அவன்.. இவன்..

ஜூன் 17, 2011 at 11:57 முப 14 பின்னூட்டங்கள்


  • அன்றைக்கு ஆண்டை வீட்டின்

கொத்தடிமையாய்

அவன்!

  • இன்றைக்கு கல்வியறிவில்

மிக உயர்ந்து மதிப்புமிக்கவனாய்

சமுதாயத்தில் அவன் மகன்

இவன்!

  • அன்றைக்கு சேரிக்காரன்

என்று

ஒதுக்கப்படவனாய்

அவன்!

  • இன்றைக்கு சேற்றில்

பிறந்த செந்தாமரையாய்

ஒளிமிக்க இவன்!

  • அன்றைக்கு அவன் அப்பனை

அடேய் என்றழைத்தான்

உயர்குலத்தான் என்கிற

அவன்!

  • இன்றைக்கு அவன் மகனை

வாய்விட்டு வராத வார்த்தைகளால்

சார் என்கிறான் அவனே

இவன்!

  • பணம் இருக்கிறது

படிப்பறிவில் உயர்ந்து விட்டான்

சாதி அழிந்துவிட்டது என்கிறான்

அவன்!

  • தகுதியில் உயர்ந்தபின்னும்

தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்

இழிகுலத்தான் என்று சொல்லி

கொலைவெறியில்

இவன்!

  • தாழ்த்தப்படவன் என்றறிந்தும்

படிக்கும் போது

“மச்சி “என்று

நட்பு பாராட்டியவன்

அவன்!

  • தன் குலப்பெண்ணை

காதல் கொண்டான் என்பதற்காய்

கீழ்சாதிக்கார நாய்

என்கிறான் இப்போ

இவன்!

  • பள்ளியில் படிக்கிறான்

அவனும் இவனும்

ஒன்றாய்..

‘தீண்டாமை ஒரு பாவச்செயல்;

தீண்டாமை ஒரு பெருங்குற்றம்;

தீண்டாமை மனிதத் தன்மையற்ற செயல்.’

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , .

முதல் பிறந்தநாளில்! தெருவோர பொது சுவர்!

14 பின்னூட்டங்கள் Add your own

  • 1. sakthivel  |  12:19 பிப இல் ஜூன் 17, 2011

    பாராட்டுக்குரியது…
    உமது
    காலத்திற்கு ஏற்ப பரையேற்றுதல்
    தன்மை…

    மறுமொழி
  • 3. suganthiny  |  1:20 பிப இல் ஜூன் 17, 2011

    தங்களின் அவன் இவன் என்ற கவிதை படித்தேன் நன்றாக இருந்திச்சு.

    தகுதியில் உயர்ந்தபின்னும்
    தன்மகளை காதலிக்கிறான் என்பதற்காய்

    இழிகுலத்தான் என்று சொல்லி

    கொலைவெறியில்

    இவன்! என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்துள்ளன.

    மறுமொழி
  • 5. padmahari  |  1:44 பிப இல் ஜூன் 17, 2011

    பிரமாதம் நண்பா…..

    அருமையான கவிதை

    வாழ்த்துக்கள்!

    மறுமொழி
  • 7. Siva Prabu  |  2:45 பிப இல் ஜூன் 17, 2011

    மிக அருமையான கவிதை

    மறுமொழி
  • 9. THIRUMAVALAVAN R  |  5:29 பிப இல் ஜூன் 17, 2011

    அவன், இவன் கவிதையெல்லாம் ஒ.கே நண்பா… அந்த அவன், இவன் யாருன்னு நீ கடைசி வரை சொல்லவே இல்லையே??? கவிதை நல்லா இருந்தாலும் இப்படியெல்லாம் கேள்விக் கேட்போம்…..

    மறுமொழி
  • 11. மதுரை சரவணன்  |  11:53 பிப இல் ஜூன் 17, 2011

    avan ivan nanraaka errath thaalvinai padam pidiththuk kaattukirathu… vaalththukkal

    மறுமொழி
  • 13. rathnavel natarajan  |  2:56 பிப இல் ஜூன் 18, 2011

    நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    மறுமொழி
  • 14. jsree  |  6:41 பிப இல் ஜூன் 18, 2011

    avan evan cute natuarl realistic…manithanin vazhkai tharam marinalum, ego maruvathillai…

    மறுமொழி

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed




இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other subscribers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

முன்னணி இடுகைகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 202,580 hits