Posts filed under ‘புகைப்படங்கள்’
பேசும் புகைப்படங்கள் – ஒபாமா கடந்து வந்த பாதை
“we can change ” என்ற முழக்கத்தோடு அமெரிக்க அதிபர் தேர்தலில் அன்று உலகம் முழுக்க அறிமுகமான அந்த கருப்பு மனிதன்,களங்கமில்லா சிரிப்பும்,எட்டுத்திக்கும் முழங்கும் பேச்சு நடையும் அவரின் சிறப்பு..அவரை அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் நபராக அறிமுகம் செய்தபோது உலகம் முழுக்க அந்த மனிதனின் வெற்றியை அன்று உறுதி செய்திருந்தது.
அதே மனிதர் இந்த தேர்தலில் வெல்வாரா??நிச்சயம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏனையோர் மத்தியில் இருந்தாலும்,சிலரால் தோற்றுவிடவும்…
மேலும்..
தெருவோரத்தில் பேஷன் ஷோ !
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
கேட் வாக் போக
ஆளில்லை
இருந்தும் கண்டேன்
தெருவோரத்தில்
ஒரு பேஷன் ஷோ !
விளம்பர களம்!
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
ஆடம்பர
துணிக்கடை விளம்பரம்
அருகாமை
வறுமை வெளுத்து
காய்கிறது!
ஒளிர்கின்ற இந்தியாவின் இன்னொரு பக்கம் இருட்டில்!
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
- வாகனத்திற்கு
மட்டும்தானே
எனக்கில்லையே
என்று
எண்ணி இருக்குமோ
இவன் மனம்!
- குடியோ,மயக்கமோ
வறுமையோ
இயலாமையின்
இன்னொரு பக்கமோ
யாரறிவார்
இவன் நிலையை!
- ஒளிர்கின்ற இந்தியாவின்
இன்னொரு பக்கம்
இப்படித்தான் இருட்டில்!
வறுமை அடைக்கலம்!
(என் அலைபேசி ஓவியமும்,அதற்கான கிறுக்கலும்)
வறுமையுள்ள
இடத்தில்
வெறுமை மட்டுமே
அடைக்கலமாய்!