ஓர் இரவு !

ஜூன் 23, 2011 at 12:06 பிப 8 பின்னூட்டங்கள்


 • மொட்டைமாடியில்

கட்டில் போட்டு படுத்து

ஆகாயத்தின் அழகை

ரசித்தபடி

வெளிப்புற காற்றை

நுகர்ந்தபடி

ஆழ்ந்த உறக்கத்தை

அடைகிறது அவன் இரவு!

 • மாப்பிள்ளை தேடி தேடி

ஓய்ந்து,களைத்து

ஒருவழியாய் தான் எதிர்பார்த்த

வரன் விடவும் அழகாய்

அமைந்ததில்-அவன் நினைப்பில்

நீள்கிறது அவளுக்கான

கனவு நிறைந்த கலைஇரவு!

 • ஏக்கம் கொண்ட

தாக்கத்தில்

தனிமையின் இனிமையில்

எவளையோ கற்பனை செய்து

சுயத்தை இழந்தபடி

சொர்கத்தை அடைகிறது

ஒருவன் இரவு!

 •  நெடுநாட்கள் ஏக்கத்தில்

நீண்டு விட்ட பொழுதில்

தாராளமாய் காட்டிட்ட

தாசி ஒருத்தி தகதகப்பில்

தாகம் தீர தீர

தீரா மோகத்தோடு

காமத்தின் உச்சத்தில் தொடர்கிறது

அவனுக்கான களிப்பான இரவு!

 • பேய் பயத்தில்

தனியனாய் படுத்துறங்கி

பீதி மாறா மனத்துடன்

பிதற்றலோடு

எப்போ விடியும் இந்த இரவு

என்ற பயத்துடன் தொடர்கிறது

ஒருவனுக்கு திகில் இரவு!

 • நேற்று வரை நலமாய்

வளமாய் வாழ்ந்தவன்

இன்று எதிர்பாராது

மாரடைப்பால் மரணித்ததால்

தூக்கமற்று தொடர்கிறது

அவர்கள் குடும்பத்திற்கு

துக்க இரவு!

 • எத்தனை இரவு வந்தபோதும்

அவன் வாழ்வில்

அன்றுபோல் என்றுமில்லா

ஆனந்தம் கொண்ட

அந்த இரவு இனி வராது

அவனுக்கு இன்று முதலிரவு!

 • இரவு நேர கடைசிப் பேருந்தை

இழந்து விட்டவனாய்

அடுத்து என்ன செய்வதென்று

விழித்தபடி இருட்டிய இரவில்

மிரட்டுகிறது நடுநிசி இரவு!

 • பசியின் கொடுமையில்

உணவின்றி

உறக்கம் வராத கண்களை

வெறித்தபடி

இயற்கையை சபித்தபடி

நீள்கிறது பட்டினி இரவு!

 • ஒரே இரவு

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாய்!

Advertisements

Entry filed under: கவிதைகள். Tags: , , , , , , , , , , , , , , , , , , , .

ஒற்றைப் பாலின ஈர்ப்பு! கண்ணதாசனே எங்கள் கவியரசனே!!

8 பின்னூட்டங்கள் Add your own

 • 1. suganthiny  |  12:11 பிப இல் ஜூன் 23, 2011

  ரொம்ப நல்லா இருக்கு. உண்மையில் நடப்பது தானே? இன்னும் எத்தனையோ வகை இரவுகள் உள்ளன. உங்களின் ஓரிரவு பல இரவுகளாக தொடர வேண்டும் என்பது என் விருப்பம். செய்வீர்களா? ப்ளீஸ்…..

  மறுமொழி
 • 2. படைப்பாளி  |  12:20 பிப இல் ஜூன் 23, 2011

  கண்டிப்பாக எழுதுகிறேன் தோழி!நன்றி!

  மறுமொழி
 • 3. அனு-win கனவுகள்  |  12:21 பிப இல் ஜூன் 23, 2011

  அருமை நண்பா

  மறுமொழி
  • 4. படைப்பாளி  |  12:27 பிப இல் ஜூன் 23, 2011

   மிக்க நன்றி தோழி !

   மறுமொழி
 • 5. rajapandi  |  2:48 பிப இல் ஜூன் 23, 2011

  இரவின் இதனை வண்ணம் காட்டிய நண்பனுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி
  • 6. படைப்பாளி  |  3:27 பிப இல் ஜூன் 23, 2011

   நன்றி நண்பரே!!!

   மறுமொழி
 • 7. rathnavel natarajan  |  3:23 பிப இல் ஜூன் 23, 2011

  அருமையான கவிதை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி
  • 8. படைப்பாளி  |  3:27 பிப இல் ஜூன் 23, 2011

   நன்றி நண்பரே! !

   மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 157 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

 • 189,745 hits

%d bloggers like this: