Posts filed under ‘நிர்வாணம்’

நிர்வாணம்-10


கல்லூரி- இரண்டாம் ஆண்டு:

ஸ்க்ரீன் மூடப்பட்டு..அறை சாத்தப்பட்டிருக்கிறது.

மச்சி..இன்னைக்கி நியூட் (NUDE ) கிளாஸ் டா..சக தோழனின் குரல்.

பழக்கப்பட்ட வார்த்தை.எப்போ வருமென்று ஏங்க வைத்த பாடம்..

அவள் வந்து அமர்ந்தாள்..முழு அம்மணம்..

மின்விளக்கு,தன் மோகப்பார்வையால் அவளை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

சுற்றி வகுப்பு தோஸ்துகள்..பசங்க(மச்சி..ஸ் )..பொண்ணுங்க(மச்சினி..ஸ்)..

கூச்சமிகுதியில் பெண்கள்..ஆர்வமிகுதியில் ஆண்கள்..

எல்லோர் பார்வையும்..எங்கோ..எதையோ உற்று நோக்குகிறது…

அனைவரும் வார்த்தைகள் வற்றிய நிலையில் காணப்பட்டனர்.

20 பேர் ஒன்றாய் கூடி ஓர் பெண்ணை அம்மணமாய் பார்க்கும் அனுபவம் அன்று..

அதுவும்..ஆண்களும்..பெண்களும் ஒன்றாய் வேறு..

உற்சாகம் ஓர் புறமென்றாலும்..மறுபுறம் பதற்றம்..

அம்மணத்தின் அழகியல்,அனாடமி அவசியம் பற்றி ஆசிரியரின் அறிமுக வுரை..

அற்புதமான தெளிவுரை..

வரையச்சொன்னார்கள்..MODEL STUDY-யாம் .

பக்குவப்படாத மனசு..பார்த்தறியாத கண்கள்..சற்று உடல் வேர்த்தது.

இருந்தும்..கொஞ்சம்..கொஞ்சமாய்…மனதை தேற்றி..தேற்றி…கோடுகளிட்டேன்.

அம்மணம் அழகாய் என் ஓவியத் தாளில் உலாவர..

கலைத்தாய்…என்னுள் கண் விழித்தாள்..காமம் கலைந்தாள்..

அம்மணம்..அடையாளம் மாறி..நிர்வாணம் என்னுள் நிறைந்தது.

கரைசேர்கிறேன்..என்னுள் கறைப் படிந்த எண்ணங்களைக் கைவிட்டு..

மூன்றமாண்டில் சந்திப்போம்…

செப்ரெம்பர் 13, 2010 at 10:15 முப 12 பின்னூட்டங்கள்

நிர்வாணம்-9

கல்லூரி-முதலாண்டு

Picture courtesy:The Art Renewal Center

மெலிதாய்….கல்லூரிக் கனாவில் மிதந்து..மிதந்து..தீர்க்கமாய்..

கல்லூரியின் 150 வது வயதில் நுழைந்த போது என் எண்ணங்கள் வண்ணமாயின.

சென்னை மையத்திலே ஓர் சிறிய கிராமம்

கம்பீரமாய் காவல் நிற்கும் மரங்கள்

செதுக்கப் பட்ட சிற்பமாய் சிவப்பு கட்டிடம்

வயது போயும் வறட்டு கௌரவத்தில் வெள்ளை மாளிகை

சூரியன் இன்னும் சுதந்திரம் தேடும் பூமி

-இதுதான் என் கல்லூர்ரிக்கான விலாசம்.

College of Fine Arts,chennai.. By Ravages

கல்லூரி நூலகம் என் தூசுப் பட்ட உள்ளத்தை துவ(வா)ட்டிக் கொண்டிருந்தது.

புத்தகங்களின் பெரும் பகுதியை..அந்த..ச்சீ..(நிர்வாணம்)படங்களே சிறை கொண்டிருந்தன.

அந்தப்படங்களை சிறிது சிறிதாய் கிறுக்கிப் பார்ப்பேன்..ஒழித்து..ஒழித்து..

அதனைப்பற்றிய முழுமையான அறிவு,அறிதல் இல்லை அப்போ..

உணர்ந்தேன் ஓராண்டு ஓடி இருந்தது.

அடுத்து.. நிர்வாண வகுப்பில் உங்களை சந்திக்கிறேன்…

செப்ரெம்பர் 6, 2010 at 10:31 முப 4 பின்னூட்டங்கள்

நிர்வாணம்-8

என் பார்வையில் நிர்வாணம்


அம்மணம்:

என் கல்லூரி வசந்தத்திற்குள் கால்பதிக்கும் வரை…

நானும்,நிர்வாணமும் அன்னியப் பட்டவர்களாகவே அறிமுகமான ஞாபகம்.

விசால எண்ணமின்றி,சிறிய சிந்தனைகளால் சிறைப்பட்டிருந்த சகவாசம்.

கூண்டுக்குள்ளே,என்னை நானே பூட்டிக் கொண்ட நிலை.

அண்டம்,விந்துவைப் பற்றி ஆசிரியர் விளக்கியபோது,அதிர்ச்சியுற்ற ஒன்பதாம் வகுப்பு பருவம்.

அந்தப் பாடம் கூட மறைக்கப்பட்டே என்னால் படிக்கப் பட்டிருக்கிறது.

பரிச்சையில் படம் வரைந்து பாகம் குறிக்க சொன்னபோது கூட,வரையத் தெரிந்தும் தீட்ட மனசில்லாத கைகள்..

எண்ணிப்பார்க்கிறேன்..என்னைப்போல..எத்தனை தோழ தோழிகள்..ச்சீ ..என்று அவ்வகுப்பில் முகம் சுளித்தார்கள்.

அறிவியலை,ஆராயாத,ஆழமில்லாத,அக்கால நினைவுகள்..

கல்லூரிக்காலம் அடுத்த வாரம் களை கட்டும்…

ஓகஸ்ட் 30, 2010 at 10:07 முப 8 பின்னூட்டங்கள்

நிர்வாணம்-7

நிர்வாணம்-மருத்துவம்


மானுடவியலின் கட்டாயத் தேவைகளில் மருத்துவம் என்பது மதிப்பிட இயலாதது.ஒவ்வோர் மனிதனும் மருத்துவத்தை நம்பியே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை.மருத்துவம் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்துவிட்ட விசயமாகி விட்டது.

அப்படிப்பட்ட மருத்துவத்திலும் “நிர்வாணம்” என்பது நீடித்து நிற்கிறது.

உடலுறுப்புகளைப் பற்றிய விசயங்களை உள்வாங்கல் தேவையாகிறது.

காரணம்,புற உடலைப் பற்றியும்,அக உடலைப் பற்றியுமான முழுமையான அறிதல் அத்துறைக்கு அவசியம்.

கல்வியில் அவர்களுக்கு,கலந்துவிட்ட விஷயம்.படிக்க வேண்டிய அவசியமும்,பார்த்து அறிய வேண்டியதுமான கட்டாயம்.

உடலை ஆராயும்போது அவர்களுக்கு அது அசிங்கமாய் இல்லை.ஆராய்தலின் அவசியமாகிறது.

ஏனெனில்,அவர்களின் பணி மற்றும் ஆராய்தல்,அவசியமென்பது பொதுமக்களுக்கு முழுதாய் புரிகிறது.ஆகவே புறக்கணிப் பாரில்லை.

மேலும் மருத்துவசிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை,ஆராய்சியல் என பல்துறைக்கும் பயன்படவும்,பாதுகாப்பு பணி சாராம்சத்திற்கான ஆராய்ச்சியல் ஊடகமாகவும் நிர்வாண உடல்,மற்றும் அதுசார்ந்த பாடத்திட்டம் மருத்துவ உலகுக்கு உரித்தாகிறது.

-இப்படி ஓர் கட்டாயம் முன்னிறுத்தப் படுகின்ற போது நிர்வாணத்தின் அவசியம் நமக்கு தெரிகிறது.அத்தியாவாசியம் தெளிகிறது.

தொடரும் அம்மணம்..

ஓகஸ்ட் 23, 2010 at 10:14 முப 2 பின்னூட்டங்கள்

நிர்வாணம்-6

நிர்வாணம்-புகைப்படம்


இருக்கின்ற விசயத்தை இயல்பாக,நேர்த்தியாக,தரம் தந்து தருவிப்பதில் பெரும்பங்கு புகைப்படத்திற்குண்டு.புகைப்படம் என்பது தனித்தனி படப் பிரதிகளாக எடுக்கப்படுவதாகும்.

ஓர் புகைப்படத்தின் மூலமாகவே,சம்பந்தப்பட்ட விளம்பரம் அல்லது அதன் தேவையை ஒரே பிரதியில் தெளிவுப்படுத்த இயலும்.

தொடர் காட்சியமைப்புகள் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.இயக்க உருவ அவசியமும் இல்லை.

நிர்வாண அவசியம்:

புகைப்பட தேவைக்கருதி நிர்வாண மாடல்கள் பெரும்பான்மையாக புகைப்படங்களுக்கு பயன்படுத்தப் படுகின்றனர்.மேலும் காண்போரை கவர்ந்திழுக்கவும் கவர்ச்சியை உள்ளடக்கிய கருத்தை முன்வைத்தும் நிர்வாண அவசியம் நிலைபெறுகிறது.

எடுக்கப்படும் முறை:


மாடல்கள்,அவர்களின் இயல்புகள் உணர்த்தப் போகும் கருத்து ஆகியவைகளை புகைப்படக்கலைஞன் உள்வாங்கிக்கொண்டு புகைப்படம் எடுக்கிறான்.

நிர்வாண புகைப்படம் எடுக்கின்ற போது மாடல்களின் அழகியல் உணர்வுகளுக்கு சிறிதும் அபத்தமில்லாமல்,நாகரிக உலகின் (fashion ) நயத்திற்கேற்ப்பவும்,கற்பனை உணர்வுகளைக் கலந்து,கலாச்சாரங்களை சீர்குலைக்காமல்,விரசங்களை விளைவிக்காமல்,கலை உணர்வுகளை,அதன் நோக்கோடு வெளிப்படுத்தும் விதத்தில் மாடல்களை அமைத்து கையாளப் படவேண்டும்.பெரும்பாலும் அவ்வாறாகவே,பயன்படுத்தப் பட்டும் வருகின்றன.

வெளிப்படுத்தப் படும் விசயங்களின் வேகம்.

இளமையை,கவர்ச்சியாக அழகியலோடு அறிமுகம் செய்தல்.

உணர்ச்சிகளின் ஒருமித்த நோக்கம்.

காட்சியமைப்பில் கண்காணும் முறை.

நாகரிகமும் வித்தியாசமும் கலந்து நோக்கத்தை முன்னிறுத்தல்.

-இவற்றில் ஏதேனும் ஒன்றையோ,அல்லது ஒருமித்த கருத்துகளையோ கூட கலைஞன் காண்பிக்க செய்கின்றான்.

ஒழுங்கமைத்தல்(composition ):


பல புகைப்படங்கள்,நிர்வாணத்தை வெளிப்படுத்துவதில்,உருவமைத்த முறைகளில் வித்தியாசப் படுகின்றன.

நின்று,நன்கு பார்த்து சிந்தித்தாலொழிய அது நிர்வாணம் என்பதே பல சமயங்களில் யாருக்கும் தெரிவதில்லை.ஏதோ ஓர் உருவ அமைப்பு உள்ளதாக மட்டுமே உணர இயல்கிறது.

தத்தம் கற்பனை களுக்கேற்ப வித்தியாசமாக புகைப்படம் எடுக்கிறார்கள்.மார்பகங்கள் மலைகலாகின்றன.உடல் நிலப் பரப்பாகிறது.சமவெளிகளாகவும் காட்சி தருகிறது.மார்பெலும்பு புடைப்புகள்,பாலை மணல் வரிகளாகவும் வர்ணிக்க வைக்கின்றன.

சொல்லப்போனால் “எழுதப்படாதக் கவிதை” என்றே வர்ணிக்கலாம்.அத்தனை அம்சமாய் அழகியலை தன்னுள் அடக்கி வைத்திருக்கின்றன நிர்வாணப் புகைப்படங்கள்.

நிர்வாணம் வளரும்..

ஓகஸ்ட் 18, 2010 at 10:23 முப 6 பின்னூட்டங்கள்

Older Posts Newer Posts
இத்தளத்தின் இடுகைகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியினை பதிவிடவும்

Join 155 other followers

ஆக்கங்கள்

அண்மைய பதிவுகள்

விளம்பரம்

அனைத்து தகவல்களும் முறையாக Creative Common 2.5 - ஆல் காப்பிரைட் செய்யப்பட்டு வெளிவருகிறது.
Creative Commons License
my page by ennangalum,vannagalum is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 2.5 India License.
Based on a work at padaipali.wordpress.com.
Permissions beyond the scope of this license may be available at https://padaipali.wordpress.com/.

Share this blog

Bookmark and Share

விருந்தினர்கள்

Thiratti.com Tamil Blog Aggregator

Blog Stats

  • 200,117 hits

%d bloggers like this: