானே அறியும்…

  கலையாக பார்த்தால் கலைதான், ஆனால் சாமானியனின் கண்களுக்கு அது கலை இல்லை நண்பா….

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  2:31 பிப இல் ஜூன் 10, 2011

   ஆமாம் தோழி..சாமானியனுக்காக அவன் வரையாமலே இருக்க இயலுமா..சமீபத்தில் ஏதோ ஓர் பத்திரிக்கையில் பிகினியில் லட்சுமி படம் பார்த்தேன்..காலம் மாறுகிறது..

   மறுமொழி
 • 7. அனுwin கனவுகள்  |  12:20 பிப இல் ஜூன் 10, 2011

  உன்னுடைய வார்த்தைகளால் வண்ணம் தீட்டி இருக்கிறாய்… அருமையான பதிவு… இந்த கலை மாமேதைக்கு….

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  2:32 பிப இல் ஜூன் 10, 2011

   மிக்க நன்றி தோழி!!!

   மறுமொழி
 • 9. durairajv  |  5:57 பிப இல் ஜூன் 10, 2011

  அழகும் ,அசிங்கமும் பார்க்கிறவர்களின் பார்வையில் தான் உள்ளது கலையென பார்ப்பவர்க்கு கலை,கொலை என பார்க்கிறவர்க்கு கொலை….
  “இந்தியாவின் பிகாசோ எம்-எப்-ஹூசேன் இனிமேல் இந்தியர்” என மார்தட்டிக் கொள்வார்கள் கலைஞன் எப்போதும் அழிவதில்லை…அவன் படைப்புகளில் கலையாக அவன் பல அவதராங்கள் எடுத்து வாழ்ந்து கொண்டு தான் இருப்பான்.உறுக்கமான பதிவு

  மறுமொழி
  • 10. படைப்பாளி  |  8:15 பிப இல் ஜூன் 10, 2011

   ஆமாம்..மிக்க நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 11. அரும்பு.ப.குமார்  |  1:24 முப இல் ஜூன் 11, 2011

  கலை கலைக்காகவா? கலை மக்களுக்காகவா? கலை கலைக்காகவே என்பவரிடம் நான் விவாதிக்கத்தயாராக இல்லை.கலை மக்களுக்காக என்பவரிடம்… எந்த மக்களுக்காக என்பதே என் கேள்வி. 90% உழைக்கும் மக்களுக்காகவா? அல்லது 10% சுரண்டும் முதலாளிக்காகவா? இப்பொழுது 10% மக்களுக்காகவே கலை பயன்படுகிறது.
  எம்.எஃப்.ஹுசைன் மிகச்சிறந்த ஒரு வணிகர். 10% க்கு பயன்பட்ட நபர்.அதற்கு கலை என்னும் பொருள் பயன்பட்டது. அவரால் கலைக்கும் ஒரு புண்ணியமுமில்லை. இந்த சமூகத்திற்கும் ஒரு புண்ணியமுமில்லை.

  கலை என்பது சமகாலத்தின் நிகழ்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு நிலைக்கண்ணாடி‍_ ஜவகர்லால் நேரு

  என்பதை புரிந்து கொள்ளுதல் இன்றைய அவசியத்தேவை.

  மறுமொழி
  • 12. படைப்பாளி  |  10:36 முப இல் ஜூன் 11, 2011

   கலை கலைக்காகவா..மக்களுக்காகவா என்பதில்லை..கலை முதலில் கலைஞனின் ஆத்மார்த்த திருப்திக்கு..அது வரையும் கலைஞனின் மனோநிலையை பொருத்தது..அதுதான் வான்கா முதல் பிக்காசோ வரை நிகழ்ந்திருக்கிறது.அவனுக்கு அது தரும் சந்தோஷம் இருக்கிறதே அதுவே அவனுக்கான சன்மானம்..அவனது கற்பனை மக்களோடும் ஒத்துப் போகும் போது,ரசனை எல்லோராலும் ரசிக்கப்படும்போது, அவன் உலகப் புகழை பெறுகிறான்..பணத்தை அள்ளுகிறான்..பின் அவனை வியாபாரி என்று நாமும் சொல்ல ஆரம்பிக்கிறோம்..எம்.எப்.ஹுசைன் ஆரம்ப கால வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாகவே இருந்திருக்கிறது..அதை வெல்ல அவனுக்கு தெரிந்த கலையை பயன்படுத்திக் கொண்டதில் ஒன்றும் தவறில்லை..மக்களுக்கான கலைஞனாக மட்டுமே வாழ்கிறேன் என்பவனை மக்களே மதிப்பதில்லை..மக்களுக்கான கலை என்பதை எந்த கோட்பாட்டின் கீழ் கொண்டு வருகிறீர்கள் என்பதை உணர இயலவில்லை..

   மறுமொழி
   • 13. அரும்பு.ப.குமார்  |  11:54 பிப இல் ஜூன் 11, 2011

    ஆத்ம திருப்திக்கு எழுதிக்கொள்வது டைரி மட்டுமே.இதை வெளிநபர்கள் படிக்க இயலாது. ஓவியம் என்பதை டைரி போல தன் வீட்டிலேயே தனக்கு மட்டுமே வைத்திருந்தால் எப்பிரச்சனையும் இல்லை.வெளிவரும் பொழுதுதான் பிரச்சனை.

    உண்மையான வரலாற்றினை கலை,இலக்கியங்களில் மட்டுமே அறியமுடியும்.இலக்கியத்தில் மக்சிம் கார்க்கியின் தாய் நாவலை படித்தால் ரஷ்யாவின் உண்மையான வரலாற்றினை அறிய முடிகிறது.அவர் அப்பொழுதுள்ள சூழலில் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.ஆனால் ஓவியத்தில் 18ம் நூற்றாண்டில் பேசப்பட்ட நவீன ஓவியம்,அருப ஓவியம் போன்றவற்றையே 21ம் நூற்றாண்டிலும் பேசிக்கொண்டிருக்கும் அவலம் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
    இக்கால வரலாற்றினை எந்த ஓவியமும் பேசவில்லை.
    இக்கால மக்களின் வரலாற்றினை எதிர் வரும் சந்ததியினருக்கு தெரிவிக்கவும், இப்பொழுது வாழும் சூழலினை மக்களுக்கு தெரிவித்து அவர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் வரையப்படும் ஓவியமே மக்களுக்கான (ஓவியக்)கலை.
    இது எம்.எஃப்.ஹுசைனிடம் மட்டுமில்லை,இப்பொழுது ஓவியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் யாரிடமும் இல்லை என்பதே உண்மை.இவர்கள் இச்சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு அதற்கு நியாயம் கற்பிப்பவர்களாக மாறிவிட்டனர்.
    பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன.தயவு செய்து மக்களுக்கு முக்கியமான,மிக அவசிமான ஓவியக்கலையினை வியாபாரமாக்கி மக்களுக்கு பயன்படாத‌ எம்.எஃப்.ஹுசைனை போற்றுதல் என்பது தேவையற்றது.
    மேலும்,
    மக்களுக்காக வரையும் கலைஞர்களை மக்கள் மதிக்கவில்லை என்று கூறிக்கொண்டு இவ்வுலக வரலாற்றினை பின்வரும் சந்ததியினருக்கு தெரிவிக்காமல் இருப்பது சுயநலத்தின் உச்சம்.

   • 14. படைப்பாளி  |  8:34 முப இல் ஜூன் 12, 2011

    கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே!

 • 15. rathnavel natarajan  |  5:58 முப இல் ஜூன் 11, 2011

  நல்ல கவிதை.

  மறுமொழி
  • 16. படைப்பாளி  |  10:37 முப இல் ஜூன் 11, 2011

   மிக்க நன்றி நண்பரே!

   மறுமொழி
 • 17. kanagaraju  |  8:42 பிப இல் ஜூன் 11, 2011

  சிறப்பான பதிவு.

  மறுமொழி
  • 18. படைப்பாளி  |  8:29 முப இல் ஜூன் 12, 2011

   மிக்க நன்றி நண்பரே!!

   மறுமொழி
 • 19. anu  |  1:22 பிப இல் ஜூன் 14, 2011

  exactly true what u’ve said in the last paragraph……

  மறுமொழி
  • 20. படைப்பாளி  |  6:16 முப இல் ஜூன் 15, 2011

   thank you friend..india irukkum varai madhikkaadhu irandhappin engal naattu manidhar engiradhu palarai!

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,745 hits

%d bloggers like this: